தஸ் ஸ்பேக் – சுஷில் குமார்:

எதற்காக ஜரதுஸ்த்ரா மலையிலிருந்து கீழே இறங்கினான்? அதிமனிதனைக் காண. அவனைக் கண்டானா? இல்லை. பாரபாஸ் செய்த குற்றம் என்ன? அவனுக்குப் பதிலாகத் தூக்கிலிடப்பட்டவன் புனிதன். முதலாவதில் அதிமனிதனைக் குறித்த கற்பிதம், இரண்டாவதில் கழிவிரக்கம். இரண்டையும் ஒரு அநாதைப் பெண்ணின் வாழ்க்கையில் அழகாக இணைத்திருக்கிறார் சுஷில்.

தஸ் ஸ்பேக்…

தலைமுறை – கார்த்திக் புகழேந்தி:

ஜாதி வெறி என்பது இரத்தத்தை விட அடர்த்தியானது என்பதைச் சொல்லும் கதை.
வேறு பலர் சொல்லி இருந்தால் பிரச்சாரக் கதையாகி இருக்கும் வாய்ப்பு அதிகம். ஒரு முதிய காதல் இயல்பாக வருகிறது. ஈமச்சடங்கின் அத்தனை முறைகளும் வருகின்றன. அடுத்த தலைமுறையில் ஒருவன் கிறிஸ்துவனாகிறான், இறந்தவர் பெரியார் கட்சி என்றாலும் சாதி சம்பிரதாயம் எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியதாகிறது. கடைசியில் சாதியே வெல்கிறது. ஆனால் இதற்குரிய எந்த வித அறிகுறியும் இல்லாமல் ஒரு அப்பாவித்தனத்துடன் கதை ஆரம்பிக்கிறது. எந்த விருதும் வழங்கப்படவில்லையென்றாலும் கார்த்திக் புகழேந்திக்கு இலக்கியத்தில் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.

தலைமுறை

நடையொரு – வைரவன் லெ.ரா:

நடையொரு வியாதியாகப் போகுமளவிற்கு ஒருவன் நடக்கிறான். நடப்பதைச் சுற்றிய எதிர்வினைகள், மற்றவர்களது பேச்சுக்களே இந்தக் கதையில் முக்கியமானவை. In the future, everyone will be world-famous for 15 minutes என்பது யோவான் விஷயத்தில் உண்மையாகிறது. குடும்பஉறவுகள் யோவானுடன் காட்டும் வேதிமாற்றமே வைரவனின் Touch. மற்றொரு எதிர்கால நம்பிக்கை.

நடையொரு…

தூரம் – கவிதைக்காரன் இளங்கோ:

தூரம் நீளமான கதை. பழனி புதிதாக முயற்சி செய்வதும், ஒரு அண்ணன் சரக்கு ரயிலை கடப்பதும் ஒன்றெனச் சொல்வது நோக்கமென்றாலும் நீளம். அபார பொறுமை உள்ளவர் வாசிக்கலாம்.

தூரம்

தடி – லட்சுமிஹர்:

பசித்த மானிடத்தில் கணேசன் என்ன சொன்னாலும் போலிஸ்காரர் அதை அருள்வாக்காக எடுத்துக் கொள்வார். இந்தக் கதையில் வயிற்றெரிச்சல் தீர பிரம்படி. எல்லாமே மாறினாலும் ஆன்மீகத்தைத் தேடிப் போவோர் மாற மாட்டார்கள். இரண்டு பாகமாக இருவர் தன்மையில் சொல்லும் கதை நன்றாக வந்திருக்கிறது.

https://www.yaavarum.com/%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf/

குணங்கெட்ட வியாதி – அகராதி:

கதை Flat ஆக முடிந்தது போல் இல்லை? ஆனாலும் சங்கரி ஒரு சுவாரசியமான கதாபாத்திரம், அவளுக்கு ஒரு சுவாரசியமான பிரச்சனை. இதை நான் 5’11 என்பதற்காகச் சொல்லவில்லை. அகராதியின் கதைகளில் Flow நன்றாக இருக்கிறது. கதைகளின் அழுத்தத்தைக் கூட்டத் தான் ஏதாவது செய்ய வேண்டும்.

https://www.yaavarum.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/

நல்ல பாம்பு – இளங்கோவன் முத்தையா:

கொத்தாத பாம்பு. ஆரம்பத்தில் இருந்த பரபரப்பு கதை பாதியைத் தாண்டியதும் குறைகிறது. சாதிச்சண்டையோ, அரசியல் சண்டையோ ஒன்றாக சேர்ந்து சுற்றியவரைப் பிரித்து விடும். கத்தியை எடுத்தவனுக்கு அதனாலேயே மரணம். வைரவேலுக்கு வயதாகி விட்டதால் நிதானம் வந்திருக்கிறது. நல்லமுறையில் சொல்லப்பட்ட கதை.

https://www.yaavarum.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

கதைசொல்லிகளுக்கு உதவாத ஒற்றைக்கதை- ஜீவ கரிகாலன் :

கரிகாலன் கதை வேகமாகப் பறக்கும் சிந்தனைச் சிதறல்களை குட்டிக்கதைகளுக்கும் குறைவாகச் சொல்லிப் பின்னர் இணைக்கும் முயற்சி. ஒரு சர்ரியல் Effect வந்திருக்கிறது. ஆனால் கரிகாலன் இதை விடப் பலமடங்கு சிறந்த சிறுகதைகளை எழுதும் திறமை பெற்றவர்.

https://www.yaavarum.com/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%92/

கறுப்பு – பாலைவன லாந்தர்:

கறுப்பு கதை பல கிளைப்பாதைகளில் பயணம் செய்கிறது. சாமியாடுவது, கட்டிடத்தைத் தூக்கி நிறுத்தும் தொழில்நுட்பம் இத்துடன் மதங்கள் தாண்டிய உறவினால் வரும் ஆணவப் படுகொலையும். பாலைவன லாந்தர் ஒரு கதையில் Focusஐ அதிகப்படுத்தினால் இவரால் நல்ல கதைகளை எழுதமுடியும

https://www.yaavarum.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

காந்தியை அறிதல் – ப.சுடலைமணி:

இவருடைய கதையை முதன்முறை வாசிக்கிறேன். நிச்சயம் நெல்லையில் தான் இவர் பிறந்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி படிக்கும் இரண்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களது வாழ்க்கை அழகாகக் கதையில் வருகிறது. வயதான பின், தனியாக நினைத்துச் சிரிக்கும் வகையில் எத்தனை முட்டாள்தனங்களை இந்தப் பருவத்தில் செய்கிறோம்!

https://www.yaavarum.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s