வானத்தின் பெயர் தான் வானம் – பிரபு தர்மராஜ்:
தமிழ்க்கதைகள் உலகம் முழுக்கப் பறக்கின்றன. இதில் சிங்கப்பூர். ஆனால் சித்துராஜ், ஹேமா,லதா, ரமா போன்றவர்கள்
காட்டும் சிங்கப்பூர் அல்ல இது. 12 சிங்கப்பூர் டாலர் செலவில் (இந்தியாவில் India kings Gold richன் விலையையே எடுத்துக் கொண்டு இன்றைய சிங்கப்பூர் டாலர் விலைக்கு மாற்றி இருக்கிறேன். சிங்கப்பூரில் India Kings பாக்கெட் பத்து டாலர் என்றால் இந்தக் கணக்கு தவறு). பெண்கள் சிங்கப்பூரில் மலிவாகக் கிடைக்கிறார்களாம். மன்டோவின் விபச்சாரிகளை மையமாக வைத்த கதைகளின் தொகுப்பே தனியாக இருக்கிறது. Chekovஆல் எப்படி A Nervous Breakdown போன்ற கதையை எழுத முடிந்தது?
தமிழில் பெரும்பாலோர் எழுதும் சிறுகதைகள், உழைப்புமின்றி, அனுபவமுமின்றி கற்பனைக்குதிரையில் தரையில் கால் பாவாது பவனி வருகின்றன. கேட்டால் Facts வேண்டுமென்றால் Nonfiction படியுங்கள் என்று அறிவுரை. அபத்தம். உண்மையில் வேதனையாக இருக்கிறது.
வீடுதிரும்புதல் – உஷா ப்ரியம்வதா – ஹிந்தியிலிருந்து தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:
பழையபாணிக் கதைசொல்லல். ஆனால் ஒரு பெண்ணால் ஆணின் வேதனையைச் சரியாகப் படம்பிடிக்க முடிந்திருக்கிறது. மனைவியின் அன்பு விசயத்தில் குழந்தைகளுடன் போட்டி போட்டு எந்தக் கணவனும் ஜெயிப்பதற்கில்லை. ஆணும் கூட வேண்டாத பூசணிக்காய் ஆக முடியும் என்பதைச் சொல்லும் கதை. Familiarity breeds contempt என்பதே இந்தியக்குடும்ப வாழ்க்கை நமக்கு சொல்லும் நீதி. இந்தக் கதையை நாம் மட்டுமே சரியாகப் புரிந்து கொள்ள முடியும். இந்திய நிதர்சனம். அனுராதாவின் மொழிபெயர்ப்பு மிக நன்றாக வந்திருக்கிறது.
கை இரண்டு போதாது காண் – நாஞ்சில் நாடன்:
எந்த விருது கிடைக்கும், கிடைக்காது பற்றிய கவலையில்லை, எவருடைய அங்கீகாரமும் தேவையில்லை என்கிற போது எழுத்து முழுவிடுதலை அடைந்து விடுகிறது. நாஞ்சில்நாடன் இப்போது எழுதுவதில் கதைகள் இல்லை, ஆனால் gossipகள் நிறைய இருக்கின்றன. போரிஸ் பெக்கர் அறிமுகமான போது செய்யும் serviceகளைப் போல Powerfulஆன மொழிநடை. நம்மை திட்டினாலும் கூட வாய்விட்டு சிரிக்கலாம் போல ஒரு இயல்பான நகைச்சுவை. இப்போதைய நாஞ்சில்நாடனை வாசிப்பது
சுவாரசியம்.
வெளி -;அரவிந்த் வடசேரி:
அரவிந்த் நல்ல மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து பல நல்ல கதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர். என்றாலும் சொந்தக்கதை எழுதும் ஆவல் யாரையும் விட்டுப் போவதில்லை.
சமீபத்தில் வந்த ஒரு கதையில் சென்னைப் பெண் வீட்டில் கழிப்பறை இல்லாது ரயிலடிக்குப் போவாள். அவளது பிரச்சனைகளுடன் ஒரு மெல்லிய காதல் முளைவிடுமுன் கருகிய வாடை வரும் அந்தக் கதையில். அரவிந்த் கதையை நன்றாகக் கொண்டு போயிருக்கிறார். ஆனால் ஒரு Abruptஆன Ending கதையை மனதில் பதியவிடாது செல்கிறது. வேண்டி விரும்பி விருந்துக்குக் கூப்பிட்ட வீட்டில் இரண்டு பூரிகள் போட்டுவிட்டு, வீட்டுக்காரம்மா அடுப்பை அணைத்துவிட்டு சலனமில்லாத முகத்துடன் நாற்காலியில் வந்து அமர்வதைப் பார்ப்பது போன்ற உணர்வு.
இரண்டு பெண்கள் – எஸ். சங்கரநாராயணன்:
இழப்புகள் உண்டாக்கும் வெற்றிடம் எப்போதும் தற்காலிகமானது. வாழ்க்கை மீதியை வாழ்வதற்கு கைபிடித்து அழைத்துச் செல்கிறது. சங்கரநாராயணன் போன்ற அனுபவசாலி soulmates குறித்து எழுத மாட்டார். இன்னும் சொல்லப் போனால் , நல்ல துணையிருந்தும் கூட இழந்த ஒன்றை மனம் நினைத்து அலைபாய்வது எல்லோருக்கும் நிகழ்வது. இவரது வழமையான கதைகளில் இருந்து இதில் ஏதோ ஒன்று குறைவது போல் தோன்றுவது எனக்கு மட்டுமா?
https://drive.google.com/file/d/1ykGUeAq4xyKfq1-QeL6KYH7tP7IVqkW7/view?usp=sharing