Sayaka, Convenience Store Woman என்ற நாவலின் மூலம் உலகெங்கும் பிரபலமானார். அதன்பின் Earthlings ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பானது. இது ஜூலை 2022ல் வெளிவந்த இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு (ஆங்கிலத்தில்).

முதல் கதையான A First Rate Materialல் ஒரு Alternate realityஐ உருவாக்குகிறார். அதில் தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களை விட இறந்த மனிதஉறுப்புகளில் செய்த ஆபரணங்களும், Furnituresம் பாஷனாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. ஒருவர் மிகவும் நேசித்தவர் இறந்ததும் அவர் தானம்செய்த கண்களை இன்னொருவர் முகத்தில் பார்த்தால் அவர் எதிர்வினை எப்படியிருக்கும்? இது போன்ற ஒரு Ideaவை இவர் ஆடைக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

தலைப்புக்கதை மிக வித்தியாசமான கதை. அதுவும் ஒரு Alternate reality தான். Life Ceremony என்பது இறந்தவர்களின் உடலை அவர் வீட்டார் சமைத்து, விருந்தினர்கள் சாப்பிட்டு விட்டு, அவர்களுக்கு விருப்பமான துணையுடன் உறவு கொள்வது. ஒரு இறப்பில் இருந்து பல பிறப்புகள் நேரும் என்ற நம்பிக்கையுடன், இறந்தவர்கள் பல உயிராய் உருவெடுக்கிறார்கள் என்ற நம்பிக்கையும். அந்த நிகழ்வைசுற்றி எழுதப்பட்ட கதை இது.

Hatching ஒருவருக்குள் பலர் இருப்பதைப் பற்றிய கதை. நாமே அலுவலகத்தில் ஒரு விதமாய், நண்பர்களுடன் இன்னொருவிதமாய், வீட்டில் வேறுவிதமாய் இருக்கிறோம். நாம் எதையும் முன்தீர்மானம் செய்யாமலேயே அவர்களுடன் பேசுகையில் நம் Body language, பேசும் தோரணை மாறிப் போகிறது. இப்படி ஐந்து விதமான காலகட்டங்களில் ஐந்து விதமாக இருந்த பெண், மணமாகும் போது அதில் எதை கணவனுக்குக் காட்டுவது என்று யோசிக்கும் கதை.

பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பில் Alternate Reality கதைகள் மட்டுல்லாது வேறுவேறு கதைக்கருக்கள் இருக்கின்றன. ஒன்றில் ஒருவர் உண்ணும் உணவு அடுத்தவர்களால் அசூயையாகப் பார்க்கப்படுவது, இன்னொன்றில் இரண்டு பெண்கள் Lesbian உறவு இல்லாமல் தோழிகளாகவே ஒரு வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேல் வாழ்வதும், மூன்று பிள்ளைகளை செயற்கை முறையில் கருத்தரித்து அவர்கள் வளர்ந்து வெளியேறி மீண்டும் இருவரும் இருப்பதும், இன்னொரு கதையில் இரண்டு பள்ளித் தோழிகளில் குழந்தை போல் உருவம் இருப்பவள் Cousinஉடன் Sex வைத்துக் கொள்வதும், பார்ப்பதற்கு கல்லூரி முடித்தவள்போல் தோற்றமளிப்பவள் Boy friend கூட இல்லாதிருப்பதும், வேறொரு கதையில் செடி, புல்லை மட்டுமே உண்ணும் Obsessionஐ வளர்த்துக் கொண்ட (ரத்னாபாயின் ஆங்கிலத்தின் கதையின் மையக்கருவும் இதுவும் ஒன்று) ஒருத்தி பற்றிய கதை.

Sayaka ஜப்பானில் அவரது சிறுகதைகளுக்காகவே மிகவும் பிரபலமானவர். முதல்முறையாக ஆங்கிலத்தில் அவரது கதைகள் வந்திருக்கின்றன. Strangeness என்பதை Normal என்று மாற்றிக் கொள்வது பல கதைகளில் நடக்கிறது. எதையும் உணர்வு பூர்வமாகச் சொல்லாமல், மாத்திரை அளவை அதிகரிக்காமல், Casual toneல் வாசகர்களுக்கு அதிர்வை ஏற்படுத்துவது இவரது பாணி. ஒருகதையில் திரைச்சீலையை Male gender மட்டுமன்றி கதைசொல்லியாகவும் ஆக்கியிருப்பார். அது எதற்கு என்பது கதை முடிகையில் தெரியவரும். நாற்பத்து மூன்று வயதில் Sayaka திருமணம் செய்ததில்லை, Sex ஒருமுறை கூட வைத்துக்கொண்டதில்லை. சொந்த வாழ்க்கையே Strange ஆக இருப்பவரின் கதைகள் அப்படி இல்லையென்றால் தான் ஆச்சரியம். ஜப்பானில் மட்டுமல்ல உலகெங்கும் அதிகம் வாசிக்கப்படும் ஜப்பானிய எழுத்தாளர்களில் ஒருவர் Sayaka.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s