நார்மன் இந்தோனேஷியாவில் 1990ல் பிறந்தவர். கவிதைகளில் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தவர். ஒரு கவிதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது.
இவருடைய முதல் புனைவு நூலான இந்த சிறுகதைத் தொகுப்பு 2022 புக்கர் நெடும்பட்டியலில் வந்துள்ளது.

இந்தத் தொகுப்பு Queer Fiction. அநேகமான கதைகளில் ஆண்கள் ஆண்களை விரும்புகிறார்கள், பிரிகிறார்கள், மரணிக்கிறார்கள். இந்தோனேஷியாவில், எண்பது சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லீம் மக்கள் தொகை இருக்கும் தேசத்தில், ஆண்பெண் உறவே வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. எனவே Homosexuality, Cross dressing எல்லாமே மதரீதியாக, சமூகரீதியாகக் கடும் எதிர்ப்பை ஏற்படுத்துகின்றன. அடிப்படையில் ஓரினச் சேர்க்கையாளரான எழுத்தாளர் இந்த நூலின் மூலம் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் புனைவாகச் சொல்கிறார்.

ஆசியநாடுகளில் ஒவ்வொன்றுக்கும் கலாச்சாரம், பழக்கவழக்கங்களில் ஏதோ மெல்லிய தொடர்பு இருக்கின்றது. இந்தோனேஷியாவும் விதிவிலக்கல்ல. மூத்த மகனின் பெயருடன் அம்மா, அப்பாவைச் சேர்த்து அவன் பெற்றோரைக் கூப்பிடுவது, துக்கத்திற்கு தலைமுடியை ஒட்ட வெட்டிக்கொள்வது (நாம் மொட்டை அடிக்கிறோம்), கடல்நீரில் நடந்து பாவத்தைத் தொலைப்பது, உறவினரை இழந்தவருக்கு சாப்பாடு கொடுப்பது என்பது போல் பல ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது.

Happy Stories என்ற தலைப்பு இருந்தாலும் ஒரு Melancholy கதைகள் முழுதும் எதிரொலிப்பது போல் தோன்றுகிறது. ஒருவேளை எல்லாமே ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரங்களின் பெருமூச்சு காரணமாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் தாய் தன் மகனை அதிகமாக நேசிப்பது ஆனால் அவன் Gayஆக இருப்பதை வெறுப்பது நடக்கிறது. ஒருவகையில் எல்லாக் கதைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவைதான். Sister Tulaவின் கதை தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை. கன்னியாஸ்திரிக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் எந்தவழியைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், பயணத்தின் இறுதிக்கட்டங்களில், தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் என்றே தோன்றுகிறது.

Batak and Christian cultureஐக் கலந்து எழுதப்பட்ட கதைகள். அநேகமான கதாபாத்திரங்கள் Complex characters. எந்தக் கதையிலும் சமூகம் ஒருபாலின உறவை ஏற்றுக் கொள்ளவில்லை. சம்பந்தப்பட்டவர்களே கூட அவர்கள் இறந்தபின்னரே துக்கப்படுகிறார்கள். கவிஞராகிய மூல ஆசிரியரின் Rhythm ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வந்திருக்கிறது. இந்தோனேஷியா இலக்கியத்திற்கு இந்தநூல் புக்கரில் நுழைந்ததன் மூலம் ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s