Leila, Oaklandல் பிறந்து வளர்ந்தவர். Oaklandல் ஏழுவருடங்கள் முன்பு, ஒரு காவல்துறை அதிகாரியின் தற்கொலைக் கடிதத்தில், Departmentல் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் எழுதியிருந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நடந்த விசாரணையின் முடிவில் Oakland City பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 19 மில்லியன் நஷ்டஈடு வழங்கியது. ஆனால் மன்னிப்போ, பொறுப்போ எடுத்துக் கொள்ளவில்லை. அதில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நாவல் அதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
Leila பதினான்கு வயதில் இருந்து இந்த கேஸைத் தொடர்ந்து கவனிக்கிறார், தகவல்கள் சேகரிக்கிறார். அவருடைய பதினேழு வயதில் எழுத ஆரம்பித்து பத்தொன்பதாவது வயதில் இந்த நாவலை வெளியிடுகிறார். வெளியானதுமே Oprah வின் புத்தகப் பரிந்துரையில் வருகிறது. பின்னர் புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்று, Leila புக்கர் வரலாற்றில் பட்டியலில் இடம்பெறும் மிகக்குறைந்த வயதுடைய எழுத்தாளர் ஆகிறார்.
Kiaraவின் அப்பாவை போலீஸ் இழுத்துச் சென்று விசாரித்ததில் (அவர் நிரபராதி) படுத்தபடுக்கையாக சிலநாள் இருந்து உயிர்விடுகிறார். அவரது இறப்பில் சித்தபிரமை பிடித்த, alcoholic ஆக மாறிய அம்மா, அஜாக்கிரதையினால் கடைசிக் குழந்தையின் மரணத்திற்குக் காரணமாகிறார். Kiaraவின் அண்ணன் பெரிய பாடகனாகும் கனவில் சம்பாத்தியமின்றி சுற்றுகிறான். Kiara சம்பாதித்து வீட்டு வாடகையைக் கட்டாவிடில் இருவரும் வெளியேற வேண்டியிருக்கும். அவள் பதினெட்டு வயதுக்குக் கீழ் என்பதால் யாரும் வேலை தரத் தயாராக இல்லை. இரவில் தற்செயலாக ஒருவனிடம் உறவு வைத்து இருநூறு டாலரை சம்பாதித்தவள் தொடர்ந்து அதில் ஈடுபடுகிறாள், காவல்துறையினர் குறுக்கிடும் வரை. காவல்துறையினர் அவளைக் கைதுசெய்வதில்லை, பணம் கொடுக்காமல் இன்பத்தை அனுபவிக்க இவள் போல் சிலரை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். ஒரு Police officer தற்கொலையில் எல்லாமே மாறப்போகிறது.
இம்முறை Woman Fiction Awardஐ வென்ற Ruth Ozekiயே Leilaவின் Mentor. நல்ல ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் இது என்பதை வாசிக்கையில் தெரியும். அதிகாரத்தைக் கையில் வைத்திருப்போரை யாரும் எதிர்த்து வெல்லமுடியாது என்பது காலதேச வர்த்தமானங்களால் மாறாத உண்மை. கறுப்பினத்தினருக்கு எதிரான Police brutalityயின் இன்னொரு வடிவம் இந்த நாவலில் வருவது. Leila வயதில் மட்டுமன்றி பலவிதங்களில் Kiaraவை ஒத்தவர், அதனால் Kiaraவின் குரல் சக்திவாய்ந்ததாக இந்த நாவலில் வந்திருக்கிறது. You can hear the cry of the physically and emotionally vulnerable black soul.