வருடல் – நிரூபா:
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நிரூபா எழுதிய கதை இது என்று நினைக்கிறேன்.
சிறுவயதில் ஆனுபவித்த/பார்த்த பாலியல் வல்லுறவுகள் பெண்களிடம் பெரும்பாலும் எப்போதுமாகத் தங்கி விடுகின்றன. சிலருக்கு எப்போதாவது திடீரென்ற முழிப்பு பின் தூக்கமின்மை இவற்றுடன் போய்விடுகிறது. பலருக்கு Nightmares தொடர்கதை. அமெரிக்கா போன்ற திருமணத்திற்கு முன் பலருடன் பயமில்லாமல் உறவுகொள்ளும் கலாச்சாரத்தில் இருந்து வந்த பெண்களுக்கே Rape என்பது திரும்பிவரமுடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது. திருப்தியான தாம்பத்ய உறவுக்கு ஏங்கும் அதேநேரம் பழைய நினைவுகள் haunting செய்யும் தவிப்பையும் நிரூபா அழகாகக் கொண்டு வந்திருக்கிறார் இந்தக் கதையில்.
அலேட்டர் – உமாஜி:
மிகவும் வேடிக்கையாக ஒரு Sad storyஐ சொல்வதற்குத் தனித்திறமை வேண்டும்.
அலேட்டருக்கு இது இரண்டாவது சந்தர்ப்பம். இந்த முறை அவர் குழந்தையைக் காப்பாற்றாமல் விட்டுவிடப் போவதில்லை. அதே நேரத்தில் அவர் ஆசைப்படியே உடம்பில் ஒரு கீறல் இல்லாமல் உயிரும் போயிற்று. “கதை கேக்கிறவனுக்குத் தான் வாந்தி, குமட்டல் எல்லாம் வரும், அதுக்குள்ளேயே வாழ்ந்தவனுக்கல்ல”. எவ்வளவு உண்மை!
உமாஜியின் எழுத்தில் நல்ல Flow இருக்கிறது, ஒரு கதையை எப்படி Impressive ஆகச் சொல்ல வேண்டும் என்ற யுத்தியும் தெரிந்திருக்கிறது.
புனையம்- இராகவன்:
Meta fiction story. பெரும்பாலும் இந்த வகைமையில் புராணம், இதிகாசத்திலிருந்து கதைகள், கதைக்குள் கதையாக வருவதில்லை. இரண்டு கதைகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருக்கும். ஆனால் இங்கே கதையைப் படிப்பது வாசகன், படிப்பது அகலிகை கதை. இந்திரன் இங்கிருக்கும் நேரத்தில் கௌதமர் இந்திரன் வடிவில் இந்திரலோகம் போய்விட்டால்…….. அகலிகை கல்லாக வேண்டியதில்லை, சாபவிமோசனம் தேவையில்லை. புனைவில் எல்லாவித Possibilitiesம் எளிதாகக் கிடைத்து விடுகிறது. வித்தியாசமான கதை.