ஆசிரியர் குறிப்பு:
திருவள்ளூரைச் சேர்ந்தவர். பொறியியல் இளங்கலை படித்து, ரயில்வே சிக்னல் துறையில் பணிசெய்பவர். இரண்டு நாவல்கள், ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆகியவை, ஏற்கனவே வந்த இவரது படைப்புகள். இந்த நூல் சமீபத்தில் வெளிவந்த இவரது மூன்றாவது நாவல்.
Games People Play என்ற Eric Berneன் புத்தகம் மனிதவளத்துறை மாணவர்களுக்குப் பரவலாகப் பரிந்துரை செய்யப்படுவது. அதற்கும் இந்த நூலுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அந்த நூலின் மையஇழையான மற்றவர்களுடனான உறவு (social interaction) என்பதை இன்றைய Online gaming சிறுவயதில் இருந்தே எப்படி சிதைத்தன என்ற சிந்தனையில் இருந்து முளைத்த நாவல் இது. Online games என்ற Conceptஐ பிரதானப்படுத்தி எழுதப்பட்ட முதல் தமிழ்நாவல் இதுவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.
Online Gamesல் பெரும்பான்மையானவை வன்முறையைத் தூண்டுபவை, நிறவெறி, சுயநலம் போன்ற Traitsஐ குழந்தைகள் மனதில் வளர்ப்பவை. ஒருநாளின் பெரும்பகுதியை Gameல் கழிப்பவர், தான் ஏதோ Relaxஆக இருந்ததாகவும், அடுத்த வாரத்திற்கான உழைப்பிற்குத் தயாராகி விட்டதாகவும் நினைக்கிறார், ஆனால் Games விளையாடியதால் உண்மையில் அவர் ஆழ்மனதில் Stress வண்டல் திட்டுகள் ஒன்றன் மேல் ஒன்றாய் படர்வது போல் சேர்கின்றது.
Ashwin Sanghiயும் Dan Brownம் கலந்த கலவை கண்ணன் ராமசாமி என்று சொல்லத் தோன்றுகிறது. மூன்று Threadகளில் இந்த நாவல் இயங்குகிறது. முதலாவதாக எரின் என்ற கருப்பினப்பெண் கார்டர் என்ற Games உருவாக்குபவருடன் இணைந்து, பலகாலம் நடக்கப்போகும் அசல் மனிதர்களைக் கொண்ட ஒரு Gameஐ உருவாக்குவது, இரண்டாவது சிரிவர்த்தனா, மானஸி என்ற ஆய்வாளர்கள் இலங்கையின் தற்போதைய நிலையை வைத்து ஒரு ஆய்வை நடத்த நினைப்பது, மூன்றாவது தனஞ்செயன் என்ற இலங்கை அகதி ஆஸ்திரேலியாவை விட்டு இலங்கைக்கு வர நினைப்பது. இந்த மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புரிய விஷயங்கள் என்பதை நாவல் போகப்போக நிறுவப் போகிறது.
இந்து மதம், பௌத்தம், இஸ்லாம், கிருத்துவம் ஆகிய நான்கு மதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் இலங்கையே கதைக்களம். ஹமார்ஸியா என்பது Missing the Mark என்ற பொருளில் வருவது. புத்தபிக்கு பிரதமரைக் கொல்வதை விட முக்கியமாகப் பார்க்க வேண்டியது, தூக்குத்தண்டனைக்கு இரண்டு நாட்கள் முன்பு அவர் கிருத்துவத்திற்கு மாறுவது. பணம், அந்தஸ்து போன்றவை தேவைப்படாதவர்களிடம், கிறிஸ்து உங்கள் எல்லாருடைய பாவத்திற்காகவும் உயிர் துறந்திருக்கிறார், கிருத்துவரானால் அந்த Benefitஐ Pass on செய்ய முடியும் என்று சொல்லி மதமாற்றம் செய்திருப்பார்களா!
எப்போது இந்த உலகத்தில் மதமற்ற மனிதர்களின் எண்ணிக்கை எப்போது அதிகரிக்குமோ, அப்போதே அமைதி நிலவும்.
மதங்கள், மதங்களுக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையேயான தொடர்பு, இனங்களுக்கிடையேயான மோதல், சமூக அரசியல் போன்றவை உள்ளிட்ட பல கருத்தியல்கள் இந்த நாவலில் பேசப்படுகின்றன. ஒரு கதையாக நேர்க்கோட்டில் செல்லாமல் நாவலின் கட்டமைப்பு அல்புனைவின் சாயலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. திரில்லர் நாவல்களில் ஒளிந்திருக்கும் மர்மத்தைத் தேடும் தன்மை, பொதுவாக அல்புனைவை வாசிக்காதவர்களுக்கும் சுவாரசியத்தைக் கூட்டப் பயன்படும்.
“There’s new enthusiasm among readers and publishers for fact, data, narrative, theory, and experiences.” இன்று Printல் வந்த Articleன் ஒரு வரி இது. உலக அளவில் புனைவில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் நடந்து வருகின்றன. Pulp fictionஐத் தவிர்த்து மற்றவற்றில் ஆய்வு செய்யாமல் எழுதவே பயப்படுவது மேலைநாடுகளில் பல வருடங்களாக இருந்து வருகிறது.பல உண்மைச் சம்பவங்கள், மனிதர்கள் இந்த நாவலில் புனைவில் கலந்து மறைந்திருக்கிறார்கள். கண்ணன் இந்த நாவலை எழுத மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும், அதில் இரண்டு மாதங்கள் எழுதுவதற்கும், மீதிக்காலம் தரவுகளைச் சேகரிக்கவும் செலவிட்டதாகக் கூறியிருக்கிறார். புதிதாக எழுத வரும் இளைஞர்கள் சரியான பாதையில் செல்வதைப் பார்க்கும் ஆனந்தமே அலாதி தான்.
பிரதிக்கு:
கடல் பதிப்பகம் 8680844408
விற்பனை உரிமை ரிதம் புக் 82488 03245
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2022
விலை ரூ.500.