Claudia அர்ஜென்டினாலைச் சேர்ந்த எழுத்தாளர், தொலைக்காட்சிக்கு திரைக்கதை எழுதுபவர். இவர் பல விருதுகளைப் பெற்றவர், பல கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அர்ஜென்டினாவின் மிகப்பிரபலமான எழுத்தாளர். இந்த நாவல் 2022 புக்கர் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த நூல்களில் ஒன்று.

அர்ஜென்டினாவில் இருந்து Crime Fictions ஏராளமாக வருகின்றன. இந்த நாவலே கூட Detective Fiction. இதிலிருக்கும் Religious ideology இதற்கு இலக்கிய அந்தஸ்தை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே நாம் திரில்லர்களை இலக்கிய வகைமையில் சேர்ப்பதில்லை. இன்னொரு வகையில் சொன்னால் அந்தத் தகுதியை அடையும் திரில்லர்கள் இன்னும் எழுதப்படவில்லை. Gothic thrillers ஆன Frankestin, Jane Eyre, Mystery Thriller ஆன The Name of the Rose Crime Thriller ஆன And Then There Were None போன்றவை Classicsல் எப்போதோ சேர்க்கப்பட்டுவிட்டன.

Abortion கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரானது. அர்ஜென்டினா போன்ற முன்னேறிய நாட்டில் டிசம்பர் 2020ல் தான் இது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது.
கருச்சிதைவு செய்து கொள்வது இந்த நாவலில் முக்கியபங்கு வகிக்கிறது. Abortion செய்வதும், செய்யாததும் பெண்ணின் உரிமை, அதில் மதம் எப்படி கருத்து சொல்ல முடியும்? நாவல், பெண்ணின் உடல் என்ற கருத்தியலை மூன்று பெண்களின் மூலம் அணுகுகிறது. ஒன்று பார்கின்ஸன் பாதித்த உடல். நோய் உடலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அந்தப் பெண்ணை அவள் விருப்பத்திற்கு வாழவிடாது செய்கிறது. தற்கொலையும், ,கருச்சிதைவும் கத்தோலிக்க மதத்திற்கு எதிரானது என்பதால் இரண்டு பெண்கள் அவதியுறுகிறார்கள்.

அம்மா, மகள் உறவு Natural love and hatredness
இரண்டின் ஆழத்திற்கும் செல்கிறது. கழிவறையில் மகள் உதவி இல்லாது கழிக்க முடியாத அம்மா, ஒவ்வொன்றிற்கும் மகள் முழுநேர தாதியாக இருந்தாக வேண்டும், வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ள வசதி இல்லை எனும்போது விரக்தியடைதல் எந்த உறவிலும் தவிர்க்க முடியாது. மகள் இல்லை என்று ஆனபின் மாத்திரை போட்டால் மட்டுமே சில மணிநேரம் கைகாலை அசைக்க முடியும் என்ற நிலைமையில் இருக்கும் அம்மா, தினம் திட்டிக்கொண்டாவது அவள் உயிருடன் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறாள்.

எந்நேரமும் எச்சில் ஒழுக, கால்நகங்கள் பூசணம்பூத்து, துர்க்கந்தம் உடலெங்கும் வீச
இருக்கும் அம்மாவை, அழகுநிலையத்திற்கு அனுப்பிய மகளிடம், அலங்கரிக்கப்பட்டதைக் காட்டுவதற்கு வீடுவரும் அம்மாவிற்கு அவள் தேவாலயத்தில் மணி தொங்கும் கயிற்றில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி வருகிறது. மகளுக்குச் சிறுவயதில் இருந்தே மழை பெய்தால் இடி மேலே விழும் என்ற பயம். அன்று மழைநாள். அவள் மழை பயத்தை மீறி வெளியே போயிருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் காவல்துறையில் இருந்து வேறுயாருமே அம்மா இந்தக் காரணத்தைச் சொன்னால் ஏற்றுக்கொள்ளவில்லை. கொலையாளியைக் கண்டுபிடிக்கக் கட்டுப்பாடில்லாத உடலைச் சுமந்து கொண்டு
இருபதுவருடம் முன்பு மகள் உதவிசெய்த பெண்ணிடம் கடனைத்தீர்க்கக் கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவ அம்மா செல்கிறாள். இது Whodunit கதை என்று நினைத்தால் உங்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

போர்ஹேல், கோத்ஸார் இவர்களுக்குப் பின் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட அர்ஜென்டினா எழுத்தாளர் Claudia. ஏராளமான பெண்ணியல் அமைப்புகளில் இருப்பவர். இவரை Crime fiction writer என்று சுருக்குவது அறியாமை. Crime ஒரு Plot என்றால் அதனைச்சுற்றிப் பலஇழைகளைப் பின்னிக்கொண்டே போகிறார். இந்த நூலை
வாசித்து முடிக்க மிகவும் சிரமமாக இருந்தது.
எளிமையான மொழி, இருநூறு பக்கங்களுக்குள் எழுதப்பட்ட நாவல், ஆனால் பொங்கிவரும் உணர்வைக் கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்து இதைப் படிப்பது கடினம். ஒரே Sittingல் படிக்கும் நீளம்கொண்ட நாவலுக்கு பத்துக்கும் மேற்பட்ட இடைவெளிகள் எடுத்துக் கொண்டேன். திறமையான, செறிவான மொழிபெயர்ப்பு. புக்கர் விருதைப் பெறாமல் போனாலும் என்னுள் பலகாலம் தங்கியிருக்கப் போகும் நாவல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s