ஆசிரியர் குறிப்பு:
கார்த்திக் புகழேந்தி,எழுத்தாளர், பத்திரிகையாளர்.நாட்டுப்புறவியல்,
நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரைத் தொகுப்புகளை இதுவரை வெளியிட்டுள்ளார்.
கார்த்திக்கின் கட்டுரை நூல்கள் ஆய்வை அடிப்படையாகக் கொண்டவை. இந்த நூல் இந்தி என்ற மொழியின் தோற்றம், உருதுவுக்கும் அதற்குமான பிணக்கு, காந்தியிலிருந்து பலரும் இந்தியை தேசிய மொழியாக்கச் செய்த முயற்சிகள் இவற்றுடன் ஆரம்பிக்கிறது.
2021 கணக்கின்படி 3372 மொழிகளைப் பேசும் தேசத்தில் இந்தி எப்படி நட்சத்திர அந்தஸ்து பெற்றது? முக்கியமான காரணம் ஒரு குஜராத்தியோ, பெங்காலியோ மற்ற மாநிலத்தவருடன் அவர்கள் தாய்மொழியில் பேசுவதில்லை, இந்தியிலேயே பேசுகிறார்கள். வேறுமொழியைத் திணிப்பது என்பது மாற்றுக் கலாச்சாரத்தைத் திணிப்பது. புழங்கும் மொழிகளை மெதுவாகக் கொலைசெய்வது.
ஐம்பது பக்கங்களே கொண்ட இந்த மீச்சிறு நூலில் பல தகவல்களைச் சேகரித்துத் தொகுத்திருக்கிறார் கார்த்திக். இந்தி மொழியின் வளர்ச்சிக்கு காங்கிரஸின் பங்கு இன்றியமையாதது. திராவிட கழகங்களின் கடும் எதிர்ப்புப் போராட்டங்களால் தமிழ்கொடி தாழப் பறக்காமல் இருக்கிறது.
ஒரு கட்டுரை நூலுக்கு என்னவிதமான உழைப்பு தேவைப்படுகிறது என்பதை இந்த நூலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கார்த்திக் அல்புனைவுகளையும் தொடர்ந்து எழுத வேண்டும். தமிழ் -Hebrew, Chinese, Latin, Greek ஆகிய மொழிகளின் வரிசையில் அமர வேண்டிய மொழி. நாம் மலையாளத்துடன் செம்மொழி வரிசையில் அமர்ந்து பெருமைப்படுகிறோம். வரலாறு பலமுறை நமக்கு பாடம் கற்பித்திருக்கிறது. நாம் தான் மறந்து விட்டோம்.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு ஜூலை 2022
விலை ரூ.40.