Bulawayo ஜிம்பாவேயில் பிறந்த எழுத்தாளர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், MFAவும் முடித்தவர். ஏற்கனவே இவரது மற்றொரு நாவலுக்காக புக்கர் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர். 2022ல் வெளிவந்த இந்த நாவல் புக்கர் நெடும்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Zimbabwe அரசியல் பற்றிய குறைந்தபட்சத் தகவல்களையேனும் படித்துவிட்டு இந்த நாவலை வாசிப்பது நல்லது. Mugabeயின் தொடர்ந்த, 37 வருட சர்வாதிகார ஆட்சியில்
Mnangagwa பதவிநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டு, ஆட்சிக்கு வரும் அதே வரலாறு இந்தக் கதையில் புனைவாகிறது. அந்தப் புனைவை Animal farm நாவலின் inspiration மூலமாகச் சொல்கிறார். ஆர்வெல்லின் புத்தகத்திலும் மனித எஜமானரை கவிழ்த்து தங்களில் ஒருவரைத் தலைமையாகத் தேர்ந்தெடுத்த மிருகங்கள் படும்பாடே கதை.

Political Satire இந்த நாவல். ஆப்பிரிக்காவில் Jidada என்ற கற்பனை நாட்டில் நடக்கும் கதை. ஆனால் ஒவ்வொரு சம்பவமும் Zimbabweயின் Contemporary historyஐ மையமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. முதல் அதிபர் Old Horse என்று அழைக்கப்படுகிறார். அவரது மனைவி அதிபரின் வாய் போல் தொடர்ந்து பேசுபவர். புது அதிபர் புதுக்குதிரை என்று அழைக்கப்படுகிறார். Animal Farm போலவே பழையதற்கும் புதியதற்கும் ஆட்சியில் பெரிய வித்தியாசமில்லை. முதல் ஆட்சியில் என்ன பிரச்சனைகள் இருந்தனவோ அவை புதிய ஆட்சியிலும் அப்படியே இருக்கின்றன.

Destinyயும் அவளது அம்மாவும் அரசியல் நாவலுக்கு வேறு பரிமாணத்தை அளிக்கிறார்கள். Destiny அவளுடைய அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டும், பிரச்சனைக்குரிய கடந்தகாலத்தைச் சரி செய்ய வேண்டும், இதற்கிடையில் அவள் மீண்டும் ஊருக்கு வந்த நேரத்தில் புதிய அரசாங்கம் உருவாகுகிறது. அதற்கு எதிராகக் குரல்கொடுத்து அரசியல் சுழலுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறாள்.

எப்போது உணவுக்காக, எரிபொருளுக்காக, மருந்துக்காக, வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பிக்கிறார்களோ அப்போது அவர்களது அரசு தோற்று விட்டதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. தோற்று விட்டோம் என்பதை ஒப்புக்கொள்ளாது எதிர்ப்பாளர்களின் வாயைக் கட்ட நினைக்கும் போது அங்கே இரத்தம் பெருக்கெடுப்பது தவிர்க்க இயலாததாகிறது.( ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி நிகழ்வுகளுக்குப் பின் பேரமைதியைக் கொள்ளும் தமிழ்நாடு விதிவிலக்கு. )

தேர்தலின் போது செய்யும் Tweetகளில் இருந்து, பொதுமக்கள் மெய்நிகர் உலகில் அடைக்கலமாவதும், அது தரும் முகம்பார்க்காத சுதந்திரத்தில் அரசுக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்புவதும் Zimbabweக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்கும் பொருந்தும். அதே போலவே எதையெல்லாம் எதிர்த்து ஆட்சிக்கு வந்தார்களோ, அவர்களே முன்பு எதிர்த்ததை எல்லாம் தவறாமல் செய்வதும் உலகின் எந்த நாட்டுக்கும் பொதுவான விஷயம்.

மனிதர்களே இல்லாத ஆனால் மனிதர்கள் செய்யும் எல்லாச் செயல்களையும் விலங்குகள் செய்யும் நாவல் இது. Bulawayoன் பெரிய Gift, அவரது Powerful language, இதை Develop செய்திருக்க வாய்ப்பில்லை, இயற்கையாக வந்ததாக இருக்கும். Post Colonial Fable என்று இந்த நாவலைச் சொல்கிறார்கள். எந்த சித்தாந்தங்கள் வழக்கொழிந்து போனாலும் போகும் ஆனால் All Men are equal but some are more equal than others என்பது மட்டும் மனிதகுலம் இருக்கும்வரை இருந்தே தீரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s