ட்டி.டி. ராமகிருஷ்ணன்:
ரயில்வேயில் பணிபுரிந்து விருப்புஓய்வு பெற்றவர். தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் முதலாவதாக எழுதத் தொடங்கிய ராமகிருஷ்ணனின் ஆறு நாவல்கள் இதுவரை மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இது ஐந்தாவது நாவல்.
குறிஞ்சிவேலன்:
தமிழ்நாடு அரசுப்பணியில் இருந்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ராமகிருஷ்ணனின் முந்தைய ஐந்துநாவல்களையும், தற்போது ஆறாவது நாவலையும் மொழிபெயர்த்து வருபவர்.
இறந்த ஆஸாதி போராளியின் மனைவி ஃபாத்திமா நிலோபர் (கற்பனைக் கதாபாத்திரம்) ஆசிரியரை அணுகி அவளது கதையை எழுதச் சொல்லிக் கேட்கும் பொழுது அவள் ஏற்கனவே இறந்திருந்தாள். காஷ்மீர் பிரச்சனை குறித்த நாவல் இது.
நம்முடைய வளங்களை எல்லாம் கொள்ளையடித்த ஆங்கிலேயர்கள், முன்குறித்த தேதிக்கும் முன்னராக சுதந்திரம் வழங்கி அவசரமாகச் சென்றதன், பின்விளைவுகளில் ஒன்று காஷ்மீர் பிரச்சனை. ஹரிசிங் போல் ஆங்கிலேயர் வால் பிடித்தவர்கள் இந்தியா பாகிஸ்தான் சுதந்திரத்தில் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அவர்கள் எஜமான் இடத்தைக் காலிசெய்து விட்டார். காஷ்மீர் பூகோளரீதியில் பாகிஸ்தானுக்கு பல வழிகளில் நெருங்கியது, அதிகமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்டது. ஆனால் ஹரிசிங், ஷேக் அப்துல்லா இருவரும் பாகிஸ்தானின் போர் அச்சுறுத்தலால் இந்தியாவுடனான இணைப்பை விரும்பினர். காஷ்மீர் இந்தியாவின் நிரந்தரப் பிரச்சனையானது இவ்வாறு தான்.
முழுமையான அரசியல் நாவல் இது. காஷ்மீர் அதனுடைய Special statusஐ இழந்த
தேதியில் தொடங்கும் நாவல், முன்னும் பின்னுமாக நகர்கிறது. இந்தநாவலின் தலைப்பு ஒரு Metaphor. ராமகிருஷ்ணன் பாதிக்கப்பட்டவர் கோணத்தில் இருந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார். அரசியல் நாவல் Politically correctஆக இருக்க வேண்டிய அவசியமில்லை. காஷ்மீரில் Partnership act முதல் பல வியாபார ஷரத்துகள் செல்லாது என்பதில் இருந்து, காஷ்மீரில் நாம் நிலம் வாங்கமுடியாது ஆனால் அவர்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வாங்கலாம் என்பது போன்ற பல அபத்தங்கள் விவாதத்துக்குரியது. குறிப்பாக Article 370 என்பதே ஒரு தற்காலிக ஏற்பாடு தான் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி.
இன்னொரு வகையில் பார்த்தால் இந்தியாவிலேயே அதிகமாக காஷ்மீரில் தான் மனிதஉரிமை மீறல்கள் அதிகமாக நடந்திருக்கின்றன. நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கிய உலகின் எந்த ராணுவமும் அத்துமீறல்களில் ஈடுபடாது இருந்ததில்லை.
காஷ்மீரின் இரட்டைக்குடியுரிமை பெரும்பான்மையினோரை இந்தியாவைச் சேர்ந்தவர்களாக அவர்களை எப்போதுமே
நினைக்க வைத்ததில்லை. அதன் காரணமாகவே பல துயரங்களுக்கு அவர்கள் ஆளானார்கள். பாவப்பட்ட ஜனங்கள்.
கொலை செய்யப்படுவோம் என்ற அச்சுறுத்தல் காரணமாக ஃபாத்திமா குடும்பத்துடன் தப்புவதாக இருந்திருந்தால் Logically correct ஆக இருந்திருக்கும். காஷ்மீரிகள் வெளிநாட்டுக்கோ இந்தியாவின் வேறு பகுதிகளுக்கோ மருத்துவ சிகிச்சை செய்வதற்கு இப்போதைய அல்லது முந்தைய அரசாங்கங்கள், யாருமே தடைவிதித்ததில்லை. தீவிரவாத அமைப்பை நம்பி, எல்லையைக் கடந்து, ஒரு திவாலான தேசம் உதவி செய்வது எதற்காக என்ற கேள்வி ஏன் எல்லோருக்கும் எழக்கூடாது? But for America’s and China’s help Pakistan would have been a declared Bankrupted State.
ஆரிஃபா தாத்தா கதைசொல்லும் இடங்களில் ராமகிருஷ்ணன் Touch தெரிகிறது. மற்றபடி சுகந்தி, மாதா ஆப்பிரிக்கா போன்ற நாவல்களில் இருந்த கலைநுட்பம் இதில் கூடிவரவில்லை. தகவல்களின் சேகரமாக நாவல் முடிந்து போகிறது. குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பில் ஆயிரம் நாவல்கள் கிடைத்தால் கூட மகிழ்ச்சி தான். எண்பது வயதுக்கு மேல் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களின் பணியில் இருக்கும் இவரிமும், எழுபது வயதுக்கு மேல் கணவருக்கு தட்டச்சு செய்து உதவும் இவரது மனைவியிடமும் நாம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.
பிரதிக்கு:
சொற்கள் வெளியீடு 95666 51567
முதல்பதிப்பு ஏப்ரல் 2022
விலை ரூ. 175.