அட்வுட், அகதா கிறிஸ்டி போன்ற மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களையே வாசிப்பவரில் 89% பெண்கள், 11% ஆண்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. மேலைநாடுகளில் அதிகம் வாசிப்பது பெண்களே என்று பல புள்ளிவிவரங்கள் நிரூபித்திருக்கின்றன. ஆனால் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களையே பதினோரு சதவீத ஆண்களே படிக்கிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பெண்கள் எழுதுவதைப் பெரும்பாலான ஆண்கள் படிக்க விரும்புவதில்லை என்ற முடிவிற்கே வரவேண்டியதாகிறது. அதேவேளையில் பெண்கள் எழுத்தாளரின் பாலினம் பார்த்துப் படிப்பதில்லை என்பதும் உறுதியாகிறது. மேலைநாடுகளில் ஆண்கள் பெண்கள் பெயரில் பெரும்பாலும் எழுதுவதில்லை. Lars Kepler என்ற புனைப்பெயர் ஆண் பெயராக இருந்தாலும் எழுதுவது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து. Carmen Mola என்று பெண் பெயரில் எழுதும் ஸ்பானிஸ் எழுத்தாளர் பெயரில் உண்மையில் மூன்று ஆண்கள் சேர்ந்து எழுதுவது என்பது, அவர்கள் நூலுக்கு மில்லியன் ஈரோ பரிசு கிடைத்ததும் வெளிவந்தது. ஆனால் இதெல்லாம் விதிவிலக்குகள்.

தமிழ்நாட்டில் முகநூலை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பெண்கள் பதிவுகளை அதிகம் படிப்பது ஆண்கள். சின்ன விசயமோ, பெரியதோ எல்வற்றிற்கும் ஆலோசனை சொல்ல நூற்றுக்கணக்கில் ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால் அச்சு நூல்களில் ரமணி சந்திரன் போன்ற புகழ்மிக்க எழுத்தாளர்களையும் பெரும்பாலும் படிப்பது பெண்களே. அம்பை போன்ற எழுத்தாளர்களை வாசிப்பது அநேகமாக பாதிப்பாதி சதவீதமாக இருக்கலாம். இங்கே எதையும் வைத்து முடிவுக்கு வரமுடிவதில்லை. என்னிடம் பேசும் பலர், ஒருகாலத்தில் நானும் இதுபோல் விழுந்து விழுந்து படித்தேன் என்கிறார்கள். அவர்கள் எல்லாம் மாஜிவாசகர்கள் என்பதால் நாம் கணக்கெடுப்பில் அவர்களைச் சேர்ப்பதற்கில்லை. ஆண்கள் எழுதும் கதைகளை இடதுகை ஆட்காட்டிவிரலால் ஒதுக்கிவிட்டு, பெண்கள் கதை எழுதினால், கதையில் மேகலா மூன்று முறை குளிக்கிறாள் என்பது போன்ற புள்ளிவிவரங்களுடன் 360 Degree விமர்சனம் செய்யும் விமர்சகர்களின் நோக்கம் வாசிப்பது இல்லையென்றாலும் அவர்களும் வாசகர்கள் பட்டியலிலேயே வருகிறார்கள்.
இத்தனை குழப்பங்களுக்கிடையே ஆண்பெண் சதவீதத்தைக் கண்டுபிடிப்பது இங்கே கடினம்.

Harry Porterன் நாவல்கள் வெளியீட்டுக்கு வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். மற்ற நூல்களை ஒப்பிடுகையில் இவற்றின் விலையும் அதிகம். J. K. Rowlingக்கு மட்டுமல்ல, Stephen King, John Grisham போன்ற பல Popular writersன் நூல்களை முதல்நாளிலேயே வாங்கக் கும்பல் கூடுகிறது. எழுத்தாளர்கள் நாடுவிட்டு நாடுகள் Book Promotionக்குப் போகிறார்கள். இங்கே எந்த எழுத்தாளருக்காவது Book Release dayக்கு கும்பல் கூடியிருக்கிறதா? புத்தகக்கண்காட்சி கும்பல் ஒரு சடங்கு, அதை விட்டுவிடுவோம். இன்று பேசுகையில் பதிப்பாளர் ஒருவர், மொழிபெயர்ப்பு நூல்கள் முன்னூற்று ஐம்பது புத்தகங்கள் விற்றால் அது நல்ல விற்பனை என்றார். Black Label ஒரு பெக் தொள்ளாயிரம் என்று சொன்ன பாரில், பார் என்றால் கொஞ்சம் கூடுதல் தான், அதைப் பார்த்தால் ஒன்றும் செய்யமுடியாது என்று சொன்ன அதே நண்பர் தான், நான் வாங்கிய ஆங்கிலநூலின் விலையைப் பார்த்து இவ்வளவா என்றார் முகத்தில் உண்மையான அதிர்ச்சியுடன். ஆம், ஒன்றும் செய்வதற்கில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s