V J James:
செங்கனாச்சேரியில் பிறந்தவர். விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சிமையத்தில் பொறியாளராகப் பணிபுரிந்தவர். ஏழு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகளை இதுவரை எழுதியுள்ளார். வயலார் விருது, சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளை வென்றவர்.
Ministhy S:
உத்தரப்பிரதேசத்தில் I A S officer ஆகப் பணிபுரிபவர். மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளுக்கிடையே மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். K R Meera வின் சில நாவல்கள் உட்பட பல நூல்களை மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இது இவருடைய V J Jamesன் மூன்றாவது மொழிபெயர்ப்பு நூல். இதற்கு முந்தைய Anticlock JCB விருதின் இறுதிப் பட்டியலுக்கு வந்த நூல்.
Anticlock சவப்பெட்டி தயாரிப்பவரின் கதை. அதில் 112 வயதை அடைந்தவர் நேரத்தை பின்னோக்கி நகரவைக்கும் முயற்சியை செய்வார். அது போலவே இதுவும் வித்தியாசமான கதைக்கரு. கடவுள் நம்பிக்கையில்லாத மூன்று மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கடவுள் தெரு என்ற பெயரை Abhasha தெரு என்று மாற்றுவதில் வெற்றி கண்டதும், எதிர்கடவுளை (Anti-God) உருவாக்கி ஏற்கனவே இருக்கும் எல்லாக் கடவுள்களையும் அழிக்க நினைக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒன்று, இருக்கும் எல்லாக் கடவுள்களையும் விட, இவர்கள் உருவாக்கிய Nireeswaran சக்தி வாய்ந்தவராகிறார். Mary Shellyன் Frankestin போல படைத்தவர்களையே, படைப்பு அச்சுறுத்துகிறது.
இருபத்து நான்கு வருடங்கள் கோமாவில் இருந்த ஒருவன் திடீரென விழிக்கிறான். ஐன்ஸ்டினின் Theory of special relativityஐ இங்கே கொண்டு வந்தோமென்றால் அவனுக்கு காலம் என்பது என்ன? உணர்விழந்தநிலையில் அவன் உணர்ந்த உணர்வுகளுக்கு என்ன அர்த்தம்? (A consciousness within the unconciousness!). முப்பத்திரண்டு வயதில் கோமாவில் விழுவதற்கு முன், அவனுடைய தேகம் எப்படி இருந்ததோ, இந்த ஐம்பத்தாறு வயதில் அது அப்படியே, தலைமுடி ஒரு பொட்டு கருக்காமல் இருப்பதன் அறிவியல் காரணம் என்ன?.அவன் மனைவி சொல்லலாம் இல்லையா, When I grow old I will have an younger husband!
Rational thinking எப்போதுமே Irrational thinkingஐ வென்றதாக வரலாறே இல்லை. இருந்திருந்தால் கடவுள் இன்னும் உயிரோடிருக்க முடியாது. ஏழுவயதுப் பெண்ணை நாலுபேர் அவருடைய இருப்பிடத்திலேயே பாலியல் வல்லுறவு செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பவர் கடவுளா? இல்லை அந்நிய மதம் என்று அவர் பேசாமலிருந்தார் எனில் சிறுமியின் சொந்தக் கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது Rarional thinking. குற்றவாளிகளைக் கடவுள் சும்மா விடமாட்டார் என்று அடுத்த வேலையைப் பார்க்கப்போவது Irrational thinking. கடவுளின் பெயரால் கல்லா கட்டுபவர்கள் எல்லா மதத்திலும் நிறையவே இருக்கிறார்கள். Nireeswaranஐப் பயன்படுத்துபவர்கள் செய்வதும் அதுதான்.
Battle between the body and mind என்பது இந்த நாவலின் மற்றுமொரு முக்கிய அம்சம். ஆண் பெண் என்ற பாலினபேதமின்றி எப்போதும் இது நம்முன்னே நடந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக ஆணுக்கு பழகிய உடல் அளிக்கும் கிளர்ச்சியை விடப்பழகாத உடல் அளிக்கும் கிளர்ச்சி அதிகம். அதை வைத்துக் கொண்டு பார்த்தால் இந்திரஜித் ஏன் வயதான தோற்றம் கொண்ட மனைவியின் உடலை நெருங்க முடியவில்லை என்று விளங்கும்.
ஷர்மிஸ்டையின் Dilemmaவிற்கு நேரெதிரானது இந்திரஜித்துடையது.
இயற்பியல், ஆன்மீகம், நாத்திகம், நம்பிக்கை என்ற நான்கு தூண்களின் மேல் கட்டமைக்கப்பட்ட நாவல் இது. இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது மிகக்கடினம். Ministhy வெகுசிறப்பாகச் செய்திருக்கிறார். இந்திரஜித்- மேகா, மணியன்-அன்னம்மா இருவரது உறவுகளின் பரிமாணங்கள் எதிரெதிர் தளத்தில் இயங்குகின்றன. Nassim Nicholas Taleb, Random theory குறித்து சொல்லும் போது, ரஷ்யன் ரௌலட்டில் இரண்டுமுறை பிழைத்தவன், தான் சாகாவரம் பெற்றவன் என்று நம்ப ஆரம்பித்து விடுவான் என்பார். கடவுள் நம்பிக்கையும் குருவி உட்கார பனம்பழம் விழும் Random theory தான்.
ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஜேம்ஸ் இந்த நாவலை முடிப்பதற்கு. இந்தியதத்துவார்த்தமும் அறிவியலும் ஒரே கோட்டில் பயணிக்கும் நாவல். Scientist ஒருவன் சிக்கலான இயற்பியலையும், கணித சமன்பாடுகளையும், படிப்பறிவில்லாத விபச்சாரிக்கு எளிய முறையில் விளக்குகிறான். ஜேம்ஸின் நாவல்கள் தமிழுக்கு வரவேண்டும். நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள், ஆனால் உண்மை யாருக்கும் அகப்படாமல் எங்கோ ஒளிந்திருக்கும்.