Maddie 1996ல் பிறந்தவர். லண்டனில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். எழுத்தாளராகவும், திரைக்கதாசிரியராகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இவர், தனது முதல் நாவலிலேயே புக்கர் 2022 நெடும்பட்டியலில் இடம்பெறுகிறார்.
Maddie’s interview with Booker after her book is linglisted:
“It took me about two years, but I was relatively consistent with it, working on it most days, sometimes for a couple of hours, or for longer bursts when I could. The research I did was quite extensive. I’d sit on my bedroom floor with huge anatomy books open all around me, plotting pathways through systems, drawing literal diagrams and covering my bedroom walls with them. I was never very good at the sciences, but I needed to know exactly where I was in the body at any given time, to make sure the functioning of a particular organ was informing the metaphors or the language I was using. There were many drafts, but I do edit as I go along.”
Lia நாற்பதுகளில், கணவருடனும், பன்னிரண்டு வயது மகளுடனும் ஒரு Contented Lifeஐ வாழ்ந்து வருபவர். இவருக்கு ஏற்கனவே கான்சர் வந்து குணமாகி விட்டது.
அடுத்த குழந்தைக்கு முயன்றால் கான்சர் மறுபடியும் வருவதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும்………..
கான்சர் மறுபடி வந்து விடுகிறது. இம்முறை சர்வ வல்லமையோடு. இது ஒரு Coming of age at the end of life. The only thing worse than death is knowledge of it coming.
பல கதைசொல்லிகள் இருந்தால் பல கோணங்கள் கதையில் உருவாகும். ஆனால் நாவலாசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் வாசககவனம் சிதறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். Maddie அது குறித்து அதிகம் கவலைப்படவில்லை, பல கதைசொல்லிகள் இந்த நாவலில், அதில் ஒன்று கான்சர். கான்சர் omnipresentஆக,
impregnableஆக, Sarcasticஆக Liaவின் கணவர், குழந்தை, அம்மா, தோழி, பழைய காதலன் எல்லோருக்கும் பட்டப்பெயர் சொல்லி அழைத்து, நாவல் முழுதும் கதை சொல்கிறது.
கான்சர் பற்றி சொல்லும் கதைகள் எல்லாமே, நோய் வருவதற்கு முன், அதன் தாக்கங்கள், வலிகள், மருத்துவம் என்று பெரும்பாலும் முடிந்து விடும். முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் Lia தன் மகளின் வயதில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை யோசிக்கிறாள். Parallel ஆக அவளது மகள் Iris பதின்மவயதின் வாழ்க்கையின் சிக்கல், School bullying இத்துடன் அம்மாவின் நோயையும் எதிர்கொள்கிறாள். இருவரது பதின்பருவ வாழ்க்கையும் இடையிடையே விரிகிறது. Liaவுக்கும் அவளது அம்மா Anneக்கும் இடையே ஒரு ரகசியம் இன்னும் பேசப்படாமலேயே இருக்கிறது. இரண்டு தாய்-மகள் உறவுகள் வெவ்வேறு தளத்தில், வேறான சூழலில் அலசப்படுகின்றன. Liaவின் கணவன் Harryக்கும் ஒரு முதுநிலைக் கல்லூரி மாணவிக்கும் ஒரு நெருக்கம் உருவாகிறது. Hope you are not overwhelmed.
கவிதைகளும், வசன கவிதைகளும், உரைநடையும் கலந்த நாவல் இது. மையக்கதாபாத்திரம் Lia வார்த்தைகளின் காதலி என்பதால் பல வார்த்தைகளின் அர்த்தங்கள் நடுவில் வருகின்றன. Jumpcut narrative நாவலில் அதிக வாசககவனத்தைக் கோரும். பல இடங்களில் வார்த்தைகள் பிரிக்கப்பட்டு Intensityஐக் கூட்டுகின்றன
a break
a shatter
a squeze
a leak
and Lia was alone again.
Maddie அவரது அம்மாவை பத்து வருடங்களுக்கு முன் கான்சருக்குப் பறிகொடுத்தவர். நேரில் பார்த்த அனுபவங்களுடன், கான்சர் குறித்த ஆய்வும் சேர்ந்து இந்த நாவலை ஒரு பெண்ணின் உடல் முழுதும் பயணம் செய்ய வைக்கிறது. ஒரு இடத்தில் கான்சர் சொல்கிறது: ” நான் அதை மட்டுமே விரும்பினேன். அவளது அருகாமையை. அவளுடன் இருப்பதை. ஆனால் அவள் நான் அவளைக் கைப்பற்ற விட்டு விட்டாள்.” ஆரம்பிக்கையில் நான் என்று கதைசொல்லும் கான்சர் ஒருநேரத்தில் நாங்கள் என்று சொல்லத் தொடங்குகிறது.
மூன்று Threadகள் இந்த நாவலில் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு கதையைச் சொல்கின்றன. ஆரம்பத்தில் இவரே ஒரு கதாபாத்திரம் விவரிப்பதாகச் சொல்வது போல, Wuthering Heightsன் Influence , Lia- Mathew காதலில் இருக்கிறது. இருபத்தாறு வயது நிரம்பாத பெண்ணின் எழுத்தில் இருக்கும் முதிர்ச்சி வியக்க வைக்கிறது. (இவரது தாய், தாத்தா இருவருமே எழுத்தாளர்கள்) கதைசொல்லலில், Typographyயில் என்று பலவித பரிட்சார்த்த முயற்சிகளை எடுத்திருக்கிறார். கடைசி இருபது பக்கங்களை மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டு படிக்க நேர்கிறது. புக்கர் இறுதிப்பட்டியல் மட்டுமே படிப்பவர்களின் இழப்பு எவ்வளவு என்பதை இந்த நாவல் சொல்லும். Caution – This book is not an easy read.