அமெரிக்க எழுத்தாளர். வழக்கறிஞர். Legal thrillerகளை Courtroom Dramasஉடன் அதிகமாக எழுதியவர். உலகில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவருடையதும் உண்டு. 300 மில்லியனுக்கு மேல் இவரது புத்தகங்களின் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன. இது மூன்று குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு, 31 மே 2022ல் வெளியாகியது.

“God still loves you, Cody.”

“Well, he sure has a strange way of proving it. What did I do to deserve this?”

“He works in mysterious ways and we’ll never have all the answers.”

“Why does it have to be so damned complicated and mysterious? You know why, Padre? Because he’s not there. He was created by man for man’s own benefit.”

முதல் Novella, ‘ Home Coming’, Clientகளின் பணத்தைத் திருடிவிட்டு, திவால் நோட்டிஸ் கொடுத்து, மனைவியை விவாகரத்து செய்து விட்டு, தப்பி ஓடிய வக்கீல் குறித்த கதை. இரண்டாவது Wrong time, wrong placeல் இருந்ததால் தூக்குமேடைக்கு செல்லப் போகும் இளைஞன் குறித்தது. மூன்றாவதில் Law Firm ஒன்றில், அப்பா கொலை வழக்கில் மாட்டிக் கொண்டு சிறை செல்ல, அவரது மகன்கள் இருவரும் ஒரு Scandalல் மாட்டிக்கொண்டு அவரைத் தொடர்வது குறித்த கதை.

Grisham அடிப்படையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர். அத்துடன் அவருடைய சட்டஅறிவைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவர். அமெரிக்காவில் ஒரு Stateல் இருக்கும் சட்டம் இன்னொரு Stateல் இருக்காது என்பதால் அதிக கவனம் தேவைப்படும். அமெரிக்காவில் இன்னொரு வித்தியாசமான விஷயம் Immunity. குற்றத்தில் குறைவாகப் பங்குபெற்றவர்கள் மற்றவர்களைக் காட்டிக் கொடுக்க, அழிக்க முடியாத சாட்சியங்களை அரசுக்குக் கொடுத்து விட்டு, ஒரு பிளேடு கீறல் கூட இல்லாமல் தப்பித்துக்கொள்வது.

Grishamன் மொழிநடையும், கதைசொல்லலும் உண்மையில் ஒரு Addiction. உலகில் அதிகமான வாசகர்களால் படிக்கப்படும் இவர், Stephen King போன்றவர்கள் நம்மவர்கள் மாதிரி வெறும், வசீகரமான மொழிநடையை நம்பி களத்தில் இறங்குவதில்லை. பதினான்கு வயதுப் பையன் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறான் என்பதை கண்ணை மூடிக் கொண்டு எழுதினால் காத்திருக்கும் வல்லூறுகள் தன்னைக் கூறுபோடும் என்பது Grishamக்குத் தெரியும். இன்ஸூரன்ஸ் Fraud என்பது இரண்டு கதைகளில் எவ்வளவோ தகவல்களுடன் வருகிறது. Grishamன் கிட்டத்தட்ட ஐம்பது நூல்களில் பெரும்பகுதி
சட்டம் சம்பந்தப்பட்டவை. விதிவிலக்காக சில விளையாட்டுகள் சம்பந்தப்பட்டவை. Grishamன் விளையாட்டுகள் குறித்த ஆழ்ந்த அறிவு அந்த நூல்களில் வெளிப்படும்.

Courtroom Trial இதில் ஒரே கதையில் மட்டுமே வருகின்றது. அமெரிக்க நீதிமன்றங்களின் நடைமுறைகள் வித்தியாசமானவை. அவற்றை நுணுக்கமாகக் கொண்டு வருபவை Grishamன் நாவல்கள். A Time to Killல் ஆரம்பித்த பயணம் முப்பத்து மூன்று வருடங்களாக வெற்றிகரமாகத் தொடர்கிறது. The Firm என்ற நாவலுக்குப் பிறகு இவரது Career ஏறுமுகம் தான். சிறையில் அடைபட்டு ஒருநாளில் தூங்கும் நேரம் தவிர மீதி நேரங்களில் வாசிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாதவனின் கதையில் ஏராளமான புத்தகங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். Summaryஐப் படித்துவிட்டு புத்தகங்களைப் பற்றிக் கதையிலோ, கட்டுரையிலோ Johm Grisham பேசுவது என்பதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. Because the stake is too high for him.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s