பிறிதொரு ஞாயிறு – ஜெகநாத் நடராஜன்:
காத்திருப்பில் காதல் வருவது எப்போதும் நிகழ்கிறது. விவாகரத்து ஆன விஷயத்தை மாஸ்க் அணிந்த Strangerஇடம் எதற்கு சொல்கிறாள்?
ஒழிக, உங்கள் துப்பாக்கிகள் – கௌதம சித்தார்த்தன்:
பின் நவீனத்துவக் கதை சொல்லலில் ஒரு மேஜிக் இந்த சிறுகதை. Jump Cut methodல் கதை அழுத்தமான ஒரு உணர்வைப் பதித்துச் செல்கிறது. அதரச்சிணுங்கல், ஆஹா.
கணேஷ்பீடி – மனுஷி:
சிறுமியின் பார்வையில் நகரும் கதை. மௌனங்களின் ஓலம் சிலநேரங்களில் செவிப்பறையில் பலமாக மோதும். பெற்றோரிடையே இருக்கும் பிரச்சனை கடைசிவரை மகாவிற்குத் தெரிவதில்லை. அடுத்து மகா என்ன செய்யப் போகிறாள்?
மூடுபனி – மணி.எம்.கே.மணி:
மணியின் வழக்கமான Touch இந்தக் கதையில் Missing என்று தோன்றுகிறது. கிரிஜாவின் குடும்ப புகைப்படத்தை மட்டுமே நம்பி எழுதிய கதை போல் தோன்றுகிறது.
திற- சாதத் ஹூசன் மண்டோ- தமிழில் ஜான்சிராணி:
Partition story. என்னுடைய வருத்தமெல்லாம் இவ்வளவு வெறுப்பை ஏற்படுத்தி இரத்த வெள்ளத்திற்குக் காரணமான ஆங்கிலேயர்கள் குண்டூசிக் காயம் கூட இல்லாமல் தப்பிப்போனது. இறந்தாளா இல்லையா என்று கூடப் பார்க்காத மருத்துவரும், அனிச்சைச் செயலாக ஆடையைக் கீழிறக்கும் பெண்ணும். மண்டோவை ஏன் மாஸ்டர் என்று சொல்கிறார்கள் என்பது இது போன்ற கதைகளில் தெரியும். நல்ல மொழிபெயர்ப்பு ஜான்சி.
முபீன்சாதிகாவின் குறுங்கதைகள் –
முதல் கதை Sci fi கதை. பின்னொரு காலத்தில் நடக்க வாய்ப்பிருப்பது. Robotsக்கு மனித உணர்வுகள் வருவது குறித்து Ishiguro ஒரு நாவல் எழுதி இருந்தார்.
இரண்டாவது கதையில் எவ்வளவு தான் அமைதியைப் போதித்தாலும் வாள் அதன் பணியைச் செய்தே தீரும். இரண்டு கதைகளும் நன்றாக வாந்திருக்கின்றன.
சின்னச்சின்ன முத்தங்களால் குதூகலிப்பேன்- எம்.எம்.நௌஷாத்;
மருத்துவர் எழுதும் பிரசவ அறைக்கதைகளின் Authenticitஐக் கவனியுங்கள். இது உண்மையில் இரண்டு கதைகள். ஒரே Crisis இரண்டு முடிவுகள். கதை நன்றாக வந்திருக்கிறது.
பகுப்பி- கண்ணன் ராமசாமி :
செடியும் ஒரு கதாபாத்திரம். ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்னொருவரது கட்டளைக்குக் காத்திருக்கிறார்கள். செல்வம் மந்திரியை என்ன செய்யப் போகிறான்?
ஈரம் – ஐ.கிருத்திகா:
கண் முன்னே கதைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. சிலர் கவனிக்கிறார்கள், பலர் கவனிக்காமல் கதைகளைத் தேடித்தேடி அலைகிறார்கள். கிருத்திகா தெரியாத விஷயத்தை எழுதுவதில்லை, அதை எழுதும் போது அது சார்ந்த எல்லா விஷயங்களையும் கதைகளில் கொண்டு வந்து விடுகிறார். கிருத்திகாவின் கதைகளில் பெண்கள் தாங்கள் மட்டுமே இருக்கிறோம் என்று சத்தமாகப் பேசிக்கொள்வது கேட்கும். ‘ இதுல நாலு தடவை கழுவினா தெர தன்னால கிழிஞ்சிடும்” . அம்மாவின் பார்வையில் மகளின் Bedwetting habit நன்றாக வந்திருக்கிறது. அப்புறம் அந்த ஆங்கில வார்த்தைகளை அடிக்கடி சொல்லிப் பார்த்துக் கொள்வது fantabulous.
பூர்ணிமா என்ற பூஷணி- ம.கண்ணம்மாள்:
பூர்ணிமா என்ற சிறுபெண் பூஷணியாக மாறியதற்கிடையேயான பயணம் கரடுமுரடானது. சத்தமே பிடிக்காத பெண் கும்பலின் நடுவில் சிக்கிக்கொள்வதும் தாண்டி என்னென்னவோ நடக்கிறது. கடைசியில் ஒரு Trigger point எல்லாவற்றையும் மாற்றுகிறது.
நந்து – தேவசீமா:
முதல் கதை தானே இது? வேலைக்காரி வராத பிரச்சனையாகத் தொடங்கும் கதை
hysteria விற்குப் போய், பேய்க்கதையாக முடிகிறது. குழந்தைகள் வளர்ந்தபின் வேலைக்காரியுடனான உறவிற்கும், திவ்யா-சுசி உறவிற்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
றெதி நெந்தா – நீலாவணை இந்திரா:
Srilanka சமீபகாலத்தில் Literary Mapல் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. சென்ற முறையும், இம்முறையும் Lankan representation bookerல், Common wealth stories, Flash Fiction என அடிக்கடி International circleல் பெயர்கள் வந்து கொண்டிருக்கின்றன. தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழுக்குத் தாங்காது என்று சிலவற்றை நீக்கச் சொன்னேன் என்றார். இந்த லட்சணத்தில் நாம் மாஸ்டர் அவருக்கு நூறு அஸிஸ்டன்ட் என்று குண்டுச்சட்டிக் குதிரையை லகானை விடாமல் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கதையை எழுதியவர் ஒரு கல்லூரி மாணவராம். நம்பவே முடியவில்லை. ஒரு வாழ்க்கை, ஜாதி வேறுபாடு, Customsஐக் கதையில் இயல்பாகக் கொண்டு வந்திருக்கிறார். முதலிரவு அன்று கட்டைவிரலை அறுத்து மெத்தையில் கறை ஏற்படுத்துவது தமிழ் நாட்டிலும் நடந்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள், எழுத்து உங்களுக்கு இயல்பாக வருகின்றது.
ரகசியா – மலர்விழி:
ரகசியா உளவியல் கதை. தனிமை அதற்கென்று ஒரு துணையைத் தேடிக்கொள்கிறது. இன்பாவின் அம்மா சொன்ன மகிஷாசுரமர்த்தினி கதை, கடைசியில் உண்மையில் நிகழப் போகிறது.
மரணம் என்றொரு புள்ளியில் – சுரேஷ் பரதன்;
வேகமான வாசிப்புக்கு உகந்த கதை. whodunit பாணியில் எழுதியிருக்கிறார். வீட்டுப்பத்திரத்தை வைத்து என்ன செய்ய முடியும்? கஞ்சா மற்றும் Flight குறித்த விவரங்களை ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.
செக்குமாடு – ஆர்த்தி சிவா:
உரையாடல்கள் மூலமாகவே கதையை நகர்த்தும் வழக்கம் குறையும் காலத்தில் ஆர்த்தியின் இந்தக்கதை உரையாடல்களின் வழி செல்கிறது. திருமணம் செய்து கொள்பவர்களில் ஒருவருக்குத் தடித்ததோல் இருந்து விட்டால் யாதொரு பிரச்சனையுமில்லை.
துக்குமணி – கவிஜி;
மனச்சிதைவு அடைந்த பெண்கள் தெருக்களில் பெரும்பாலான நேரங்களில் வயிற்றைத் தள்ளிக் கொண்டுதான் நிற்கிறார்கள். நல்லவர்கள் நிறைந்த தேசம். கிறுக்கு வாத்தியார் மட்டும் விதிவிலக்கா என்ன?
பூக்குழி – மதுரா:
அம்மன் மலையேறுவதற்குள் எப்போதும் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிப்பது நடக்கிறது. நாச்சிகள் இப்படி இருக்கிறவரை சோமுக்களும் அப்படியே தான் இருப்பார்கள்.
சுலக்சனா – தேவிலிங்கம்:
Mythologyஐ மாற்றி வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் கதை. ஆண்களின் வீரத்திற்கு எப்போதும் விலை கொடுப்பது பெண்கள். இரண்டு கதைகள் ஒரு மையப்புள்ளியில் இணைவது நன்றாக வந்திருக்கிறது.
த்வனி – தாட்சாயணி:
Dystopiyan story. கதை முழுக்க பறை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தாட்சாயணி வழக்கமான மொழிநடையிலிருந்து விலகி இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.
நாய்க்குட்டியின் செல்லம்மா – பாரத் தமிழ்:
நன்றிக்காக உயிரை விடும் நாயின் கதை.
கடமை கண்ணியம் தட்டுப்பாடு – மலர்வண்ணன்:
ஆங்கிலேயர் காலத்தில் காவல்துறைக்குக் கொடுத்த அதிகாரத்தை அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. வானளாவிய அதிகாரம். நீதிமன்றங்கள் விரைவாக இயங்கியிருந்தால் காவல்துறையினரின் மேல் ஏராளமான கேஸ்கள் போடப்பட்டிருக்கும். சந்தேககேஸ் என்று பணம் பறிப்பதற்கு அவர்கள் மதத்தை எல்லாம் பார்ப்பதில்லை. கதையில் வரும் பெயர் தேவையில்லை.
ஊழி.தாண்டவம் – க.மூர்த்தி:
விவசாயிக்கும் காட்டுப்பன்றிகளுக்கும் வாழ்வாதாரத்திற்கான துவந்த யுத்தம்.
வட்டார வழக்கு மூர்த்தியின் கதைகளின் சிறப்பு. விவசாயம் குறித்த பல விவரணைகள் ரசிக்க வைக்கின்றன.
ஜிங்கா – நாச்சியாள் சுகந்தி:
Child custody என்பது இந்தியாவில் இன்னும் சுமுகமாக நடப்பதில்லை. குழலியின் கோணத்தில் சொல்லப்படும் கதையில் கணபதி முழுக்கவே நல்லவனாக வருவது கதைகளில் எப்போதாவது தான் நிகழ்கிறது.
பூனாஸ் – பிறைமதி குப்புசாமி:
வளர்ப்பு மிருகங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறி நம் கண்முன் மரித்து விடுகின்றன.
துயரம் நெருங்கினவர்கள் பிரியும் அதே அளவு, சமயத்தில் கொஞ்சம் கூடுதல்.
அரவம் – அப்பு சிவா:
பாம்பு பிடிப்பதைச் சுற்றி நடக்கும் பேச்சு.
Mass Behaviour இந்தக் கதையில் நன்றாக வந்திருக்கிறது. பதினைந்து அடிக்கும் இருபது அடிக்கும் நிறைய வித்தியாசம் இல்லையா?
பலி ஆடுகள் – ராஜேஷ் ராதாகிருஷ்ணன் :
ஆடு சொல்லும் கதை. ஆட்டுக்கதை தானே என்று அலட்சியம் செய்யமுடியாது, இவை உலகமொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்புப் பெற்றவை.
பாம்பின் கால் – ச. கனியமுது:
பெண்கள் அவர்களை அறியாமல் ஒரு இடத்தை அழகாக்கி விடுகிறார்கள், எழுந்து போகும் போது வெளிச்சத்தையும் அவர்களுடன் எடுத்துக்கொண்டு இருண்மையை விட்டுச் செல்கிறார்கள். பேசாத பெண்ணின் மேலெழும் காமம் நூறு என்றால் தொடர்ந்து பேசிவரும் பெண்ணின் மீதான காமத்தின் எண்ணிக்கை ஐந்து.
ஈரம் உலரா உதடுகள் – லதா சரவணன் :
இறந்தவனின் ஆன்மா எல்லா இரகசியங்களையும் சொல்ல ஆரம்பிக்கும் கதை. உடன் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாத விஷயங்களை கல்லறையில் புதைக்க விடாமல் ஆன்மா தெருவெங்கும் சிதறினால் என்னவாகும்?
உணர்வில்லா உறவுகளின் கீறல்கள் – நிழலி:
இடையில் பாலினம் மாறுவதைக் குடும்பத்தினர் உலகம் முழுவதுமே அவமானமாகக் கருதுகிறார்கள். திருவாய்மொழி கூட ஆணல்லன் பெண்ணல்லன் என்று சொல்லி விட்டு அடுத்த வரியில் அவசரமாக விளக்கம் சொல்கிறது. இந்தக்கதையில் அண்ணனின் எதிர்வினை?????
வழித்தடம் – கார்த்தி டாவின்ஸி:
பொதுவழியை ஆக்கிரமிப்பு செய்வது புதிதான விஷயம் அல்ல. செய்பவன் செல்வாக்கு உள்ளவன் என்றால் மற்றவர்களும் அதை அனுசரித்துப் போகப் பழகிக்கொள்கிறார்கள்.
பெரும் பறவை – சத்யஜித்ரே- தமிழில் எஸ்.அற்புதராஜ்:
ரேயின் Horror stories இன்று கூட படிப்பதற்கு சுவாரசியமானவை. எத்தனையோ மீல்லியன் ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன பறவையினத்தில் ஒன்று இந்தக் கதையில் திரும்பி வருகிறது. நல்ல மொழிபெயர்ப்பு.
ரோமன் ரேன்ஸ் எனும் சேவல் – தரணி ராசேந்திரன்:
சிறுவர் உலகத்திற்கும் பெரியவர் உலகத்திற்குமுள்ள வித்தியாசம் வளர்ப்புச் சேவல் மூலம் சொல்லப்படுகிறது.
ஒரே நாளில் வாசிக்க சவாலை ஏற்படுத்தும் எண்ணிக்கையுள்ள கதைகளைக் கொண்டு கலகம் சிறுகதைச் சிறப்பிதழ் மலர்ந்திருக்கிறது. இதன் பின்னான அபார உழைப்பைக் கண்டு கொள்ள முடிகிறது. வேறெப்போதையும் விட அதிகமான அளவில் இவ்விதழில் பெண்கள் பங்களிப்பு கணிசமாக உள்ளது. பெண்கள் பங்களிக்காத இலக்கியம் ஒருபுறத்தை மட்டும் பார்த்த தட்டை வாழ்க்கையைச் சொல்லிப் போகும். கண்ணம்மாள், தேவசீமா உள்ளிட்ட பலர் புதிதாகக் கதை எழுத வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் பல கதைகள் கூடுதல் கவனம் கொடுத்துச் செதுக்கினால் மிளிரக்கூடிய கதைகள். சில கதைகள் முட்டிக்கால் போட்டு வாய்ப்பாடு சொல்லும் பழைய அனுபவத்தை மீட்டுத்தந்தன. நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் போகத் தான் செய்யும், ஒன்றும் செய்வதற்கில்லை. எப்படியாயினும் சந்தோஷ் குமாரின் இந்தப்பணி சிறப்பானது. இதிலிருந்து பத்துபேரேனும் தொடர்ந்து எழுதி சாதனைகள் படைக்கட்டும்.
நட்சத்திர எழுத்தாளர்களின் மத்தியில் இடம்பெறுவதென்பதையும் தாண்டி தங்களது விமர்சனம் தாங்கி நிற்கையில் பலியாடுகளும் ஆனந்தம் கொள்ளத்தான் செய்யும். ஒவ்வோர் கதைக்கும் அளித்திருக்கும் ஒருவரி, இருவரி விமர்சனமே கதைகளை வாசிக்கத் தூண்டுவதாயுள்ளது… மகிழ்வும் நன்றிகளும்…
LikeLike