ஆசிரியர் குறிப்பு;
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் துணைப்பேராசிரியர். ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நினைவுத் தொகுப்பு ஆகியவற்றை இதற்கு முன் வெளியிட்டுள்ளார். இது உலகத்திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
ஒரு திரைப்படம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுவேறு எண்ணங்களை விளைவிப்பதைப் பார்த்திருக்கிறேன். கதைகளில் கூட ஆண் தன்மையில் சொல்லும் கதைகளைப் படிக்கும் ஆண்கள், பெண் செய்யும் துரோகங்களைத் தனக்கு இழைப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். அதை வாசிக்கும் பெண்கள் Neutral ஆக அந்தக் கதையை அணுக முடியும். இந்த நூல் திரைப்படங்களை ஒரு பெண் பார்க்கும் பார்வை.
இந்தியர்கள் எங்கு சென்றாலும் இந்திய. கலாச்சாரத்தை எடுத்து செல்கிறார்கள். உருவம், உடல்மொழி, வாழ்க்கைமுறை மாறினாலும் மனம் இந்தியத்தனத்தில் தோய்ந்திருக்கிறது. அமெரிக்கத் திரைப்படத்தில் ( Our Souls at night) இந்தியத்தனம் வெளிப்படுகிறதே என்று பார்த்தால் இயக்குனர் இந்தியர்.
45 years படக்கதை உலகமெங்கும் நடக்கும் விஷயம். எல்லா நீண்ட மணவாழ்க்கைக்கும் பின்னால், ஒன்று ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் என்று ஒளிந்திருக்கிறது. அது வெளிவரும் வரை யாவும் நலமே. Lunch Box கதை இதே பிரச்சனையை வேறொரு கோணத்தில் இருந்து பார்ப்பது.
Pink படத்தைப் பொறுத்தவரை எனக்கு மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. ஆண் நண்பர்களுடன் குடிப்பதற்குத் தனியான இடத்திற்குச் செல்பவர்கள் risk எடுத்துக் கொண்டே செல்கிறார்கள். Molest செய்வதை யாரும் எப்போதும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் 40கிமி வேகத்தில் சென்று எதிரே வேகமாக வந்த லாரியில் மோதியவரும், 120கிமி வேகத்தில் அதே லாரியில் மோதியவரும் ஒன்றல்ல என்ற புரிதல் நம் எல்லோருக்கும் வேண்டும்.
உலகப்படங்கள் மற்றும் இந்திப்படங்களைத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார். இதில் வரும் கதைக்களங்கள் நாம் ஏன் செக்குமாடு போலவே அதே இடத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்று ஆதங்கம் கொள்ள வைக்கின்றன. முன்பே சொன்னது போல் பெண்ணின் கண்ணாடி (பெண்ணியப் பார்வையல்ல) வழியே பல படங்கள் பார்க்கப்பட்டிருக்கின்றன. முழுக்கதையைச் சொல்வதைத் தவிர்க்கவும். ஜோஸபின் பாபா தொடர்ந்து எழுத வேண்டும்.
பிரதிக்கு :
ஜெ.இ.பதிப்பகம் 97896 14911
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ. 100.