Alan ஆங்கில எழுத்தாளர். நானூறு வருடங்களுக்கு மேல் இவரது குடும்பத்தினர் ஒரே இடத்தில் இருந்து வருகிறார்கள். சிறார் Fantasy எழுத்து மற்றும் Folkloreல் இருந்து கதைகள் எடுத்து எழுதியுள்ளார். இந்த புக்கர் நெடும்பட்டியலின் வயதான எழுத்தாளர் இவரே. வயது 87.
நாவலில் கற்பனை பாத்திரங்கள் உயிர் கொள்கிறார்கள். யமுனாவை நமக்கு நன்றாகத் தெரியும், ஏனென்றால் நாவலைப் படித்து அவள் குறித்த சித்திரத்தை நாமே வரைந்து கொண்டோம். மாறாக எழுத்தாளரின் கனவில் பல கதாபாத்திரங்கள் வந்து போனால், என்ன நடக்குமோ அதுவே இந்த நாவல். Alan ஒரு Dream worldஐ இந்த நாவலில் உருவாக்கியிருக்கிறார். ஆலிஸின் Wonderlandல் இருந்து மாறுபட்ட உலகம்.
Joe என்ற சிறுவனுக்கு ஏதோ ஒரு நோய், சூரியஒளியில் செல்லக்கூடாது, ஒரு கண் நன்றாகத் தெரியும், மற்ற கண்ணில் குறைபாடு, அவன் தனியாக இருக்கிறான், அவனைத் தேடி பழந்துணியும், எலும்பும் கேட்டு வருபவன், தன்னை நோயைக் குணப்படுத்துபவன் (Healer) என்று சொல்லிக் கொள்கிறான் என்று நாவல் ஆரம்பிக்கும் போதே நீங்கள், உங்களது Logical worldல் இருந்து நழுவி நாவலின் துளைக்குள் குதித்துவிட வேண்டும்.
Alanன் வாழ்க்கைக்கும் Joeவின் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறது. சிறுவயதில் பல நோய்களால் அசையாது தனிமையில் கழித்த Alanஐப் போலவே Joeவும் தனியன். Alan சிறுவயதில் கற்பனை செய்த தேவதைக் கதைகள் பலவற்றையும் தன் நூல்களில் கொண்டு வந்திருக்கிறார். இந்த நாவலில் தேவதை இல்லை ஆனால் Myth மற்றும் Folklore ஆகியவற்றின் கலவை சரிபங்கு.
சிறுவனாக இருந்த போது கிராமத்தில், Treacle Walker என்ற பெயரில் Healer ஒருவர் இருந்திருக்கிறார். பொறாமையைத் தவிர வேறு எந்த நோயையும் குணப்படுத்தக்கூடியவர். அந்த நினைவுகளை இத்தனை வருடங்களுக்குப் பிறகு எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். இதில் வரும் பல வார்த்தைகள் அகராதியில் இல்லாமல் தொலைந்து போன வார்த்தைகள். இந்த நாவல் ஒரு வட்டம், எங்கே முடிகிறதோ அங்கிருந்தே தொடங்குகிறது. ” What is out is in. what is in is out” என்று ஒரு கதாபாத்திரம் சொல்வதே இந்த நாவலில் ஒளிந்திருக்கும் மர்மமுடிச்சு.
நம்மை முழுதாக ஒப்புவித்தால் கைபிடித்து கூட்டிச்செல்லும் வகையைச் சேர்ந்த நாவல் இது. இந்த நாவல் குறித்து Alan ஒரு பேட்டியில் சொல்லியது:
“It’s not; I’ve not done anything except look in a different way at different states and put them into a story where time collapses, and the whole thing takes place in no time – or, rather, not in time as we see it.”