Lisa Caribbean writer, நகைச்சுவை நடிகர், பத்திரிகையாளர். பதின்மவயதினருக்கும், பெரியவர்களுக்கும் நாவல்களை எழுதியுள்ள Lisaவின் இந்த நாவல் WFA இறுதிப்பட்டியலின் நாவல்களில் ஒன்று.

கணவன் அடித்துத் துன்புறுத்தும் உறவில் பெண்கள் ஏன் தொடர்கிறார்கள்? காயத்தை மறைத்து அல்லது மறைக்க முடியாத காயத்திற்கு கதை கற்பித்து, அவர் எப்போதும் பிரியம் தான் ஆனால் சிலநேரம் மட்டும் இப்படி என்று தனக்கும் திருப்தியில்லாத சமாதானங்களை அடுத்தவரிடமும் சொல்லிக்கொண்டு எதற்காக இவ்வளவும் என்று எனக்கு இன்றுவரை விளங்கியதேயில்லை. அடிக்கிறான் என்றாலே அவன் உன்னைக் காதலிக்கவில்லை என்பது தெரியவில்லையா முட்டாள்பெண்ணே?
நாற்பதை நெருங்கிக் கொண்டு, ஐந்துவருடங்களாக அடிஉதையுடன் காலத்தைக் கழிக்கும், Caribbean பெண் பற்றிய கதை இது.

Alethea ஒரு வித்தியாசமான பெயர். அவள் வாழ்க்கையும் வித்தியாசமானது தான். தினம் அடியும், திட்டுமாகக் கழிந்த குழந்தைப் பருவத்தில், Single parentஆன அவளது தாய் ஏன் அவளை வெறுக்கிறாள் என்பது தெரிந்திருக்காது. தாய் இறந்த பிறகே அவள், தான் தாயின் அவமானத்திற்கான சாட்சி என்பது புரிகிறது. Physical Abuse, Sexual abuse இரண்டுமே நடக்கும் குழந்தைப் பருவத்தின் வலிகள் அவள் நாற்பதைக் கடந்தும் தொடர்கிறது.

நாவல் முழுவதுமே Trinidadian Creoleல் எழுதப்பட்டிருக்கிறது. வாசிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துவது. இந்த நாவலைப் படித்து முடித்து உடனடியாக ஆங்கிலத்தில் ஏதேனும் எழுதாமல் இருப்பது நல்லது, பின்னர் பார்த்தால் இலக்கணப்பிழைகள் மலிந்திருக்கும். Lisaவின் முதல் Adult novel இது. முதலில் பதிப்பிற்காக பல பதிப்பகங்களால் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல். ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும், குறிப்பாகப் பெண்களிடத்தில் கண்ணுக்குத் தெரியாத தொடர்பு ஏதோ இருக்கிறது. ஆப்பிரிக்க இலக்கியத்திற்கு மேலும் வலுசேர்க்க இணைந்த புதுவரவு Lisa.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s