வெனிலா – குமார செல்வா:

வெனிலா வாசனையைத் தருவது போலவே பாலுணர்வையும் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. நிர்மலா டீச்சரின் பாலுணர்வு தான் மொத்தக்கதையும். voyeurism, சிறுவர்களுடன் Misadventures என்று அத்தனையும் செய்து பார்க்கிறாள் நிர்மலா. சம்பாத்தியம், டியூஷன், தோட்டம் என்று மெல்லக் கதைக்குள் புகுந்த பின்னரே Main story வருகிறது. டீச்சரின் கணவனின் Flashback எளிதாகச் சொல்லி முடிக்கப்பட்டிருக்கிறது. அவன் கதையில் மட்டுமல்ல, வாசகர்களுக்கும் ஒன்றும் பிரயோஜனமில்லை, Score செய்வது எல்லாமே நிர்மலா டீச்சர் தான். கோழிகளுக்குப் பெயர் சூட்டுவது, நேரு போட்டோவைத் தான் முதலில் மாட்டவேண்டும் என்று அடம்பிடிப்பது என்று கதை முழுதுமே நிர்மலா டீச்சர் தான். நல்ல Presentation. பாராட்டுகள் குமார செல்வா.

காமம் – வளவ. துரையன்:

இப்போது புக்கர் பரிசை வென்ற Tomb of Sandல் இருந்து Hang Womanல் இருந்து பல நாவல்களில் புராணக்கதைகள் அப்படியே சொல்லப்படுகின்றன. மீட்டுருவாக்கம் செய்வதற்கு வலுவான கோணம் வேண்டியதாக இருக்கிறது (உதாரணம் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம்). தசரதன் கைகேயியைப் பார்த்த உடனேயே அவள் எது கேட்டாலும் தருவதற்குத் தயாராக இருக்கிறான். கைகேயி என் மகனே அரசாள வேண்டும் என்பதற்கு ஒத்துக் கொண்டு திருமணம் செய்கிறான். பின்னர் கைகேயி தேர்சக்கரத்தில் கட்டை விரலை கொடுத்து தசரதனைக் காப்பாற்றுகிறாள். இருவரங்கள் தருவதாக தசரதன் வாக்களிக்கிறான். ஏற்கனவே கொடுத்த வாக்கிற்கு ஒரு வரத்தை வீணாக்குகிறாள் கைகேயி.

ஆசீர்வதிக்கப்பட்டவன் – லட்சுமிஹர்:

மூன்றாவது கதையும் காமத்தைச் சுற்றித்தான். வடிகால் இல்லாதவன் வரிசையாகக் காதலிப்பது பற்றிய கதை. பார்க்கும் எல்லாப் பெண்களையும் Sincereஆகக் காதலிக்கத் தொடங்குவது கோவிட்டை விடப் பெரிய நோய். மருந்தே கிடையாது. Neat ஆக எழுதியிருக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணின் பெயர் அதுவாக இருக்க வாய்ப்பில்லை.

பிரதிக்கு:

தனி இதழ் ரூ.50
மணிகண்டன் 99761 22445

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s