குதிரை வண்டில் – ச.ஆதவன்:
கதைகள் ஒரு சம்பவத்தையோ, ஒரு புறக்காட்சியையோ, பிரச்சனயையோ, உணர்வையோ ஏதாவது ஒன்றை மையமாக வைத்து எழுதப்படலாம். ஆனால் அது வாசகர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விழைய வேண்டும். இது அழிவு, பஞ்ச காலத்தைப் பற்றிய வர்ணனைகளுடன் நின்று விடுகிறது.
கடல் என்னை நேசிக்கிறது- மியா கூட்டோ
மியா கூட்டோவின் Sleepwalking Land அவரைத் தொடங்குவதற்கு சரியான புள்ளி. இந்தக் கதை அவருடைய புகழ்பெற்ற கதை. கவர்ச்சி, காமத்தில் ஆரம்பிக்கும் கதை, பல இரகசியங்கள், கொலை, Superstions என்று பல விஷயங்களைக் கடந்து மற்றொரு இரகசியமும் வெளியாகுவதில் முடிகிறது. கூட்டோவின் கதைகளில் வன்முறையான நிகழ்வு கூட அதை ஏதோ கண்டிப்பாக செய்து தான் தீரவேண்டும் என்ற தொனியில் வரும்.
மழை – மியா கூட்டோ:
மழை நெடிய உள்நாட்டுப்போர் முடிந்ததும் வருகின்ற நம்பிக்கையின் குறியீடு. சிந்தப்பட்ட இரத்தத்தை எல்லாம் மழை துடைத்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்த தமிழ்வெளி, மியா கூட்டோ சிறப்பிதழ் போல் அவரது நெடுங்கதை, சிறுகதை, நேர்காணலுடன் வந்திருக்கிறது. ஜூம்பா லஹிரியின் புதியநூலில் இருந்து ஒரு கட்டுரையை ச.வின்சென்ட் ஆச்சரியப்பட வைக்கும் எளிமையுடன் மொழிபெயர்த்து இருக்கிறார். நல்ல கட்டுரை அது. இவற்றைத் தவிர எல்லாக் கட்டுரைகளும், கவிதைகளும் தரமாக வந்திருக்கின்றன.
பிரதிக்கு :
தனி இதழ் ரூ.120.
தொடர்புக்கு 9094005600