Burnet ஸ்காட்லாண்டைச் சேர்ந்த எழுத்தாளர்.
பல விருதுகளைப் பெற்றவர். இதற்கு முன் இவரது மற்றொரு நாவல் புக்கர் இறுதிப் பட்டியலுக்குள் வந்திருக்கிறது. இவருடைய நான்காவது நாவலான இது, இவ்வருட புக்கர் நெடும்பட்டியல் நூல்களில் ஒன்று.

True Crime என்பது ஒரு Genre. Ann Rule, அமெரிக்காவைக் கலக்கிய Serial Killer, Ted Bundy குறித்து எழுதிய The Stranger Beside Me போல் ஏராளமான நூல்கள் இந்த Genreல். எனக்குத் தெரிந்து, True Crime stories மட்டுமே வாசிக்கும், வாசகர்கள் இருக்கிறார்கள். Burnet வித்தியாசமான ஒரு Genreல் தொடர்ந்து எழுதுகிறார். அது False true crime.
உண்மையான குற்றக்கதைகள் போலவே எழுதப்பட்ட புனைவுக்கதைகள். இந்த நாவலும் அதே வகை தான்.

Psychotherapistக்கு Doctoral degree எதுவும் வேண்டியதில்லை. அவர்கள் Medical Councilன் கீழ் வருவதுமில்லை. இதை ஒரு Advantageஆக எடுத்துக் கொண்ட Fake therapist பற்றிய கதை இது. அறுபதுகளின் இங்கிலாந்து கதை நடக்கும் காலம். அவர் செய்வதற்கு Untherapy என்று பெயரிட்டுக் கொள்கிறார். அவரிடம் Counseling வந்து, தற்கொலை செய்து கொள்ளப்பட்ட பெண்ணின் தங்கை, அவரால் தூண்டப்பட்டே அக்கா தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டு, அதற்குரிய ஆதாரங்களைச் சேகரிக்க, அதே Therapistஇடம் அவளே ஒரு Patientஆகச் செல்கிறாள்.

Burnetன் இந்த நாவலுக்கும், T D ராமகிருஷ்ணனின் மாதா ஆப்பிரிக்காவிற்கும் இருக்கும் ஒற்றுமைகள்,
ஆரம்பத்தில் கதாசிரியரை ஒருவர் அழைத்து ஒரு கதையை எழுதச்சொல்லி Journalsஐக் கொடுப்பது, ஒரு புனைவுக் கதையை உண்மையாக்க அத்தனை தரவுகளையும் நாவலில் கொடுப்பது, உண்மையான மனிதர்கள் புனைவுக் கதாபாத்திரங்களுடன் கலந்து வருவது (இதில் Ronald David Laing, மாதா ஆப்பிரிக்காவில் இடிஅமீன்), நாவலில் வரும் இடங்களும், சம்பவங்களும் அவை உண்மை என்ற பிரமையை ஏற்படுத்தும் அளவிற்கான authenticity.

Alter ego இந்த நாவலில் முக்கியமானதொரு விஷயம். Split personality உரையாடல்கள் மற்றும் Alter ego, real selfஐ Dominate செய்வது, கடைசியில் இல்லாமல் செய்வது, Counseling Sessions என்று உண்மையும், புனைவும் ஒரே உருவத்தில் நடை பயில்கின்றன. இந்த நாவல் முழுக்கவே Mind game, ஒரு வகையில் இரு பாத்திரங்களுக்கிடையே, இன்னொரு வகையில் ஆசிரியருக்கும் வாசகரகளுக்கும் இடையே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s