Cohen அட்லாண்டிக்சிட்டியில் பிறந்தவர். நியூயார்க்கில் வசிப்பவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்பு முதலியவற்றை ஏற்கனவே வெளியிட்டுள்ள
Cohen 2017ன் சிறந்த இளம் அமெரிக்க எழுத்தாளர் விருதைப் பெற்றவர். இவருடைய Book of Numbers பெரும் வரவேற்பைப் பெற்ற நாவல். இந்த நூல் 2022க்கான புலிட்சர் விருதைப் பெற்றுள்ளது.

Benjamin Netanyahu இஸ்ரேலில் அதிக வருடங்கள் பிரதமமந்திரியாக இருந்தவர் மட்டுமல்ல, இஸ்ரேல் என்ற நாடு உருவாகி அதில் பிறந்த முதல் பிரதமரும் அவரே. இந்த நாவல் அவருடைய அப்பா, அமெரிக்காவின் ஒரு கற்பனை பல்கலையில் வேலைக்கு வருவதற்கு முன் ஆரம்பிக்கிறது. 1959ல் ஆரம்பிக்கும் இந்த நாவலை, Jewish Campus Novel என்றும் Historical Fantasy என்றும் வகைமைப்படுத்தலாம். Harold Bloom, Cohenஐ அழைத்து, Benjaminன் அப்பா Ben Zion மனைவி, மூன்று குழந்தைகளுடன் வேலை தேடி வந்ததையும், அவர்கள் வீட்டை நாசமாக்கிச் சென்றதையும் சொன்னதை வைத்து (நாவலின் கடைசியில் Bloomஉடனான சந்திப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.) Cohen புனைவாக எழுதிய நூல் இது.

1930 ஐயும் 2020ஐயும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மக்கள் தொகை வளர்ச்சியில்
1930ஐவிடக் குறைவாக இருப்பவர்கள் யூதர்கள். ஒரே காரணம் அவர்கள் வரலாற்றின் தவறான பக்கத்தில் இருந்தது. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா அதிக அளவில் யூதர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு சென்ற யூதர்களில் பலர் கிருத்துவமதத்தைத் தழுவி விட்டார்கள். யூதர்களின் Family tree அம்மாவின் வழி செல்வது. அம்மா வேறு மதத்தவரை மணந்தால் பிறக்கும் பிள்ளைகள் யூதர்கள் அல்லர். இந்தத் தகவல்களின் பின்னணியில் இந்த நாவலை அணுக வேண்டும்.

Corbin பல்கலையில் பணிபுரியும் Blum அந்த ஊரில் இரண்டாம் உலகப்போருக்கு முன் வந்த முதல் யூதர், அந்தப் பல்கலையின் ஒரே யூதர். அவருடைய தந்தை யூதநம்பிக்கைகளில் மூழ்கியவர். Blum அவ்வளவாக நம்பிக்கை இல்லாது அமெரிக்கக் கலாச்சாரத்தைத் தழுவியவர். அவர் மகள் Judy முழுஅமெரிக்கன். இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் Ben Zion என்ற யூதகுடும்பத்தினரின் நம்பிக்கைகள், பழக்கங்கள், கலாச்சாரம் எல்லாமே வேறு.
அதனால் ஏற்படும் குழப்பங்களே இந்த நாவல். முழுமையான யூதர்கள் அமெரிக்காவை வித்தியாசமான நாடாக நினைப்பதும், அமெரிக்கர்கள் இவர்களை வித்தியாசமானவர்களாக நினைப்பதும் நடக்கிறது.

Judy இரண்டாம் தலைமுறை யூதக்குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் தனது பெரியமூக்கை வெறுப்பது, அவள் எழுதிய கட்டுரையை திருத்தும் அப்பாவின் மீதுவைக்கும் விமர்சனங்கள், பெற்றோர் இல்லாத போது தன்னைவிட வயது குறைவானவனுடன் Sex வைத்துக் கொள்வது என்று எல்லாவிதத்திலும் அமெரிக்கக் கலாச்சாரத்தைக் கடைபிடிப்பவள்.

Ben Zionன் நீண்ட உரை ஒரு விசயத்தை வலியுறுத்துகிறது, புதிதாக கிருத்துவர்கள் ஆன யூதர்கள் எல்லோரும் தாய்மதத்திற்குத் திரும்ப மதம் மாறவேண்டும். Ben Zion,
medieval வரலாற்று ஆசிரியர் மட்டுமல்ல, தீவிரமான Zionist. ஆகவே இந்த நாவல் உண்மையையும், கற்பனையையும் இனம் கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு கலந்து எழுதப்பட்டிருக்கிறது.

முதல் பாராவிலேயே Blum தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, நான் யூதவரலாற்று ஆசிரியர், யூதர்களுக்கான வரலாற்று ஆசிரியரில்லை என்பதும், நான் வரலாற்று ஆசிரியன், சிலகாலத்தில் வரலாறு ஆகிவிடுவேன் (இறப்பது) என்பதும் படிப்பவர்களை சுதாரிப்பான வாசிப்புக்குத் தயார் செய்கிறது. கவனமான வாசிப்பையும் , சற்றே இஸ்ரேல் மற்றும் யூதர்களின் பின்னணியும் புரிந்தவர்கள் மட்டுமே ரசிக்கக்கூடியதும், எளிய வாசிப்புக்கு உகந்ததுமில்லாத நாவல்.

நாவல் மிகமிக நுட்பமாக யூதர்களின் அடையாளத்தை குறிப்பாக அமெரிக்க யூதர்களின் அடையாளத்தைத் தேடுவதைச் சொல்கிறது. Antisemitism உலகத்திலேயே அமெரிக்காவில் தான் இன்றும் அதிகம் உள்ளது. இப்போது யூதர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு கிருத்துவமதத்தைத் தழுவினர் என்ற கூற்று கேள்விக்குரியதாகிறது. Modern Novel writing, Subtleness, Historical facts என்பதெல்லாம் சேர்த்து மிகமிகத் திறமைவாய்ந்த எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவல் இது. Joshua Cohen என்ற பெயரை இனி பல விருதுகளில் கண்டிப்பாகக் கேட்கப் போகிறோம். Serious readers தவறவே விடக்கூடாத நாவல் இது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s