ஆசிரியர் குறிப்பு:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர். திண்டுகல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. தற்போது திரைப்படத்துறையில் Visual Editor ஆகப் பணிபுரியும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் அதிகபட்ச Varietyஐக் கொண்டு வந்திருக்கிறார் லட்சுமிஹர். ஆப்பிள் பாக்ஸ் திறமைவாய்ந்த Assistant Directorன் Sentimental கதை. அதற்கடுத்த கதை ‘கடிந்து’ Metafiction story, கடைசியில் சற்றே பகடி இருக்கிறது. ஸெல்மா சாண்டாவின்……. Author surrogate வகையைச் சார்ந்தது. இளவரசி ஆயிஷா Fantasy. புலிசாரை கிராமக்கதை. வெற்றோசை Absurdism. கதைகள் எழுதுமுன் இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்து செய்திருக்க முடியாது, பரிட்சார்த்த முயற்சியில் கதைகள் எழுதப்படும் போது தனக்குரிய வகைமையைத் தேடிச் சேர்ந்து கொள்ளும்.
தொகுப்பின் அதிகபக்கங்கள் கொண்ட கதையான, புலிசாரை முற்றிலும் வித்தியாசமான subject. வாடிவாசலை நினைவுபடுத்தும் கதை. கிராமத்தின் நடைமுறைகள், போட்டி, பொறாமை, வஞ்சம் எல்லாமே வந்திருக்கின்றன. இளையவளைத் தொட்டவுடன் தன்னைத் தொடக்கூடாது என்ற மூத்தவளின் கோபம் நுட்பமான விஷயம். ஆனால் ஸெல்மா, வெற்றோசை போன்ற கதைகளில் எழுத்தாளருக்கு இருக்கும் சுதந்திரம் இது போன்ற நேர்க்கோட்டுகதைகளில் இருப்பதில்லை. இங்கே தகவல்களுடன் ஒரு அழுத்தமான கதைக்கருவும் தேவைப்படும். இல்லை செய்திகள் போல் கதை முடிந்து விடும்.
ஆண்ட்ராய்ட் வெர்ஷன் போல கதையின் கடைசிப்பத்தி வரை, வாசகரை இருளில் வைத்திருக்கும் கதைகள் இருக்கின்றன. ஸ்டார் ஒரு வித்தியாசமான, நுட்பமான கதை.
சிறுவனின் பார்வையில் கதை நகர்வதால் ஆப்பிள் பாக்ஸில் வரும் சென்டிமென்ட் Touch இதில் இல்லை, ஆனால் எல்லோருக்கும் என் அப்பா பெரியஆள் என்று சொல்லும் குழந்தைகளின் எதிர்பார்ப்பு கதையில் அழுத்தமாக வந்திருக்கிறது. ஹரிஷூக்கு வயதானதும் அப்பாவைப் புரிந்து கொள்வான். மன்யாவின் உடல்கள் மற்றுமொரு நல்ல கதை. முதல் தொகுப்பிலேயே ஒரு எழுத்தாளர் முழுவதும் Experimental writingsஉடன் வருவதும் அதைத் தயங்காமல் ஒரு பதிப்பகம் பதிப்பிப்பதும் உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயம்.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.170.
Super anna 👍 all the best Anna ✨
LikeLike