வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன் :

கார்த்திக்கின் கதைகள் பெரும்பாலும் அடங்கிய தொனியில், தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் கூர்மையில், நுட்பமான விசயங்களைப் பேசுவதால் அதிக எண்ணிக்கை கொண்ட வாசகர்வட்டத்தை நம்பி எழுதப்படுவதில்லை என்று தோன்றுகிறது. ஆஸ்திரேலியா என்றில்லை, எங்கெல்லாம் நம் எண்ணிக்கை அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் ஸ்டார்லிங் தான். வெளிநாட்டவர் பார்வையில் அந்தப்பறவையைப் போல நாம் ஒரே இடத்தில் குவிந்திருப்பது போல் தோன்றினாலும், நமக்கிடையேயான ஆயிரம் உட்பிரிவுகள் வெளிப்பார்வைக்குத் தெரிவதில்லை. இந்து- முஸ்லிம் என்ற பரஸ்பர அசூயை மட்டுமல்ல, இன்னும் ஜாதி, வர்க்கம் என்று ஏராளமான பிரிவினைகள். ஒரு பிரச்சனை என்று வரும்பொழுது உற்றநண்பர்கள் மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் எதிரியாகிப் போகிறார்கள்.

கதை முதலில் சிட்னியை அறிமுகப்படுத்துகிறது. பின்னர் சிட்னியில் நம் வாழ்க்கையை வேறுநிலத்தில் வாழ்வதற்கு செய்த ஏற்பாடு. வீட்டை Sharing செய்து கொள்வது லண்டன் போன்ற வாடகை அதிகமான நகரங்களில் தொன்னூறுகளிலேயே ஆரம்பித்து விட்டது. காசை மிச்சம் செய்யவேண்டுமென்ற ஆர்வம், Privacyயின் எல்லைகளை விஸ்தரிக்கிறது. மனைவியே அதிகநேரம் கழிக்கவேண்டும் என்னும்போது அவளிடம் அனுமதி கேட்காதது தவறு தான் ஆனால் கேட்காத ஒரேகாரணத்திற்காக கணவனின் தவறைச் சொல்லிக்காட்டும் பெண்கள்……
கடைசியாக இனம் இனத்தோடு சேர்வது. எல்லா விசயங்களையும் பேசி, எதையுமே Judgementalஆகக் கொண்டு செல்லாமல், அடங்கிய தொனியில் இது போன்ற கதைகளை எழுதுவது எளிதல்ல.

பிறகு ? – தீபுஹரி:

பிறகுக்கு பின்னால் இருக்கும் கேள்விக்குறியிலேயே ஒரு நிச்சயமில்லாத எதிர்காலம் தொக்கி நிற்கிறது. தீபு, ஒரு சர்ரியல் உலகத்தில், இவ்வுலகின் உணர்வுபூர்வமான விசயங்களைக் கொண்டு வந்திருக்கிறார். Alternative reality ஒன்றை உருவாக்கும் போது, அந்த உலகில் பல Strange things நடப்பதை மக்கள் இயல்பாக ஏற்றுக் கொள்வார்கள். சமீப காலமாக அதிலிருந்து விலகி ஒன்றே ஒன்று மட்டும் வழக்கத்திற்கு மாறானதாக வைத்து வெகுசிலர் எழுதஆரம்பித்திருக்கிறார்கள். Sayaka Murata அவருடைய புதியநூலான Life Ceremonyயில் இதுபோலவே ஒரேஒரு Strangenessஉடன் வழக்கமான உலகநடப்பைக் கலந்திருப்பார்.
தீபுஹரி இந்தக்கதையில் சமகால எழுத்தைக் கொண்டுவந்தது மட்டுமன்றி கதையிலும் Globalnessஐக் கொண்டு வந்திருக்கிறார். உலகின் எந்த மொழி வாசகரும் இதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு புக்கர் பட்டியலிலும் ஒரு நாவலேனும் அம்மா-மகள் உறவை ஒட்டி வந்து விடுகிறது.
கீதாஞ்சலியின் Tomb of Sand, Avni Doshiயின் Burnt Sugar போல பல உதாரணங்களைத் தரலாம். தீபுஹரியின் இந்தக்கதை அம்மா-மகள் உறவின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. இந்தக் கதையின் Setting எதுவாக இருந்தாலும் Theme is more into relationship. எத்தனையோ வித்தியாசமான அம்மாக்கள், வித்தியாசமான மகள்கள். எழுதித்தீராத உறவு. தான் சொல்ல நினைத்ததை அழுத்தமாகப் பதிந்திருக்கிறார் தீபு. Good Job done. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடையார் – சர்வோத்தமன் சடகோபன் :

இதே கதையை நுட்பமாகச் சொல்லியிருக்க முடியும். நீதிக்கதை போல் முடிந்திருக்கிறது.

திரு டெய்லர் – அகஸ்டோ மொண்டரஸ்சோ- தமிழில் கயல்:

Weird fiction வகைமையைச் சார்ந்தது இந்தக் கதை. அமெரிக்காவின் Capitalism மற்றும் imperialism மீதான விமர்சனத்தை உயர்வுநவிற்சியுடன் சொல்லப்பட்ட கதை.
Banana Republicல் ஏற்றுமதி செய்யும் பொருள் அதிர்ச்சி அளிப்பது மட்டுமல்லாது, அமெரிக்கர்கள் எப்படி அடுத்த நாட்டினரின் உயிருக்குக் கிஞ்சித்தும் மரியாதை அளிப்பதில்லை என்பதையும் exagerrate செய்து சொல்கிறது. பொருளாதார அபிவிருத்திக்குக் கொடுக்கும் விலை என்ன என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். சில நேரங்களில் GDPஐ வைத்து அரசின் திறமையை மதிப்பிடுகிறோம். நல்லவையோ, கெட்டவையோ எல்லாமே கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறது. கயலின் மற்றுமொரு சிறந்த மொழிபெயர்ப்பு.

சிதையில் ஒளிரும் இரவு – இவான் கார்த்திக்:

இறந்த உடலுக்குப் பின்னால் பொங்கும் விருப்பு, வெறுப்புகள், பாவனைகள், தற்காலிக நெருக்கங்கள் எல்லாவற்றையும் இந்தக்கதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. குடும்ப இரகசியங்கள், சொத்து விவகாரம் என்று எல்லாமே கேள்விக்குறியாவதும் இப்போது தான். தெளிவாகத் தடையின்றி செல்லும் வகையில் எழுதியிருக்கிறார்.

அத்தம் – வைரவன்:

இறுதி எல்லோருக்குமே மரணம் தான். ஆனால் அதற்கான பயணத்தில் எத்தனை வித்தியாசமான வாழ்க்கைகள். கைவிட்டுப் போன கணவன் முன் எப்படியேனும் மகன் தலையெடுத்து பெருமை சேர்ப்பான் என்ற கனவு நிறைவேறாமல் மரித்துப்போன அம்மா. எதற்கும் உபயோகமில்லாதவனை எடுபிடியாக உபயோகிக்கும் நெருங்கிய நண்பன். கூட அமர்ந்து குடித்துவிட்டு இலவசஆலோசனை தந்து போகும் பலர். நடுநடுவே ராஜமார்த்தாண்டன் கவிதைகள். முழுகிக் கொண்டிருக்கும் கப்பலாக இவன். எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வந்திருக்கிறது இந்தக்கதை.

வாய்கள் வட்டங்கள் – சித்துராஜ் பொன்ராஜ்:

சித்துராஜிடமிருந்து மீண்டும் நல்லதொரு கதை. பெண்ணின் ஏழ்மையை உபயோகித்து maximum exploit செல்லும் பழைய கதை. ஆனால் சித்துராஜின் மொழியும் அதைச் சொல்லிய விதமும் புதிதானது, தனித்துவமானது. முதல் இரண்டு பகுதிகள் நடேசன் கோணத்திலும் கடைசி இரண்டு பகுதிகள் சுஜாதாவின் கோணத்திலும் சொல்லப்பட்ட கதை. நடேசனது கோணத்தில் ஒளிவுமறைவு என்பதே இல்லை. நீல மாத்திரையாலும் நடேசனுக்கு ஒரளவுக்கு மேல் உதவ முடியவில்லை. படுக்கையில் தோற்பதற்கு பகலில் வட்டியும் முதலுமாகப் பழிவாங்குகிறான் நடேசன். சுஜாதா ஒரு வார்த்தைக்கு மேல் பேசாதது போல அவள் பகுதியில் எல்லாமே ஒரு இரகசியத்தன்மை இருக்கிறது. சுஜாதா உண்மையில் அலட்சியம் செய்கிறாளா? சுஜாதா குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாளா? வீட்டிற்குள் நடக்கும் சுஜாதா அடுத்து என்ன செய்யப் போகிறாள்? வாசகரின் கற்பனைக்கு சுஜாதாவின் நடவடிக்கைகள் பாதியை விட்டிருப்பது இந்தக் கதைக்குத் தனி அழகைத் தருகிறது.

பற்று- வரவு -இருப்பு – காளிபிரசாத்:

Every debit has a corresponding credit என்பது அக்கவுண்டன்ஸி விதி. ஆனால் வாழ்க்கையில் சில பற்றுகளை விட வரவு பலமடங்கு அதிகம். மற்றொருவரை ஏமாற்றும் போது அது சாமர்த்தியம் என்றும் தன்னைப் பிறர் ஏமாற்றினால் நம்மை victim என்று தன்னிரக்கத்துடன் நினைத்துக் கொள்வதும் மனிதர்கள் பொதுவாகக் கடைபிடிப்பது.
https://vanemmagazine.com/%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa/

இழத்தலின் இன்பம் – ஸாதத் ஹஸன் மண்ட்டோ- தமிழில் ஜான்சி ராணி:

மண்ட்டோவின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று. வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த, தோல்வியடைவதில் ஆனந்தம் கொள்ளும் Cynic ஒருவனும், நடுத்தரவயது, விகாரத் தோற்றம் என்று பாலியல் தொழிலுக்கு வேண்டிய எல்லாமே எதிர்மறையாய் கொண்ட பெண்ணும் சந்திக்கும் போது……..
நம்பிக்கை என்பது மனப்பான்மை அது சூழலை வைத்தோ, வாய்ப்புகள் வைத்தோ வருவதில்லை. சிலர் எளிதாகத் தோல்வியை ஒப்புக்கொள்வதும் சிலர் கடைசிவரை போராடுவதும் இதனால் தான். ஜான்சியின் நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு.

கட்டம் – லட்சுமிஹர்:

வழக்கமான பாணியில் இருந்து விலகி, மிக எளிமையாக ஒரு கதை லட்சுமிஹர்ரிடமிருந்து.

இனி – அனங்கன்:

மொத்த கதையுமே உரையாடல்களில் தான்.
மகளுக்குத் தெரிந்த உண்மையும் மகனுக்குத் தெரிந்த உண்மையும் வெளி வருகிறது. சில குழந்தைகள் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு தான் பிறக்கவே செய்கிறார்கள்.

ஏழாவது வானத்தில் வீடு – முகம்மது றியாஸ்:

றியாஸின் கதை, வரலாறு தவறான காரணங்களினால் Repeat ஆவதைக் கூறுகிறது. விருப்பப்பட்டே சென்றாலும் வெளிநாட்டு வேலை என்பது உறவினர்களைப் பிரிந்து இருப்பது, சமரசங்களைச் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது. அது நன்றாக வந்திருக்கிறது இந்தக் கதையில்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s