நாவல் எழுதுவது எப்படி என்று MFA போல் நமக்கு பயிற்றுவிக்கும் அமைப்புகள் இல்லை. இருக்கும் கல்லூரிகள் Fine arts கற்பித்தாலும் அதிலிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இங்கே சொல்லித் தருகிறேன் என்று வருபவர்களுக்கே, சொல்லித் தர வேண்டியது ஏராளமாக இருக்கிறது. Chimamanda Adichie போன்றவர்கள் எழுத்தாளர் பட்டறைகள் நடத்துகிறார்கள். அவை போன்றவை
வளரும் எழுத்தாளர் தன் திறமையைப் பட்டை தீட்டிக்கொள்ள உதவலாம். ஆனால்
எழுத்து என்பது ஒருவரின் உள்ளிருந்து வருவது, அதை யாரும் உருவாக்க முடியாது.

முதலில் Idea என்பதை சிறந்ததாக உருவாக்கி விட்டால் அது திருட்டுத்தனமாக வாரஇறுதியில் வெளியூர் வந்த காதலன் போல உறங்கவே விடாது. திருடன் ஒரு வீட்டில் திருடவருகையில் சத்தம்கேட்டு அலமாரிக்குள் ஒளிந்து கொள்கிறான். அதன் இடைவெளியில் பார்க்கையில் அமெரிக்க ஜனாதிபதி ஒரு கொலையைச் செய்வதைப் பார்த்து விடுகிறான். இது ஒரு Idea மட்டுமே. இனிமேல் உயிர் பிழைக்க அவன் ஓடப்போவது அவனது பாடு. சம்பவங்கள் அவன் எவ்வளவு ஓடுகிறானோ அதற்கேற்ப விரியப் போகிறது ( Absolute Power by David Baldacci)

அடுத்ததாக கதாபாத்திரங்கள். கள்ளஉறவு வைத்துக் கொண்டு, யதேச்சையாகக் கொலைசெய்யும் அமெரிக்க ஜனாதிபதியை விட சுவாரசியமான கதாபாத்திரம் யாருக்குக் கிடைக்கும்? ஜனாதிபதி யானை. திருடன் சுண்டெலி. Stephen King சுவாரசியமான கதாபாத்திரங்களைக் கஷ்டமான சூழ்நிலைகளில் கொண்டு போய் நிறுத்துங்கள். தொடர்ந்து எழுதுகையில் அவர்களுக்கோ, உங்களுக்கோ தப்பிக்க வழிபிறக்கும் என்றது உண்மை. அவசியம் நேர்ந்தாலொழிய கதாபாத்திரங்களின் பெயர்களை ஒரே மாதிரி எழுதாதீர்கள். பாலா, மாலா என்றால் Identical twinsஐத் திருமணம் செய்த கணவன் வேண்டுமென்றே குழம்புவது போல வாசகர்கள் குழம்புவார்கள். கதாபாத்திரத்தின் முழுச்சித்திரத்தை மனதில் வரைந்து கொள்ளுங்கள். தங்கம்மாள் தற்கொலைதான் செய்ய வேண்டும். கணவர் கொலை செய்தால் தெலுங்குப்படம், ,Blood cancer வந்து இறந்தால் தமிழ்ப்படம் என்றாகிவிடும். கணவனுக்கு Viagra கொடுக்கலாமா என்ற சிந்தனையை முளையிலேயே கிள்ளிவிடுங்கள். தங்கம்மாள் துணைக்கதாபாத்திரம் தான். அவள் அப்புறம் பாபுவிடமிருந்து கதையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிவிடுவாள்.

அடுத்தது Ideaவை Storyline அல்லது Plot ஆக மாற்றுவது. நல்ல Plot பாதிக்கிணறு தாண்ட வைத்துவிடும். யாத்வஷேமில் யூதப்பெண் இங்கேயே மணமுடித்துத் தங்கிவிடுவதால் அவள் பின்னாளில் வேர்களைத் தேடிப் பலநாடுகள் போவது இயல்பான ஒன்றாகி விடுகிறது. Plot என்பது ஒரு ஆரம்பம், ஒரு சம்பவம் எல்லாவற்றையும் மாற்றுவது, அது வளர்வது, பின் நல்லவிதமாகவோ இல்லை கெட்டவிதமாகவோ முடிவது என்பது பாரம்பரிய நாவல் பாணி.

இத்தனையும் சேர்த்தபிறகு நாவலுக்கான ஆய்வு என்பது மீதிக்கிணற்றைத் தாண்டுவது. முழுக்கவே உங்களுக்கு சொந்த அனுபவம் இல்லாவிட்டால் ஆய்வு என்பது இன்றியமையாதது. பெயர் குறிப்பிட விரும்பவில்லை. நிறையப்பேர் கேலிக்காளாவது இந்த விசயத்தில் தான். மேலைநாடுகளில் Research assistants என்பவர்களை நாவலுக்காக வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். இங்கே அது பொருளாதாரரீதியில் பலருக்கு முடியாது.
முப்பத்தி மூன்று வயதாகிவிட்டது, இன்னும் இரண்டு வருடங்களில் கருவுறா விட்டால் பின் சிரமம் என்பது போல் காலக்கட்டுப்பாடு எதிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஆய்வு முடியவில்லை என்றால் இந்த வருடம் நூலில்லை, அடுத்த வருடமும் சென்னை புத்தகக் கண்காட்சி கண்டிப்பாக வரும்.

Climax, Ending, முடிவு என்பது மிக முக்கியம். நூலை முடித்தவுடன் பலர் யோசிப்பது முடிவை வைத்துத்தான். திரில்லர் நூல்களில் பாதிக்கு மேல் மோசமான முடிவுகளைக் கொண்டிருப்பது எழுத்தாளர்கள் அவர்கள் ஏற்படுத்திய சுழலில் அவர்களே சிக்கிக் கொள்வது தான்.
அடுத்து வருவதை Irving Wallaceன் The Second Lady வாசிக்க எண்ணமிருப்பவர்கள் படிக்க வேண்டாம். SPOILER ALERT. ரஷ்யா அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி போன்றே தோற்ற ஒற்றுமையுடன் ஒரு உளவாளியை அனுப்பி, அசல் மனைவியைக் கடத்திவிடுகிறது. கடைசியில் ஒருவர் உயிரிழக்கிறார். இறந்தது அசலா இல்லை போலியா என்பது வாசகர்களுக்கும் தெரியாது, Wallaceக்கும் தெரியாது.

கடைசியாக, ஒரு குட்டிக்கதை கூட தன் வாழ்க்கை முழுதும் எழுதாதவன்,, நாவல் எழுதுவது எப்படி என்று சொல்வதைப் பொருட்படுத்த வேண்டுமா, வேண்டாமா என முடிவுசெய்துகொள்வது உங்கள் பொறுப்பு.

One thought on “நாவல்

  1. நல்லாருக்கு சேர். ஒரு சிறந்த வாசகன், ஒரு சிறந்த விமர்சகனாகவும் இருப்பான் என்பதை ஒவ்வொரு தடவையும் காட்டிவிடுகிறீர்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s