Debbie பலகாலம் பத்திரிகையாளராகவும், BBC நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் எழுத்தாளராகுமுன் பணியாற்றியவர். இதுவரை ஆறுநாவல்களை எழுதியுள்ள இவரது, 2022ல் வெளிவந்த ஏழாவது நாவல் இது.
Debbie வரலாற்று நாவல்களை எழுதும் எழுத்தாளர். இதற்கு முந்தைய நாவலுக்கான ஆய்வின் போது, ஜெர்மானிய எஜமானியிடம் உறவு கொண்டதற்காக, மரணதண்டனை விதிக்கப்பட்ட அழகிய ருஷ்ய இளைஞனின் புகைப்படத்தைப் பார்க்கிறார். அந்த ஆய்வு அவரை Dachauக்கு
அழைத்து செல்கிறது. (ஆமாம் மேலைநாட்டு எழுத்தாளர்கள் உட்கார்ந்த இடத்தில் வரலாற்று நாவல்களை எழுதும் திறமை இல்லாதவர்கள்!) இதுவே ஜெர்மானியர்களின் முதல் வதைமுகாம். இங்கு தான் பல மருத்துவப் பரிசோதனைக்கு எலிபோல் மனிதர்களை உபயோகித்தார்கள். Munich Documentation Centre மற்றும் The Dachau Memorial Museum ஆகியவற்றிலிருந்து எண்ணற்ற தகவல்களைச் சேகரித்ததாகச் சொல்லும் இவர் WW-II நாவல்களை எழுதுவோருக்கு தகவல் சுரங்கம் இவை என்கிறார்.
17 வயது Anna, அவளுடைய ஒரே உறவான தந்தையை அடக்கம் செய்துவிட்டு வரும்பொழுது Hansஐ பார்க்கிறாள். Hans ஒரு டாக்டர். தன்னால் பெரிய சாதனைகள் செய்யமுடியும் என்று நம்பும் டாக்டர். புதிதாக ஆட்சியைப் பிடிக்கும் ஹிட்லரால் நாட்டின் வறுமைநிலையை மாற்றி, சீரமைக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கை Hansக்கும் இருந்ததால் SSல் சேருகிறான். Annaவும் Hansம் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் செய்து கொள்கிறார்கள். Hansக்கு SS என்பது என்னவென்று தெரிந்திருந்தால் மனைவியுடன் நாட்டை விட்டு ஓடியிருப்பான். அவனுக்குத் தெரிய வரும்பொழுது அவனால் தப்பிக்க முடியாமல் போகிறது. உணர்வுபூர்வமாக அவன் மனைவியை நிரந்தரமாக இழக்கிறான்.
Holocaust கதைகள் எத்தனை முறை படித்தாலும், முதுகில் வேர்ப்பது நிற்பதேயில்லை. Sadist கும்பல் ஒன்று எத்தனையோ லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பறித்து கொண்டது. திறமை சிறிதும் இல்லாத ஒரு டாக்டர் கைதிகளை ஐஸ் பதத்தில் இருக்கும் நீரில் மூழ்கவைத்து, அவர்கள் உடல் துடிப்பதை நிறுத்திவிட்டதும், சூடான நீருக்கு உடன்மாற்றி எத்தனை பேர் சட்டென்று மாறும் தட்பவெப்பநிலையில் உயிர் பிழைக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்கிறான். இது போல் பல ஆராய்ச்சிகள் அந்த வதைமுகாமில்.
புதிதாக மணம் செய்வோர் இருவரும் அவர்களது தாத்தா-பாட்டி வரை கலப்பில்லாத ஆரிய இனம் என்பதை நிரூபிக்க வேண்டும், அதிக ஆண் குழந்தைகளை நாட்டிற்குப் பெற்றுத்தர வேண்டும், அரசைப் பற்றி சிறிய குறை சொல்வதும் கூடாது என்று சர்வாதிகார ஆட்சி தனிமனித உரிமைகளிலும் தலையிடுகிறது.
Anna ஒரு அறியாப் பெண்ணிலிருந்து Strong woman ஆகும் வரை நடக்கும் உருமாற்றம் நன்றாக வந்திருக்கிறது. Hansஐ வெறுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. Humanityஐ நம்புபவர்கள் யாரென்றாலும் செய்வது, Hans காதல் தான் இந்த நாவலிலேயே சக்தி வாய்ந்த காதல். ஆனால்
Anna- Alex காதலைப் புரிந்துகொள்ள முடியவில்லை( நல்லவேளையாக அந்தப் பகுதி புனைவு) Alexன் தனிப்பட்ட வாழ்க்கை எவ்வளவு துயரம் மிகுந்ததாக இருப்பினும் அவளது காதலுக்குத் தகுதியில்லாதவன் அவன்.
தோற்பது உறுதி என்பது தீர்மானமானதும் SS Officers தலைமறைவாகி விடுகிறார்கள். பலரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியவில்லை. Hans கதை உண்மைச் சம்பவம். அமெரிக்கா Hansக்கு Immunity அளித்து நேசநாடுகள் அவர் மீது வழக்குத் தொடரமுடியாது பார்த்துக் கொள்கிறது.
நாஸிகள் அமெரிக்கப்படைகளிடம் சிக்கினாலும் பிரான்ஸ், ருஷ்யாவிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். Himmler பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார். பல லட்சம் மக்கள் இறப்பிற்கு, சித்திரவதைக்குத் தகுந்த தண்டனை அளிக்கப்பட்டதாக சொல்ல முடியாது.
Debbie தொடர்ந்து வரலாற்று நாவல்களை எழுதுவதால் Factsஐ சேகரித்து புனைவுக்கு நடுவே கலந்து விடுவது இவருக்கு எளிதாகப் போகிறது . நாற்பதுகளின் ஜெர்மன் மக்களின் வாழ்க்கைச்சிதறல் நாவலில் கிடைக்கிறது. நானூறு பக்கங்களுக்கு மேல் எங்குமே தொய்வில்லாமல் விரையும் நாவல். நெருக்கடியான காலகட்டத்தில் Survival என்பது கேள்விக்குரியாக மாறும் பொழுது Morality என்பது ஆண், பெண் இருவருக்குமே அவசரமாகத் தொலைந்து போகிறது.