Margaret Atwood இதுவரை ஆறுமுறை புக்கர் பட்டியலில் வந்திருக்கிறார், இரண்டு முறை வென்றிருக்கிறார். சல்மான் ருஷ்டி ஐந்துமுறை பட்டியலில் இடம்பெற்று ஒருமுறை வென்றிருக்கிறார். நோபல் பரிசை வென்ற Kazuo Ishiguro நான்குமுறை புக்கர் பட்டியலில் இடம்பெற்று ஒருமுறை வென்றிருக்கிறார்.
Olga Tokarczuk போலந்தைச் சேர்ந்த எழுத்தாளர். நோபல் பரிசையும் புக்கர் பரிசையும் ஏற்கனவேயே வென்றவர். இவருடைய Magnum Opus ஆன The Books of Jacob இந்த ஆண்டு புக்கர் மற்றும் Women Fiction Award இரண்டிலும் இறுதிப் பட்டியலுக்கு வந்து பின் விருதை வெல்லவில்லை. நோபல் பரிசு விழாவில் பேசிய இவருடைய இந்த வரி மிக முக்கியமானது. ” I am pleased that literature has miraculously preserved its right to all sorts of eccentricities, phantasmagoria, provocation, parody and lunacy”. Olga வோ, Ishiguroவோ நான் கவனித்த வகையில் எந்த விருதுகளைப் பற்றியும் குறைவாகச் சொன்னதில்லை. பட்டியலில் இடம்பெற்று புக்கர் வெல்லாத மிகமிகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அப்பாடா டென்ஷன் முடிந்தது என்பது போலவே எதிர்வினை செய்திருக்கிறார்கள்.
இப்போது இந்தியாவின் அதிக பரிசுத்தொகை வழங்கும் விருதுக்கு வருவோம். விருது வழங்க ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் நிறைவாகி இருக்கின்றன. இதுவரை வென்றவர்கள்:
Jasmine Days. by Benyamin
The Far Field. by Madhuri Vijay.
Moustache. by S. Hareesh
Delhi: A Soliloquy. by M. Mukundan.
Joseph Cyril Bamford என்ற ஆங்கிலேயர் பெயரால் வழங்கப்படும் விருதில் வென்றதும், பட்டியலில் அதிகமாக வந்ததும் தென்னிந்திய எழுத்தாளர்கள். மேற்குறிப்பிட்ட நால்வருமே இந்தியா முழுவதும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். இந்தப் பரிசுத்தொகையான இருபத்தைந்து லட்சம் எல்லோருக்குமே Tempting ஆனால் அது ஒன்றே காரணமா?
அடுத்ததாகத் தேர்வுக்குழு. இலக்கியம் நன்கு தெரிந்தவர்கள், அரசியல் சார்பற்றவர்கள், பாரபட்சம் Nepotism பார்க்காதவர்கள் Juryகளாக இருக்கும் தேர்வுக்குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நூல்களை பத்து, பதினைந்து பிரதிகள் கேட்காமல் Soft copies ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். PDF Circulate ஆகாதவகையில் ஆவன செய்ய வேண்டும்.
கடைசியாக, Nominations. ஒவ்வொரு பரிசுப் போட்டியிலும் நான் தேடிப் பார்ப்பது, பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், சல்லியர் போன்றோரை. ஆனால் நகுலன், சகாதேவனைக் கூட அதில் பார்ப்பதற்கில்லை. முதன்முறையாக Zero Degree குறுநாவல் போட்டி பட்டியலில் பிரபல எழுத்தாளர் சு.வேணுகோபாலைப் பார்க்கிறேன். நல்ல முன்னெடுப்பு. உண்மையிலேயே Self confidence இருப்பவர்கள் தான் இதைச் செய்ய முடியும்.
விருது, இறுதிப் பட்டியலில் வருவதை வைத்தெல்லாம் எடைபோடும் நிலையில் இல்லாத பல எழுத்தாளர்களும் அடுத்த போட்டிகளில் முன்வர வேண்டும். தேர்வுக்குழு சு.வேணுகோபால் என்ற பெயருக்காகப் பார்க்காமல் ஒவ்வொரு பிரதியின் மதிப்பீட்டைப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும். சு.வேணுகோபால் என் மதிப்பில் இன்னும் உயர்ந்திருக்கிறார்.
அடுத்து கோட்டை தமிழ்முற்றம் விருதில் குறும்பட்டியலில் உள்ள நால்வரும் எல்லோருக்கும் அறிமுகமானவர்கள் என்பது மகிழ்ச்சி. பரிசுப்போட்டிகள், ஆரோக்கியமான போட்டிகளாக, எல்லோரும் கலந்து கொள்ளும் போட்டிகளாக மாறவேண்டும். எனக்கென்ன நன்மை? கடைசிப் பயனாளியாகிய வாசகன் நானே.