Riley Sager புனைப்பெயரில் எழுதும் அமெரிக்க எழுத்தாளர். பத்திரிகையாளராக, எடிட்டராக, கிராபிக் டிசைனராகப் பணிபுரிந்து முழுநேர எழுத்தாளராக மாறியவர். இந்தப் பெயரில் இவர் எழுதும் ஆறாவது நாவல் இது. இதைத் தவிர இரண்டு வேறு பெயர்களில் எழுதி வருகிறார்.
2017ல் இருந்து வருடத்திற்கு ஒரு நாவலாக எழுதி வருகிறார். இந்த நாவல் ஜூன் 2022ல் வெளிவந்தது. இதற்கு முந்தைய Lock Every Door மற்றும் Home Before Darkம் விமான நிலையங்களில் வாங்கியது பத்திரமாக அலமாரியில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. திரில்லர் நாவல்களைக்கூடப் படிக்க முடியாமல் புத்தகச்சுமை அழுத்துகிறது. இவரது அடுத்த நாவல் வருவதற்குள் கடைசியில் இருந்து முதலுக்குப் போய்விட வேண்டும்.
Caseyயின் அம்மா பிரபல நட்சத்திரம். Caseyயின் அப்பாவின் மறைவுக்குப் பிறகு பதின்மவயதில் தனிமை தாங்காது போதை மருந்துக்கு அடிமையாகிறாள். எப்படியோ பதினெட்டு வயதில் மீண்டெழுந்து அம்மாவின் பாதையிலேயே நடிகையாகிறாள். பிரபல நடிகையான பிறகு Len என்ற திரைக்கதை ஆசிரியரைக் காதலித்து மணக்கிறாள். ஐந்து வருட மணவாழ்க்கை மகிழ்ச்சியான காலம். ஆனால் அது நீடிக்கவில்லை. Len ஏரியில் மூழ்கி இறக்கிறான். தனிமை மீண்டும் தொந்தரவுசெய்ய இம்முறை மதுவில் விழுகிறாள். இழப்பு, தனிமைக்கு மதுவை விட நண்பன் யார்? Catherine என்னும் Neighbourஐ ஏரியில் மூழ்குவதில் இருந்து காப்பாற்றியதில் இருந்து Caseyன் வாழ்க்கை
upside down ஆக மாறுகிறது. பல இரகசியங்கள் வெளிவரப் போகின்றன.
Spying on the neighbours என்பது Morally சரியானதல்ல, சமயங்களில் Legallyயும் சரியானதல்ல. அது ஒரு மோசமான பழக்கம். அப்படித்தானே. ஆனால் எத்தனைமுறை உங்களுக்கு வேண்டியவர் Onlineல் இருக்கிறார்களா என்று பார்த்திருக்கிறீர்கள்!
Social media spying என்பது பலரால் எந்தக் குற்றஉணர்வுமில்லாது செய்யக்கூடியது.
Paranormal இந்த நாவலில் முக்கியமான விஷயம். கூடுவிட்டுக் கூடுபாய்வதென்பது இப்போது அமெரிக்க வாசகர்களுக்கு Goosebumbsஐ ஏற்படுத்துகிறது. நாமெல்லாம் சிறுவயதிலேயே வாய்மொழிக்கதைகளில் அதை பலமுறை கேட்டு விட்டதால், சட்டை மாற்றுவது போலத்தானே என்று அலட்சியமாகக் கடக்கிறோம். Riley Sager ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை நம்மை நாற்காலி நுனியில் உட்கார வைக்கிறார். திரில்லர் நாவல்களுக்கு அத்தியாவசியமான fast pacing மொழிநடை.
திரில்லர் படிப்பதென்பது ஒரு Addiction.