Skördeman ஸ்வீடனில் பிறந்தவர். திரைக்கதையாசிரியர், டைரக்டர், தயாரிப்பாளர். இவருடைய முதல் நாவலான Geiger மிகுந்த வரவேற்பைப் பெற்ற Espionage thriller book.
ஸ்வீடனில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியின் வீடு. Stellanக்கு எண்பத்தைந்து வயது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக முப்பது வருடங்கள் முன் பணிசெய்து மிகவும் பிரபலமானவர். அவருடைய மனைவிக்கு எழுபது வயதுக்கு மேல். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களைத் தொடும் மணவாழ்க்கை. இவர்களுக்கு இரு பெண்கள். மணமாகி குழந்தைகளுடன் இருப்பவர்கள். குழந்தைகளை தாத்தா, பாட்டி வீட்டில் விட்டுவிட்டு விடுமுறைக்கு சென்றவர்கள் இப்போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். இரு குடும்பங்களும் வீட்டைவிட்டு வெளியேறியதும் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது. மனைவி எடுத்துப் பேசுகிறார். Geiger என்ற ஒரு வார்த்தை மட்டும் போனில் சொல்லப்படுகிறது. மனைவி பலவருடங்கள் முன் ஒளித்து வைத்த துப்பாக்கியால் கணவனை தலையில் சுடுகிறாள். முதல் அத்தியாயம் முடிகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனி நான்கு Zoneகளாகப் பிரிக்கப்படுகிறது. முக்கியமாக கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி. கிழக்கு ருஷ்யாவின் வழிகாட்டுதலிலும், மேற்கு
US, UK, France போன்ற நாடுகளின் Influenceலும் மாறுகின்றன. கிழக்கு ஜெர்மனியின் அடக்குமுறை சகிக்காமல் ஏராளமானவர்கள் மேற்கு ஜெர்மனிக்கு தப்பிக்கப் பார்க்கிறார்கள். பெர்லின் சுவர் எழுப்பப்படுகிறது. Stasi என்றழைக்கப்படும் கிழக்கு ஜெர்மனியின் உளவுத்துறை ஸ்வீடனில் இருக்கும் ஒருவரை உளவாளியாக்கி கிழக்கு ஜெர்மனியில் இருந்து தப்பிக்க நினைப்பவர்களைக் குறித்த தகவல்களை சேகரிக்கிறது. நாவலில், Cold war காலத்தில் நடந்ததன் விளைவு இப்போது 2020ல் தெரியவருகிறது.
அம்மா வேலை செய்யும் பணக்காரர்கள் வீட்டில் ஒதுக்குப்புறமாக ஒருசிறு இடத்தில் தங்கிக்கொண்டு, அவர்களின் பழைய உடைகளை உடுத்திக்கொண்டு, அந்த வீட்டுப்பெண்களுடன் சிநேகம் என்றால் அது எவ்வாறு இருக்கும்? சகோதரிகள் இவளை விளையாட்டில் கூட அடிமை போல நடத்துவார்கள். ஆனால் இப்போது சகோதரிகளின் அப்பா கொலைசெய்யப் பட்டிருக்கிறார். வேலைக்காரியின் பெண் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி. கடந்த காலமும், நிகழ்காலமும் காவல்துறை அதிகாரியின் மூச்சைத் திணற வைப்பது நாவலில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.
மிகச்சிறப்பான Debut நாவல் இது. ஒரு கொலையில் பரபரப்பாக ஆரம்பிக்கும் நாவல், பலநாடுகளின் உளவுத்துறை, பயங்கரவாத அமைப்புகள், ஜெர்மனி ஒன்றிணைகையில் கிழக்கு ஜெர்மனியின் முக்கிய பொறுப்பில் இருந்தோர் பழிவாங்கப்படுதல், USSR என்ற பெரியநாட்டின் சிதறல், Cold war ஆகியவைகளோடு ஐரோப்பா மொத்தத்தையும் உலுக்கப்போகும் ஒரு பயங்கரமும் இரகசியமாக மண்ணில் புதைந்திருப்பதையும் சொல்கிறது. This is a Political- Espionage- Spell Binding thriller not to be missed.