ஆசிரியர் குறிப்பு:
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பெண்ணியவாதி, ஓவியர் மற்றும் மனநல ஆலோசகர். கோவையைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என
பதினைந்து தொகுப்புகளுக்கு மேல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு.
இதற்கு முன்பே மூன்று சிறுகதைத் தொகுதிகள் எழுதியிருந்தாலும் தவ்வை என்ற நாவலின் மூலமே பரவலான கவனத்தைப் பெற்றார். நல்ல சிறுகதைகள்
அதிக உழைப்பைக் கோருபவை. ஒவ்வொரு மாதமும் ஏராளமான சிறுகதைகளின் வரவிற்கு நடுவில் ஒரு தனிக்கதை கவனத்தை ஈர்க்க அதில் அதிகப்படியான ஒரு விஷயம், புதிய கோணம், எதிர்பாராத ஒன்று நிகழ்வது போன்ற அம்சங்கள் தேவையாக இருக்கிறது.
கதைக்குள் ஒரு பிளாஷ்பேக் கதை பாணியில், சாம்பல் வரி, ஆகுதி போன்ற கதைகள். அமானுஷ்யம் கலந்த கதைகள்,
சாம்பல் வரிகள், சூத்திரம். ஒரு பார்வையாளர் கோணத்தில் சொல்லப்பட்ட கதை, ஹை எண்ட். பெண்ணியக் கருத்துகளும், பெண்ணியக் கதைகளும் தொகுப்பில் கணிசமாக இருக்கின்றன.
பிடிமானக் கயிறு, சூத்திரம், சீமாட்டி, முணுமுணுப்புகள் ஆகிய நான்குகதைகளுமே நன்றாக வந்திருக்கின்றன. பிடிமானக்கயிறு எம்.இ படிக்கும் மகளுக்கு படிக்காத அம்மா செய்யும் கீதாபோதேசம். சூத்திரம் கதை பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் Depth நிறைந்தது. சீமாட்டி நல்லதொரு கதை. இளவரசிகளை வேலைக்காரிகளாக்கும் நமது திருமணங்கள். இவை மூன்றிலுமே உயிரோட்டம் இருக்கிறது. முணுமுணுப்புகள். ஒருவரில் ஒருவர் சலித்துப்போன தம்பதியர்
மகள் பொருட்டு ஒத்தகருத்துடையவராகும் இயல்பான கதை.
தொகுப்பின் பல கதைகள் Flat ஆக முடிகின்றன. அகிலா கதைகளைக் கனமாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். சராசரிப் பெண்களை விட Exposure இவருக்கு பணியிலும், படிப்பிலும், பயணத்திலும் கூடுதல். அதைக் கதைகளில் Capitalize செய்ய வேண்டும். இந்தக் கதைகளில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் அழுத்தம் கூடியிருக்கும்.
உதாரணமாக முதல் கதையில் சமையல்காரம்மா எப்படி அந்த வீட்டுக்கு வந்து காப்பாற்ற முடியும்? ரகீலாவுக்கு உண்மையில் இவன் மீது பிரியம் என்றால் உயிர் மட்டும் ஒட்டும் சக்கையாக இருக்க விடுவாளா? இது போல் பல கேள்விகளை எழுதுபவர்கள் கேட்டுக் கொண்டாலே போதும். ஹை எண்ட் கதையின் சம்பவங்கள் இவர் பல முறை பார்த்தவை. அதனால் Realistic ஆகக் கதை நகர்கிறது. ஆனால் காட்சி சித்தரிப்பாகவே கதை முடிகிறது. ஒருவேளை எல்லோருக்கும் உதவிய வெள்ளைக்காரரின் மனைவியை நிறவெறியர்கள் கொன்றிருந்து, அதற்காக அவர் அவசரமாகக் கிளம்பியிருந்தால்…………
கதைகளை பல Sectionsஆகப் பிரித்துக் கொண்டு Finetune செய்தால் கடைசியில் நல்ல கதைகளாகிவிடும். அகிலாவின் Caliber என்ற Scaleக்கு சிலகதைகளே பொருந்துகின்றன.
பிரதிக்கு:
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 99404 46650
முதல்பதிப்பு ஏப்ரல் 2022
விலை ரூ. 130.
அருமையான விமர்சனம்
LikeLike