Joy Fowler அமெரிக்க எழுத்தாளர். இவர் Fantasy, Science Fiction , YA என்று வெவ்வேறு வகைமைகளில் எழுதும் Multi-genres author. இவரது Jane Austen’s Book Club என்ற நாவல் பலத்த வரவேற்பைப் பெற்றதுடன், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இந்த நாவல் இவ்வருட புக்கரின் நெடும்பட்டியலில் ஒன்று.

“The War is eating my life out, I have a strong impression that I shall not live to see rhe end”

  • Abraham Lincoln

Booth என்பது குடும்பப்பெயர். Junius Brutus Booth அவரது மகன் Edwin Booth ஆகியோரால் நினைவுகூரப்பட்டிருக்க வேண்டிய குடும்பப்பெயர். இருவருமே Shakespearian Theatre Artists. பெரும்புகழ் பெற்றவர்கள். ஆனால் Booth என்ற பெயர் John Wilkes Booth என்ற பெயருடன் வரலாற்றில் நீக்கமுடியாமல் இணைந்து விட்டது. John Abraham Lincolnஐக் கொன்ற கொலையாளி.

Junius முறையாக மணம் செய்யாத பெண்ணுடன் கிராமத்தில் பண்ணை ஒன்றை வாங்கி ரகசியமாகக் குடியேறுவதுடன் நாவல் ஆரம்பிக்கிறது. இந்த தம்பதியருக்குப் பத்து குழந்தைகள் பிறந்து, ஆறு பிள்ளைகள் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர். ஒவ்வொரு குழந்தை பிறப்பதில் ஆரம்பித்து, சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள், அவர்கள் வளர்வது என்ற குடும்பக்கதையோடு, ஆபிரஹாம் லிங்கனின் கதையும் சேர்ந்து வருகிறது.

சாதாரணமாக இந்த நாவல், லிங்கன் மற்றும் ஜான் இருவரை மையக்கதாபாத்திரங்களாக வைத்து நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் Rosalie என்ற மூத்தபெண் வாயிலாகக் குழந்தைகள் பெரியவர்களாவது, அவளது அப்பாவின் சிறப்புகள், கீழ்மைகள் என்று ஆரம்பக்கதை செல்கிறது. பின் மீதிப்பகுதியை Asia, Edwin என்ற மற்ற பிள்ளைகள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் Civil War நடந்து முடிகையில் கதையும் முடிகிறது. South (Confederasy) மற்றும் North (Union) இரண்டுக்குமிடையிலான போராட்டமே இந்த உள்நாட்டுப்போர். அதற்கு முக்கிய காரணம்
அடிமைத்தனத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும். லிங்கன் பெரும் எதிர்ப்பாளர். ஜான் தெற்குப்பகுதியின் தீவிர ஆதரவாளர். Ideologyக்காக நடைபெறும் கொலைகளில் தலைவர்களது குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, கொலையாளியை முழுவதும் குரூரமாகப் பிம்பப்படுத்துதல் எப்போதும், எங்கேயும் நடைபெறும் விஷயம். ஐந்து Siblings மற்றும் அவர்களது குடும்பம் என்ற பெரிய வட்டம் ஜான் என்னும் ஒருவனது செயலால் எப்படி பாதிக்கப்படுகின்றது என்பதையும் நாவல் சொல்கிறது.

Booth குடும்பத்திலேயே அதிக பிரபலமடையாத இரண்டு நடிகர்கள், உச்சகட்ட புகழை அடைந்த இருவர், என எல்லோருமே ஷேக்ஸ்பியர் நாடகத்தில் நடித்தவர்கள். அதனால் Shakespearean Quotes நாவல் முழுவதும் வந்து, இது ஷேக்ஸ்பியர் பற்றிய கதையோ என்று மயங்க வைக்கிறது.

Historical Fiction இந்த நாவல். வெளிநாடுகளில் எழுதப்படும் வரலாற்று நாவல்களுக்கு வேண்டிய தகவல்கள் ஏராளமாகக் கிடைக்கிறது. அவற்றை ஆய்ந்து பார்க்க அவர்களுக்குப் பொறுமையும் இருக்கிறது. Edwin லிங்கனின் மூத்தமகனின் உயிரை விபத்தில் இருந்து காப்பாற்றியது போன்ற பல சிறுதகவல்கள் இந்த நாவலில் Fiction+ Facts என்பதன் இடையிலிருக்கும் கோட்டை கண்ணுக்குப் புலப்படாமல் செய்கின்றன. Edwin குறித்து, John குறித்து ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. இருவரது சகோதரியான Asiaவே தனித்தனி நூல்கள் எழுதி இருக்கிறார். ஆனால் இந்த நூல் Booth குடும்பத்தைப் பற்றிய கதை. அதில் வரும் John லிங்கனைக் கொன்றது ஒரு Event. நாவலின் பெரும்பகுதி இருவர் குறித்தும் அல்ல. Edwin லிங்கன் கொலைசெய்யப்பட்டு இருபத்தெட்டு வருடங்கள் கழித்து இறக்கிறார். ரசிகர்கள் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். Asia எழுதி வெளியிடாமல் வைத்திருந்த அவளது சகோதரன் John குறித்த நூல் லிங்கன் இறந்து ஐம்பது வருடங்கள் கழித்து பதிப்பிக்கப்படுகிறது.

” What’s past is prologue” – William Shakespeare.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s