ட்டி.டி. ராமகிருஷ்ணன்:

ரயில்வேயில் பணிபுரிந்து விருப்புஓய்வு பெற்றவர். தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் முதலாவதாக எழுதத் தொடங்கிய ராமகிருஷ்ணனின் ஆறு நாவல்கள் இதுவரை மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இது இவரது மூன்றாவது நாவல்.

குறிஞ்சிவேலன்:

தமிழ்நாடு அரசுப்பணியில் இருந்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ராமகிருஷ்ணனின் முந்தைய ஐந்துநாவல்களையும், தற்போது ஆறாவது நாவலையும் மொழிபெயர்த்து வருபவர்.

“One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared.” — Rajani Thiranagama.

ரஜனியின் வரலாற்றை திரைப்படமாக எடுக்க ஒரு குழு இலங்கை செல்கிறது. இலங்கை அரசாங்கம் தகுந்த ஒத்துழைப்பு தருவதில்லை. படத்தின் கதாசிரியருக்கு படம் எடுப்பதோடு அவருடைய பிரியத்துக்குரிய சுகந்தி என்ற முன்னால் விடுதலைப்புலியையும் சந்திக்க வேண்டும். Fantasyயும் Factsம் எங்கே கலந்தது, எது உண்மை எது கற்பனை என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் எழுதப்பட்ட நாவல் இது.

ரஜனி திரணகம ஒரு மருத்துவர். கல்லூரி விரிவுரையாளர். மனிதஉரிமை செயற்பாட்டாளர். பிரபாகரன் பிறந்த வருடமே பிறந்த இவர், இவரது அக்காவின் Influenceஆல் முதலில் புலிகளின் ஆதரவாளராக இருந்தவர். Sep 1989ல் கல்லூரி முடித்து வருகையில் சுட்டுக் கொல்லப்படுகிறார். கூகுள் செய்து பார்த்தால் விடுதலைப்புலிகள் கொன்றதாகத் தகவல் வருகிறது. இவரது கணவர் EPRLF கொன்றதாக பேட்டியளித்திருக்கிறார். ரஜனி விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களை மட்டும் கேள்வி கேட்கவில்லை. IPKF, Srilankan Army எல்லோரையுமே கேள்வி கேட்டிருக்கிறார், அவர்களால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்.
எல்லோரும் வெளிநாட்டிற்கு போய்க்கொண்டிருந்த சமயத்தில் பிரிட்டனில் நல்ல அங்கீகாரம் பெற்ற ரஜனி தாய்நாட்டிற்குத் திரும்பியது அவர் செய்த ஒரு தவறு. JVPயுடன் தொடர்புள்ள ஒருவரை மணம்புரிந்தது மற்றொரு தவறு.

பத்தாவது நூற்றாண்டில், ராஜராஜனின் முதல் போர் வெற்றியான காந்தளூர் சாலைப் போரின் போது காந்தளூர் ராணியில் ஒருத்தி பேரழகி தேவநாயகி. அவளை மணமுடிக்கவில்லை என்று வருந்திப் போனவன் சிங்கள அரசன் மகீந்தா. பின்னர் ராஜராஜனின் ராணியாக தஞ்சாவூர் வருகிறாள். திருவாரூர் அரண்மனையில், பெண் குழந்தையுடன் வாழ்ந்த தேவநாயகியின் குழந்தை சிங்களஒற்றர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்படுகிறது. பின்னர் மகீந்தனின் ராணியாகவும் இருக்க நேர்கிறது தேவநாயகிக்கு. இறக்குமுன் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் பூலோகத்தில் சுற்றுவேன் என்று சொன்னபடியே, சுகந்தி என்ற விடுதலைப்புலியாக வருகிறாள் தேவநாயகி. அதே அரக்கனாக மகீந்தா ராஜபக்ஷே.

வழமை போலவே ஏராளமான வரலாற்றுத் தகவல்களைத் திரட்டிப் புனைவுடன் கலந்திருக்கிறார் ராமகிருஷ்ணன். இலங்கை கதைக்களம் என்பதாலோ என்னவோ இதில் வரும் எல்லாப் பெண்களுமே பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். சீனஇந்திய அரசியல் குயுக்திகளால் ஒருசின்னதேசத்தில் ஒரு இனமே அழிக்கப்படுகிறது. ரஜனி கொலைவழக்கைச் சுற்றிய கதையாக இருந்த போதிலும், தமிழரல்லாத ஒருவரின் பார்வையில் ஈழப்போர் குறித்து வாசிப்பது வித்தியாசமான அனுபவம். கேரளாவில் வேறு யாரும் ஈழப்போர் குறித்து எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. எங்கே உண்மை எங்கே கற்பனை என்ற மயக்கத்தில் வாசகர்களை ஆழ்த்துவதில் ராமகிருஷ்ணனின் வெற்றி இருக்கிறது. ஆனால் புனைவு என்பதும் உண்மை என்பதும் வேறுவேறா என்ன? 2014ல் வெளியான இந்த நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது:
“மக்கள் இந்த ஆட்சியாளர்களின் யதார்த்த குணத்தை அடையாளம் கண்டு தெருவில் இறங்குகிறார்களா பார்ப்போம்.” Ghost voice என்று சொல்வார்கள், குறிஞ்சிவேலன் ஒவ்வொரு மொழிபெயர்ப்பிலும் அது பொய்யில்லை என்பதை நிரூபிக்கிறார்.

பிரதிக்கு :

பாரதி புத்தகாலயம் 044- 24332924
முதல்பதிப்பு 2019
விலை ரூ. 300.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s