Meg Mason நியூசிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். பத்திரிகையாளராக ஆரம்பித்து, இரண்டு சுயசரிதை நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நாவலான இந்த நூல், ஆஸ்திரேலியாவில் பெரும் வரவேற்பை பெற்று, உலகின் பிற பகுதிகளிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது WFA இறுதிப்பட்டியலின் ஆறு நாவல்களில் ஒன்று.

Snippet from the book:
“Martha, no marriage makes sense. Especially not to the outside world. A marriage is its own world. We were dysfunctional. We made each other dysfunctional. I had to be the one to end it but I know it’s what he wanted too. He was just too passive to do it. Of course it’s sad, obviously. But it is best for everyone.”

முதல் அத்தியாயத்தின் முதலில் மார்த்தா நாற்பது வயதைத் தொட்டு விடுகிறாள். அதன் முடிவில் அவள் கணவன் ஃபாட்ரிக் அவளை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்கிறான். அத்தியாயத்தின் நடுவில், அவள் ஒரு பார்ட்டியில் அவள் கணவனை எவ்வளவு காலமாகத் தெரியும் என்ற கேள்விக்கு, ” வீட்டின் பழைய ஷோபா போல நெடுங்காலம் என்னுடன் இருக்கிறான்” என்கிறாள். மார்த்தா கர்வம் பிடித்தவளா? இல்லை She is mentally sick.

Mental sickness என்பதை எழுத்தாளரோ, மார்த்தாவோ எங்குமே சொல்வதில்லை. அவள் மனநலமருத்துவரைப் பார்த்து விட்டு வந்து சொல்வதிலும் நோயின் பெயர் வெற்றிடமாக விடப்பட்டிருக்கிறது. ஆனால் அவளுக்கு Mental sickness என்பது அடுத்தடுத்து வரும் சம்பவங்களில் நமக்குப் புரிகிறது. மார்த்தாவின் பிரச்சனையை யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவள் பைத்தியம் இல்லை அவள் Normal என்ற இரண்டு Extremeகளில் அவளை மதிப்பீடு செய்கிறார்கள். பதின்மவயதில் அவளைப் பரிசோதிக்கும் பெண் டாக்டர் அவள் தந்தையிடம், மார்த்தா Sexually very active என்று சொல்கிறாள். அந்த நேரத்தில் மார்த்தா கன்னி.

கணவனை வெறுக்க மார்த்தா சொல்லும் காரணம், “அவன் என்னிடம் குறை இருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. நான் Normal ஆக இருப்பது போலவே நடந்து கொண்டான். அவன் பதினான்கு வயதில் பார்த்து விரும்பிய பெண்ணை இழக்க விரும்பவில்லை. எனவே நான் சொல்வதற்கெல்லாம் சரி என்றான். அவன் என்னை மணக்கவில்லை, என் சிறுவயதில் அவன் உருவாக்கிக் கொண்ட எனது பிம்பத்தை. அவனுக்கு குழந்தை என்றால் அவ்வளவு ஆசை, ஆனால் நான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றதும் அதை ஒத்துக் கொண்டான். நான் அவனை வெறுக்கிறேன்.”

Saddest topicஐ Funniest wayல் சொல்லும் நூல் இது. Prolonged Depression என்பதுடன் Modern Loveஐயும் சேர்த்த நாவல் இது. அழகு, புத்திசாலித்தனம், திறமை நிறைந்த பெண்ணுக்கு ஏன் இது நிகழ வேண்டும்? அதே வீட்டில் பிறந்த இவளது தங்கை Ever Pregnant ஆக குடும்ப வாழ்க்கையை வாழவில்லையா! இது வெளியிலிருப்பவரால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. ஃபாட்ரிக்கே ஓரிடத்தில் ‘” நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறாய்”. இவ்வளவிற்கும் ஃபாட்ரிக் ஒரு மருத்துவர். எல்லாவற்றையுமே முழுங்கிக் கரைத்து அடக்கிக்கொண்டு ஒன்றும் பாதிப்பில்லாதது போல் உணர்ச்சிகளைக் கொல்வது தான் Normalcyயா? அவர்களால் தான் வெற்றிகரமான மணவாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியுமா! The end is in the beginning and lies far ahead – Ralph Ellison.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s