ஆசிரியர் குறிப்பு:

தத்துவயியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். திரைத்துறையில் வெர்னர் ஹெர்லாக், தெரேன்ஸ் மாலிக், ராபர்ட் அல்ட்மன் போன்றோர் இவரது ஆதர்சங்கள். திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிகிறார். இவர் எழுத்தாளர்கள் ஜெயமோகனுக்கும், அருண்மொழி நங்கைக்கும் தர்மபுரியில் பிறந்தவர். இவரது முதல் நாவல் இது.

ஹரன், கேதார்நாத் செல்லும் பேருந்தில் மைத்ரி என்ற பேரழகியைச் சந்திக்கிறான். அவள் மொபைலில் இருந்து கட்வாலி மொழியில் வாழ்க்கையில் கேட்ட சிறந்த பாடல் ஒன்றைக் கேட்கிறான். கீழே இறஙகுவதற்குள் ஹரனும், மைத்ரியும் ஈருடல் ஓருயிராகிறார்கள். பேருந்தை விட்டு இறங்கியதும் வாழ்நாளில் அருந்திய தேநீர்களிலேயே சிறந்த தேநீர் ஒன்றை அருந்துகிறான். போரடிக்கிறதா? அஜிதனின் தப்பு இல்லை. எனக்குத் தான் கதையைப்பற்றி சரியாக சொல்ல வரவில்லை.

இரண்டாவது பாகம் முழுவதுமே இயற்கையின் தரிசனம். தமிழில் அதிகம் புழங்கப்படாத களம். கர்வால் பகுதியின் அழகு கண்முன் விரிகிறது. முன்னுரையில்
சுசித்ரா நாவலில் தத்துவத்தின் கனம் தாங்கவில்லை என்கிறார். போதுமான அனுபவம் இல்லாததால் என்னால் அதை உணர முடியவில்லை. கதேயின் காதலின் துயரம், குப்ரினின் ஒலேஸ்யா, தாந்தே எல்லோரையும் இந்த நாவலின் முன்னோடிகளாகச் சொல்கிறார். ஒரு முன்னுரையைப் படித்து நான் அதிகம் பயந்தது இந்த முறைதான்.

தத்துவார்த்தம் இல்லாமலில்லை இந்த நாவலில். ஆனால் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த நாவல் இன்னும் அதிக பக்கங்களில் இன்னும் அதிக கவனத்தைச் செலுத்தி எழுதியிருக்கலாம். Utopianisa சாயலைப் போக்கி இருந்திருக்கலாம். மொழிநடை சில இடங்களில் Flat ஆக, சில இடங்களில் நன்றாக வந்திருக்கிறது. அஜிதனும் பதிப்பிற்கு முன் பலரிடம் கேட்டிருப்பார். ராஜா மெச்சினதே ரம்பா என்று ஆன தமிழ்இலக்கிய உலகில் அவர்கள் புதிதாக என்ன சொல்லியிருக்கப் போகிறார்கள்!

பிரதிக்கு:

விஷ்ணுபுரம் பதிப்பகம் 90802 83887
முதல்பதிப்பு ஜூன் 2022
விலை ரூ.300.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s