Li சீனாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் பேராசிரியராகப் பணிபுரிபவர். A Public Space எனும் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள் முதலியவற்றை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவரது ஐந்தாவது நாவலான இது 20/9/2022 அன்று வெளியானது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான பிரஞ்சு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்கனைத் திருமணம் செய்து கொண்டு, பென்சில்வேனியாவின் ஒரு பண்ணையில், கணவன் வீட்டாரின் நகைப்புக்குள்ளாகும், குழந்தைகள் இல்லாத, வாத்துகளுடன் பொழுதைக் கழிக்கும் இருபத்தேழு வயதுப் பெண்ணுக்கு, அவன் அம்மாவிடமிருந்து வரும் கடிதத்தில், இவள் வயதுப்பெண் குழந்தை பிறப்பின் போது உயிரிழந்ததாகப் படித்ததும், தேனிக்கூட்டைக் கலைத்தது போல் இவளுக்குப் பெருகிவரும் நினைவுகளே இந்த நாவல்.

மிக நெருங்கிய உறவுகளில் ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துதல் தவிர்க்க இயலாததாகிறது. ஒரே கிராமத்தில் வித்தியாசமான குடும்ப சூழலில், வேறுவேறு குணாதிசயத்தில் வளரும் ஒரே வயதுப் பெண்கள் இருவரின் கதை இது. மற்றொருத்தியின் ஆதிக்கத்தை முழுவிருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளும் ஒருத்தி. அவளது Power, control, and manipulation இவளது வாழ்க்கையை மாற்றப்போகிறது.

முறையான பள்ளிக்கூடக்கல்வி இல்லாத ஒருத்தியின் கற்பனைகள் அவளது மிகநெருங்கிய நண்பி அந்தக் கற்பனைகளுக்கு எழுத்துவடிவம் கொடுத்து, அது பிரெஞ்சில் புத்தகமாக வெளிவந்து, பெருவரவேற்பைப் பெற்று, இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு எதிர்பார்ப்பு கூடுதலாகிறது. எழுதிய பெண்ணின் பெயர் மட்டுமே புத்தகத்தில் இருக்கவேண்டும் என்று தன் கற்பனையைச் சொன்ன பெண் வற்புறுத்தியதால் ஒரு Faux Child Prodigy உருவாகுகிறாள். அவளில்லாமல் இவளுக்கு எழுதுவது சாத்தியமில்லை, இவளைத் தவிர வேறு எவரிடமும் பகிர அவளுக்கு மனமில்லை.

Triangulation என்பது நாவலின் மிக நுட்பமான பகுதி. இரண்டு நெருங்கிய தோழிகளின் இடையே ஆரம்பத்தில் இருந்தே மூன்றாவதாக ஒருவர் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களைத் தோழிகள் சேர்த்துக் கொள்வதேயில்லை. ஆனால் கடைசியாக கற்பனையாக ஒரு மூன்றாம் நபரை ஒருத்தி உருவாக்க அதை மற்றொருத்தியும் ஏற்றுக்கொள்ள, அந்தக் கற்பனை வடிவம் ஆணாக இருப்பதால், என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடிக்கிறது.

Agnes and Fabienne இருவருமே இருதுருவங்கள். ஏதோ ஒன்று அவர்களை மிகவும் நெருங்க வைக்கிறது. Agnes எல்லோரிடமும் ஒத்துப்போகும் குணமும், Fabienne யாரிடமும் இசைந்து போகாத தன்மையும் உடையவர்கள். Agnes சாது. Fabienne Cruel. ஆனால் Fabienne அவளது குரூரத்தன்மையை Agnesஇடம் காட்டுவதேயில்லை. அவளை முட்டாள் என்று அழைப்பது கூட ஒரு பிரியத்தில். ஆனால் எல்லாமே மாறப்போகின்றன.

Li ஏற்கனவே தனது திறமையைப் பலமுறை நிரூபித்தவர். இந்த நாவலில் ஒரு Intense relationshipன் நெருக்கத்தை, அழுத்தத்தை வார்த்தைகளில் கூட்டிக்கொண்டே செல்கிறார். நாவலின் இறுதியில் நுட்பமான உளவியல் ஒளிந்திருக்கிறது. நாவலின் ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டு ஏன் என்ற கேள்வியின் பதிலைக் கடைசியில் சொல்கிறார். அற்புதமான நாவல் இது. தமிழில் நாவல்களத்தில் நாம் எங்கே நிற்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளவேனும் இது தமிழுக்கு வரவேண்டும். Master is back with a bang.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s