ட்டி.டி. ராமகிருஷ்ணன்:

ரயில்வேயில் பணிபுரிந்து விருப்புஓய்வு பெற்றவர். தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் முதலாவதாக எழுதத் தொடங்கிய ராமகிருஷ்ணனின் ஆறு நாவல்கள் இதுவரை மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இது இவரது இரண்டாவது நாவல்.

குறிஞ்சிவேலன்:

தமிழ்நாடு அரசுப்பணியில் இருந்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ராமகிருஷ்ணனின் முந்தைய ஐந்துநாவல்களையும், தற்போது ஆறாவது நாவலையும் மொழிபெயர்த்து வருபவர்.

Da Vinci Code கதை, இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக ஒரு குழுவால் காப்பாற்றப்பட்டு வரும் ரகசியத்தைப் பற்றிய கதை. The Seventh Secret, ஹிட்லர் ஒரு வேளை தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் என்ற கற்பனையை முன்னோக்கி செலுத்திப் புனையப்பட்ட நாவல். ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா கற்பனையில் உதித்த, பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவனின் கதையில், நிஜ வரலாற்றைக் கலப்பது. டாவின்ஸி போலவே இதிலும் பல நூற்றாண்டுகளின் இரகசியம் பதினெட்டாம் கூட்டாளி குடும்பத்தால் வெளியே தெரியாமல் பாதுகாத்து வரப்படுகிறது.

ரேகா, பிந்து, ரஸ்மி என்ற மூன்று பெண்கள் Art of love making என்ற syllabusஐ நடத்த The School என்ற அமைப்பை உருவாக்கி பூலோக சொர்க்கம் இங்கே தான் என்கிறார்கள். சேவியர் இட்டிக்கோரா உடல்ரீதியாக முடியாததற்கு தீர்விற்கு இவர்களை அமெரிக்காவிலிருந்து மெயில் மூலம் அணுகுகிறான். அத்துடன் கேரளாவைச் சேர்ந்த அவனது மூதாதையரான ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவைப் பற்றித் தகவல் சேகரிக்கச் சொல்கிறான். இந்தப்பெண்களுக்கு அப்போது They are going to take the lid off என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கணிதவியல் இந்த நாவலில் நீக்கமற நிறைந்திருக்கிறது. பலநாடுகளில் பற்பல காலங்களில் வாழ்ந்த கணிதமேதைகள் (கேரளாவைச் சேர்ந்த பல கணிதமேதைகள் உட்பட) வரலாற்று உண்மை. அவர்கள் வாழ்க்கை நிஜம். அவர்களது கணிதவியல் சித்தாந்தங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளவை. இதில் இட்டிக்கோராவின் கணிதஞானத்தை இடையில் செருகியது
ராமகிருஷ்ணனின் சாமர்த்தியம். ஒரு மர்மத்தைக் கண்டுபிடிக்கப் போவதாக ஆரம்பிக்கும் நாவலில் ஏராளமான கணித மேதைகள், அவர்களது வாழ்க்கையும், பங்களிப்பும், சுருக்கமாக இருந்தாலும், சுவாரசியமாகக் கொண்டு செல்லத் தனித்திறமை வேண்டும்.

நாவல் உலகம் முழுவதும் பல்வேறு காலங்களில் பயணிக்கிறது. Hypatian School of thoughts, சதாம் ஹுசேன், ஈராக்கியப்போர்,
கணிதவியல், உலகப்புகழ்பெற்ற ஓவியர்கள், தீரா…..த்தீராக்காமம், மதநம்பிக்கைகள், Cult, sexual fantasies and perversions, கேரள கணிதமேதைகள் என்று ஏராளமான விஷயங்கள் அடங்கியது. புனைவின் சாயல் 10% என்றால் மிகுதி அல்புனைவு என்று சொல்லும் வடிவத்தில் எழுதப்பட்ட புனைவு. நாவலின் கட்டமைப்பு, மெயில்கள், பல குட்டிக் கதைகள், பலரது சரிதைகள், ஹேஷ்யங்கள், கணிதவியல் சித்தாந்தங்கள், இன்னபிறவற்றின் கலவை.

Cannibalism விளக்கமாக, எந்தவித பதட்டமுமின்றி, சமையற்குறிப்பு போல வருவது, நான் வாசித்தவரை இந்தியநாவல்களில் இதுவே முதன்முறை. ராமகிருஷ்ணனின் மற்ற நாவல்களில் வரும் மாயயதார்த்தம் இந்த நாவலிலும் அவ்வப்போது வருகிறது. குறிப்பாக பெண்களைத் திருமணத்திற்கு முன்பு கோராப்பாட்டனுக்கு விருந்தளிக்கும் சடங்கு.

மாதா ஆப்பிரிக்காவைப் போலவே இதிலும் எழுத்தாளர் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்.
கேரளாவில் மதவாதிகளின் எதிர்ப்பு இந்த நாவலுக்கு இருந்ததா, தெரியவில்லை. உண்மைகளின் நடுவே கற்பனையைக் கலந்து வாசகரை அன்னப்பறவையாக்கும் விளையாட்டு இந்த நாவலிலும் நடைபெறுகிறது. இந்த நாவல் Literary thriller வகைமையைச் சேர்ந்தது. யுத்திகளும், உள்ளடக்கமும் இதன் இலக்கிய அந்தஸ்தை கேள்வி கேட்காது ஒப்புக்கொள்ளச் செய்யும். குறிஞ்சிவேலன் நாவலின் ஆன்மாவை தமிழுக்குக் கூடுவிட்டு கூடு பாய வைத்திருக்கிறார். கீதாஞ்சலிகள் புக்கர் வாங்குவது மகிழ்ச்சியே, எப்போது மீராக்கள், ராமகிருஷ்ணன்கள் உலகவாசகர்களால் வாசிக்கப்படுவார்கள்?

பிரதிக்கு:

உயிர்மை பதிப்பகம் 9003218208
முதல்பதிப்பு 2012
விலை ரூ.275

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s