சிங்கத்தின் குகையில் – யுவன் சந்திரசேகர் :
Over description, மையக்கதைக்கு சம்பந்தமில்லாத பல விஷயங்கள் இடையில் வந்தும், கதை சுவாரசியமாக முடிவது யுவன் சந்திரசேகர் போல சில எழுத்தாளர்களின் கதையில் தான் நடக்கிறது. சொல்லப் போனால் இதில் கதையே இல்லை. ஒரு அனுபவமும், அதற்குள்ளாகவே வரும் இரண்டு அனுபவங்களுமே இந்த சிறுகதை.
எழுத்து வேறு, எழுத்தாளன் வேறு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிறவர்கள் எப்போதும் அடைவது ஏமாற்றம். சதக் சதக் என சதா குத்தும் ரத்தக்கதைகளை எழுதுபவரை நேரில் பார்த்தால் பிள்ளைப்பூச்சியாய் இருக்கலாம், எப்போதும் நூல் விடும் ஆண் கதாபாத்திரங்களை எழுதியவர், வலிய பெண்கள் வந்தாலும் மேலுக்கு முடியாதவராக இருக்கலாம். இந்தக்கதையில் பொதிந்திருப்பது அது தான். ஆனால் யுவன் பாணி எப்போதுமே அசோகவனத்தை முழுவதும் விளக்கிவிட்டு, சீதையை என்று சொல்லி இடைவெளி விட்டு நிறுத்திக் கண்டேன் என்று முடிப்பது. அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.