Rogue Banker -2
வங்கியின் P& L அக்கவுண்டை Debit செய்கையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பத்துரூபாய், இருபது ரூபாயெல்லாம் ஏமாற்றி வேலை போனவர்கள் உண்டு. சும்மா ஹாலில் இருக்கும் வாடிக்கையாளரை கேபினுக்குள் அழைத்து, உட்காருங்க காப்பி சாப்பிடலாம் என்று, அவருடன் தானும் சூடாகக் காப்பி சாப்பிட்டு விட்டு, Drinks supplied to Parties என்று கணக்கெழுதும் சாமர்த்தியசாலிகளும் உண்டு. ஆனால் இது அவர்களைப் பற்றிய பதிவல்ல.
Chairmanக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரியிடம் நான் பத்தாயிரம் ரூபாய் வங்கியின் செலவுக்கணக்கில் எழுத அனுமதி கேட்டபோது, அவருக்கேயுரிய பாணியில் “ஊட்டியில் பார்ட்டியா” என்று Sarcasticஆகக் கேட்டார். காரணத்தைச் சொன்னதும் எதிர்முனையில் அமைதி. போனைக் கட் செய்து விட்டாரோ என்று கூடத் தோன்றியது. கிட்டத்தட்ட முப்பது விநாடிகளுக்குப் பிறகு, ” நமக்கெல்லாம் குடும்பம் இருக்கிறது, வங்கி இந்த இழப்பை சமாளித்துக் கொள்ளும், பிரச்சனையானால் நம் குடும்பத்தை யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள். Board of Directorsகூட நமக்கெதிராகத் திரும்பி விடுவார்கள். பத்தாயிரத்திற்கு Permission கொடுக்கிறேன், ஆனால் காரணத்தை நீங்கள் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை” என்று சொல்லி வைத்து விட்டார்.
Demand Promissory Note, DPNன் காலம் மூன்று வருடம். அதன் பிறகு Revival letter வாங்க வேண்டும். அந்தக் கடன் கணக்கில் வாங்கவில்லை. வராக்கடன் என்று நீதிமன்றத்தில் கேஸ் கொடுத்து விட்டார்கள். வக்கீலின் பணி, வழக்குத் தொடுக்குமுன் ஆவணங்களைச் சரிபார்ப்பது. பார்க்கவில்லை. Trailல் இந்த கேஸ் நிற்காது.
Law of Limitation. அந்தக் கடன் கணக்கில் பத்தாயிரம் ரூபாய் கட்டப்பட்டது. Challanல் வாடிக்கையாளரின் கையெழுத்து அப்படியே போடப்பட்டது. இப்போது Law of Limitationபடி இன்னும் மூன்று ஆண்டுகள் உயிர்உண்டு. இந்த Challan நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. போனை எப்போதும் எடுக்காத வாடிக்கையாளர் வங்கியில் என்னைத் தேடி வந்தார். அடுத்த Board meetingல் இந்தக் கணக்குக்கு One time settlement ஆக இருபத்தைந்து லட்சரூபாயைக் கட்டி கணக்கை முடித்துக் கொண்டார்.
வங்கியில் இது எப்படி நடந்தது என்று தெரிந்தாலும் அழைத்து வெளிப்படையாகப் பாராட்ட மாட்டார்கள். பார்வையில் ஒரு பரிவு இருக்கும். சின்னத் தவறுகள் பொறுத்துக் கொள்ளப்படும். ஆனால் Inspection and Audit Department என்று ஒன்று உண்டு. வங்கி அலுவலர்களிலேயே மிகக்கீழானவர்கள் தான் அங்கே வேலை பார்ப்பார்கள். அவர்களை எந்தக் கிளைக்கு மேலாளராக அனுப்பினாலும் ஆறுமாதத்தில் அந்தக் கிளையை மூட வேண்டியது தான். அதில் ஒருவர், வங்கியைக் கூட்டிப் பெருக்கும் பெண்ணிடம், சென்ற ஆண்டு கிளை ஆண்டுவிழாக் கொண்டாட்டம் விமர்சையாக நடந்தது போல என்று விசாரித்ததற்கு அவர் இல்லை என்றிருக்கிறார். ஷெர்லாக் ஹோம்ஸ் ஆண்டுவிழா இல்லாமல் பத்தாயிரம் செலவானதை இரகசிய அறிக்கையாய் தலைமையகத்துக்கு அனுப்பியிருக்கிறார். அந்த பிரிவின் தலைவர் என்னிடம் Explanation கேட்டு இரகசிய ஓலையை அனுப்பினார். பின்னர் வங்கியின் தலைவர் தலையிட்டு அந்த விவகாரத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது.
“I don’t go looking for trouble. Trouble usually finds me.” -Harry Porter.
தாங்கள் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் ஒரு பகுதியா இந்த பதிவு?
LikeLike