அவுரி – சத்யஜித்ரே- தமிழில் கண்ணையன் தட்சிணாமூர்த்தி:
இந்தக்கதையை ஏற்கனவே தமிழில் படித்த நினைவிருக்கிறது. சத்யஜித் ரேயின் Horror stories, Poeவின் Styleல், ஆனால் இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும். பெங்காலிகள் யாராக இருந்தாலும், என்ன பதவியில் இருந்தாலும் தாகூரை சிலாகிக்காமல் இருக்க மாட்டார்கள். அதனால் உலக அளவில் அவர் புகழ்பெற முடிந்தது.
இந்தக் கதையின் ஒரு பகுதி Pure Horror. ஒரு மாளிகையில் தங்கியவுடன், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு ஆங்கிலேயனின் கடைசிநாட்களை revisit செய்ய அவனாகவே மாறுவது. இன்னொரு பகுதி இந்திய ஏழை விவசாயிகளை எப்படி எல்லாம் சுரண்டி பிரிட்டிஷார் அவர்கள் நாட்டுக்குப் பணத்தைக் கொண்டு சென்றார்கள் என்று சொல்வது. அடுத்து என்ன என்ற பரபரப்பு குறையாது கதையைக் கொண்டு சென்ற விதம் அருமை. நல்ல மொழிபெயர்ப்பு.
ஆன்லைன் – குல்சார் – தமிழில் மாதா:
கவிதைகள் வேறு கதைகள் வேறு என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குல்சார் அடிப்படையில் கவிஞர். கொரானாவிற்குப் பிறகு எல்லாமே Onlineக்கு மாறியதை விமர்சனப்பார்வையில் அணுகும் கதை.
இல்லங்களில் Role Play மாறுகிறது. யார் முக்கியத்துவம் வாய்ந்த உத்தியோகம் செய்ததாக நினைத்தார்களோ அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். ஆண்கள் சமையல் கற்றுக்கொள்கிறார்கள். ஆன்லைனில் பார்த்துப் பழகி, திருமணமும் Onlineல் முடிகிறது. இதை எல்லாம் பக்கத்து வீட்டுக்கிழவர் சொல்லக் கேட்டாலே சலிப்பு, கதையாகப் படிக்கையில் அது கூடுதலாகிறது. சிரமப்பட்டு மொழிபெயர்க்கையில் கதைகளின் தேர்வு மிக முக்கியமானது.