வைஷ்ணவி பட்டேல் சிக்காகோவில் வளர்ந்தவர். சட்டக்கல்லூரி மாணவர். ஏற்கனவே சிறுகதைகள் சில எழுதிய இவரது முதல் நாவல் இந்த நூல். பாட்டி சிறுவயதில் கூறிய ராமாயணக்கதையின் கைகேயியை பற்றிய நூல்களை இவர் வருடக்கணக்கில் தேடிப் பார்த்திருக்கிறார்.
அது கிடைக்காததால் தானே எழுதினேன் என்று கூறும் இவருடைய இந்த நூல் Newyork Times Best sellersல் தொடர்ந்து வெளிவருவது Indian mythology மேல் அமெரிக்காவில் இருக்கும் ஈர்ப்பா! இந்த நூலுக்காக இவர் கற்பனைக் குதிரையை நம் ஆட்கள் போல் தட்டிவிடவில்லை. இவர் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டவற்றில் Ralph T.H.Griffithன் ஆங்கில மொழிபெயர்ப்பான வால்மீகி ராமாயணம், A.K. Ramanujanன் ராமாயணம் குறித்த மூன்று நூல்கள், Paula Richmanன் கட்டுரைத் தொகுப்பு, Velcheru Narayana Rao மற்றும் Mandakranta Boseன்ராமாயணம் குறித்த கட்டுரை நூல்கள் முதலியவை குறிப்பிடத் தக்கன. தமிழில் புதிதாக எழுத வருபவர்கள் ஒரு நூலை எழுத என்னென்ன தேவைப்படும் என்பதற்காக இதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியதாகிறது.

கைகேயி சிறுமியாக இருக்கையிலேயே அவளது தாய், தந்தையால் அற்ப காரணத்திற்காக நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள். மந்தாரை என்னும் பணிப்பெண் அவளை வளர்க்கிறாள். பதினோரு வயதில் அம்மாவை இழந்த கைகேயிக்கு, இரட்டைப்
பிறவியான சகோதரனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும், அரசரான தந்தை இவளை முழுமையாக Ignore செய்வதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மற்ற அரசகுமாரிகள் போலில்லாமல் குதிரையேற்றம், ஆயுதப்பயிற்சி முதலியவற்றை சகோதரனிடமிருந்து கற்கிறாள். ரதம் ஓட்டுவதில் அவளுக்கு இயல்பாக அமைந்த திறமையைப் பார்த்து சகோதரன் வியக்கிறான்.

கௌசல்யா, சுமித்ரா இரண்டு மனைவிகள் இருக்கையில் தசரதனுக்கு வாரிசு இல்லை என்ற காரணத்தினால் மூன்றாவது மனைவியாக கேட்கிறார்கள். கைகேயியின் சுயம்வர விருப்பம் மறுக்கப்படுகிறது. தசரதனை முதன்முதலில் சந்திக்கும் போது என் மகனே அரசருக்கு வாரிசாக ஆக வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கிறாள். குழந்தை இல்லாத காரணத்தாலோ இல்லை வேறு எதனாலோ தசரதன் ஏற்றுக்கொள்கிறான். அயோத்யாவில் ஆரம்பத்தில் கௌசல்யா, சுமித்ரா இருவரின் அணுகுமுறை மட்டுமன்றி மற்றவர்கள் எல்லோரும் நடந்து கொள்வதை கைகேயி வித்தியாசமாக உணர்கிறாள். ஆனால் தசரதன் ஒரு போருக்குச் செல்ல நினைக்கையில் கௌசல்யாவிற்கோ, சுமித்ராவிற்கோ உடன் செல்ல விருப்பமில்லை. அவர்கள் போகாமல் கைகேயி போவதால் அயோத்யாவின் சரித்திரம் மாறப்போகிறது என்று தெரிந்திருந்தால் இருவரில் ஒருவர் அவசியம் போயிருக்கக்கூடும்.

கதையில் எல்லோருமே Mythological characters என்பதால் வைஷ்ணவி புனைவின் சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கதாபாத்திரங்களைச் சித்தரித்திருக்கிறார். கதையின் நாயகி, கைகேயி, அரசியான தன் தாய் ஒரேஇரவில் அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டது போல் தன் நிலைமை ஒருபோதும் ஆகிவிடக்கூடாது என்று சிறுவயதில் இருந்தே உறுதி கொள்கிறாள். ஆணுக்குத் தான் எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல என்ற எண்ணமே அவளது செயல்களை, எதிர்காலத்தை, ஆளுமையை வடிவமைக்கிறது.

பரதனுக்கு அரசப்பதவியில் ஆசையில்லை. அண்ணன் மேலிருக்கும் நெருக்கம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. கைகேயி இது தெரிந்தும் ஏன் பரதன் அரசனாக ஆசைப்பட வேண்டும். இரண்டு வரங்கள். முதலாவது பரதன் அரசனாக வேண்டும். இரண்டாவது தசரதன் எதற்காக அவனை அரசனாக அறிவிக்கிறான் என்பது யாருக்கும் தெரியக்கூடாது. இதைத்தானே கைகேயி செய்திருக்க வேண்டும். தசரதனை யார் கேள்வி கேட்டிருக்க முடியும்? கைகேயி முட்டாள் பெண்ணல்ல. ஆனால் அவளுக்குள் இருந்த காதல் தசரதனை பலிகடாவாக மாற்ற விரும்பாமல் செய்திருக்கலாம்.

எந்த ராமாயணத்திலும் கைகேயி சலனங்கள் நிறைந்த பெண்மணி. அதே நேரத்தில் இராமாயணத்தில் மிக சுவாரசியமான கதாபாத்திரங்களில் ஒருவர்.
இந்த நாவல் முழுக்கவே கைகேயியின் பார்வையில் எழுதப்பட்டது. நிறைய ஆய்வு செய்திருக்கிறார் வைஷ்ணவி. அங்கங்கே
மாற்றங்களும் செய்திருக்கிறார். இந்த நாவலை Retelling of Indian mythology with a feminist view point என்றும் சொல்லலாம். ராமாயணத்தைப் படிக்காத வெளிநாட்டவர்கள் பலரும் இதற்கு 5 star rating கொடுத்திருப்பது முக்கியமான விஷயம். வைஷ்ணவி அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது இதை எளிதாக்கி இருக்கக்கூடும், இருப்பினும் கிட்டத்தட்ட ஐநூறு பக்கங்கள் கொண்ட, அவர்கள் அறிந்திராத Epic பற்றிய கதை Best seller listல் இருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. வைஷ்ணவியின் முதல் நாவல் இது, ஏப்ரல் 26, 2022ல் வெளியாகியது. உண்மையில் தசரதன் கைகேயிக்கு கொடுத்த சத்தியத்தில் இருந்தே எல்லாம் ஆரம்பிக்கிறது ஆனால் மாற்றாந்தாய் மேல் பழி போடுவது என்பது எல்லோருக்கும் எளிதாகிப்போனது. கைகேயியின் கதை என்பதால் ராமன், from old school of thought
என்பதை நாவலில் பல இடங்களிலும் அழுத்தமாகச் சொல்ல முடிகிறது. A stunning debut.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s