Karen Louise Erdrich அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், குழந்தைகளுக்கான நூல்கள் எழுதியவர். Native American Renaissance குறித்து அதிகம் எழுதியவர். சென்ற வருடத்திற்கான புலிட்சர் விருதை வென்றவர்.

நாவல், Tookie (கதைசொல்லி), அவளுடைய தோழி, தன் பழைய காதலனின் இறந்த உடலை, இப்போதைய மனைவியிடம் இருந்து கடத்திவர 25000 டாலருக்கு ஒத்துக் கொள்வதில் ஆரம்பிக்கிறது. இறந்த உடலைச் சுற்றி Cocaineஐ கட்டிவைத்து அவர்கள் இருவரும் நடத்திய நாடகத்தில் Toikie சிக்கிக்கொள்கிறாள். Tookie Native American. அமெரிக்காவில் Native american குற்றங்களில் மாட்டிக் கொண்டால் அதிகபட்ச தண்டனை கிடைக்கும். Tookieக்கு அறுபதாண்டு கடுங்காவல்.

புத்தகக்கடைக்கு வரும் தொல்லைபிடித்த வாடிக்கையாளர் ப்ளோரா இறப்பதில் இருந்து நாவல் ghost story ஆக மாறுகிறது. ப்ளோராவும், அவள் கடைசியாகப் படித்த புத்தகமும் ( எரித்தால் எரியாத, கட்டாரியை வைத்து வெட்டினாலும் சிதையாத, மண்ணுக்குள் குழிதோண்டிப் புதைத்தாலும் மறையாத புத்தகம்) Tookieக்குத் தரும் தொல்லைகள் அமெரிக்காவில் வெள்ளையினத்தவர், செவ்விந்தியருக்கு அளிக்கும் தொந்தரவுகளின் உருவகம்.

Louise உண்மையிலேயே ஒரு புத்தகக்கடையை நடத்தி வருகிறார். நாவலிலும் கடையின் உரிமையாளர் பெயர் Louise. புத்தகக்கடை நடத்துவதன் சிரமங்கள் முழுவதையும் இந்த நூலில்கொண்டு வந்திருக்கிறார். புத்தகக்கடை, Native Americanகளுக்கான புத்தகங்கள், Art முதலியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்துவது.

Louiseஐப் பெரிதும் பாதித்த இரண்டு விசயங்கள் நாவலிலும் வருகின்றன. முதலாவது Covid. இரண்டாவது George Floyd கொலை செய்யப்படுவது. I can’t breathe man என்ற Floydன் வேண்டுதல் எல்லோரும் காணொளியில் பார்த்த ஒன்று. ( Civil right விஷயத்தில் அமெரிக்காவை மற்ற நாடுகள் அவசியம் பின்பற்ற வேண்டும். Floydஐக் கொலைசெய்த ஆபிஸருக்கு 22.5 வருடங்கள் சிறை, உடன் இருந்த போலீஸ்காரர்களின் Trial நடந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் நாம் எல்லோரும் பார்க்க சுட்டுக் கொன்றவர்கள் என்ன ஆனார்கள்? அடுத்து வந்த அரசாங்கத்திலும் அந்தக் காணொளியை யாரும் பார்க்கவில்லையா?)

ஏராளமான விசயங்கள் இந்த நாவலில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. Tookie ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் (முதலிலேயே தான் அவலட்சணம் என்று சொல்வதில் இருந்து). Louiseன் மொழிநடை Powerful ஆனது, அதே நேரத்தில் வெகு எளிதானது. 2020ன் வாழ்க்கையை Funny ஆகச் சொல்வதற்கு இந்த நாவலை Louise தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். வழமை போல் Louiseன் Signature ஏந்திய மற்றொரு நாவல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s