Kawakamiன் ‘All the Lovers in the Night’ நாவலில் பள்ளி இறுதியில் படிக்கும் பெண், உடன் படிக்கும் பையன் அழைத்தான் என்று அவன் வீட்டுக்குச் செல்கிறாள். சிறியதான அவனுடைய அறையில், அருகருகே அமர்ந்திருக்கையில், வாயிலிருந்து துர்கந்தம் அவனுடையதா இல்லை தன்னுடையதா என்பது தெரியவில்லை என்று யோசிக்கிறாள். மேலே விழுந்து அவளைக் கீழே தள்ளுகிறான். இவளுக்கு அதை எப்படி எதிர்கொள்வது தெரியவில்லை. மெல்லிய Noவை அவன் கண்டுகொள்வதேயில்லை. இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் தமிழில் ஒரு கதையைப் படித்தேன். அதில் வரும் பெண்ணின் வாயில் மல்லிகை மணம் வந்ததாக எழுத்தாளர் சொல்லியிருந்தார்.

ஜப்பானில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்று அநேக நாடுகளில் எழுதுபவர்கள் மட்டுமல்ல வாசிப்பவர்களிலும் அதிக சதவீதம் பெண்கள். Bronte சகோதரிகள் மூவருமே இன்றும் நாம் தேடிப்படிக்கும் கிளாசிக்குகளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே எழுதி விட்டார்கள். தொடர்ந்த பல பெண்களது எழுத்து பல பரிமாணங்களைக் கடந்து இன்று புக்கர் போன்ற உயரிய விருதுகளின் பட்டியலில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் இடம்பெறுகிறார்கள். Handmaids Tale போன்ற கதையை ஒரு ஆணால் எழுதுவது கடினம்.

தமிழில் serious writing எழுதுவதில் தொண்ணூறு சதவீதத்திற்கு மேல் ஆண்கள். சமூகஊடகங்கள், தகவல் தொடர்பு போன்றவற்றின் அபரிதமான வளர்ச்சிக்கு பின்னரும் இங்கே பாலியலுறவுகள் ………. ஜார் மன்னர் காலத்து ரஷ்யா போல் பெரும்பான்மையினர் வறட்சியில் திரிவதாக இருக்கிறது. அதிகப்பழக்கம் இல்லாத பெண்ணிடம் டின்னருக்குப் போகலாமா என்று கேட்டு, அவளுக்கு விருப்பமில்லை என்றால், அடுத்து அவள் பேசுவதை நிறுத்திவிடும் அபாயம். இந்த சூழலில் ஆணுக்கு பெண் என்றால் உடல்தான் முதலில் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாது. ஆழ்மனதின் ஏக்கங்கள் எழுத்தில் எப்படியாயினும் வெளிப்பட்டே தீரும். தி.ஜாவின் பெண்கள் அப்படித்தான் இருப்பேன் என்று அழுத்தமாகச் சொன்னார்கள், ஜெயகாந்தனின் பெண்களில் பலர் கேள்வி கேட்டார்கள், ஆதவனின் பெண்கள் ஆபத்தானவர்கள், இ.பா வின் பெண்களில் பலரும் அறிவார்ந்த விசயங்களைப் பேசினார்கள். ஆனால் மொத்தத் தமிழ் இலக்கிய உலகத்தில் இது போன்றவை கரைக்கப்பட்ட பெருங்காயம். தமிழில் பெண்கள் பரவலாக எழுதவந்து ஆண்பெண் எழுத்தாளர்கள் சதவீதம் என்றேனும் சமமாக மாறும் என்றால் பெண்ணுடல் கதைகளை விட்டுத் தரையில் நடக்க ஆரம்பிக்கும்.

நன்றி: எழுத்தாளர் கண்மணியின் உரையாடலுக்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s