Annie 2022 நோபல் பரிசின் மூலம் உலகவாசகர்களின் கவனத்தைப் பெற்றவராகிறார். இந்த நூல் புக்கரின் 2019 இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற நூல். ஐம்பது ஆண்டுகாலம் இலக்கியத்தில், பாலின பேதம், வர்க்கபேதம் குறித்து எழுதியவர். தன்னைக் களமாகக் கொண்டு, படைப்புகளை தொல்பொருள் ஆய்வாக நடத்தி Auto fictionகளைப் படைத்தவர்.

இந்த நூலில் அவருடைய நினைவு தெரிந்த நாளில் இருந்து நாவல் ஆரம்பிக்கிறது. தன்னிலையில் கதை சொல்வதற்குப் பதிலாக படர்க்கையை உபயோகிக்கிறார். சுயசரிதைக் கூறுகள் உள்ள நாவல்களில்,
தன்னுடைய மனஅவசங்களைச் சொல்கையில் முழுக்கவே அவரது கருத்து, அதைத் தெரிவிப்பதே நோக்கமாதலால் தன்னிலை உபயோகப்படும். ஆனால் படர்க்கையை உபயோகிக்கையில் எழுத்தாளர் கதைசொல்லியிடமிருந்து முற்றாகப் பிரிந்து, வாசகரின் Judgementக்கு அவரை விட்டுவிடுகிறார்.

எட்டுவயதுப் பெண்ணிடம் பள்ளியில் எவரும் பேசுவதில்லை, மருத்துவமனையில் ஆண்டுப் பரிசோதனை செய்கையில், அவள் மலக்கறை படிந்த ஆண்களணியும் உள்ளாடையை அணிந்திருப்பதைப் பார்த்து மற்ற பெண் குழந்தைகள் நமட்டுச்சிரிப்பு சிரிக்கின்றனர். மதசமூகக் கட்டுப்பாடுகள் பெண்களை பல ஆண்டுகள் சுயஇன்பத்தில் ஆழ்த்துகின்றன. பதினேழு வயதுப் பெண்ணுக்கு Proper sex பாதுகாப்பில்லை எனவே Oral sex, sodomyயில் ஈடுபட வேண்டியதாகிறது. ஒருவகையில் அடக்கி ஒடுக்கப்பட்ட காமமே, உடைப்பெடுத்த ஏரியாக, பின்னாளில் இவர் படைப்புகளில் பெண்ணுடலின் பாலியல் வேட்கைகளைக் குறித்து எழுத வைத்திருக்க வேண்டும். நாற்பது வயதில் திருப்தியடையாத உறவுக்குப் பின் கணவன் உறங்கியதும், சுயஇன்பம் செய்து தூங்குகிறார். அறுபத்தாறு வயதிலும் மகனை விட வயது குறைவான ஒருவனுடன் சிலகாலம் உறவு ஏற்படுகிறது.

நாற்பதுகளின் பிற்பகுதியில், போர் முடிந்த பிரான்ஸில் குழந்தைகள் இறக்காத வீடே இல்லை. நெருக்கிய வீடுகளில் ஒரே அறையில், குழந்தைகள், பெற்றோர், சகோதரர், சகோதரிகள் படுத்துறங்குகிறார்கள். சானிடரி நாப்கின்னுக்குப் பதிலாக துண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டு, ஐஸ் தண்ணீரில் முக்கி இரத்தம் நீக்கப்படுகிறது, ஆண்கள் பகல்வெளிச்சத்தில் பலரும் பார்க்க சுவரில் மூத்திரம் பெய்கிறார்கள்.

பல புகைப்படங்களில் இருந்து பெண்ணின் கதை சொல்லப்படுகிறது. அத்துடன் பிரான்ஸின் அரசியல், சமூக, கலாச்சார மாற்றங்கள் அறுபது வருட காலகட்டத்தில் சொல்லப்படுகின்றன. அல்ஜீரியாவில் பிரான்ஸின் காலனி ஆதிக்கம் 1962ல் முடிவடைகிறது. நாற்பது வருடங்களில் Free sex, மக்களை, குறிப்பாகப் பெண்களை கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கிறது. இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர், அல்ஜீரியா உள்நாட்டுப் போர் என்று ஏராளமான போர்கள் இடையே வருகின்றன.

ரஷ்யக் காதலனில் இருந்து ஏராளமான காதலர்கள் இந்தப் பெண்ணின் வாழ்க்கையில். இரண்டு மகன்கள் அவர்கள் குடும்பத்துடன் பிரிந்து சென்ற போதும் காதலர்கள் வருவதும் போவதும் நிற்கவேயில்லை. கைப்பையில் எப்போதும் காண்டம் வைத்திருந்தாலும், எடுத்துக் கொடுப்பது நம்பிக்கையில்லாததனம் என்று பயப்பட வேண்டியதாகிறது. பின் எய்ட்ஸ்க்கான டெஸ்டில் Negative result வரும் வரை, உயிரைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டியதாகிறது. மதசமூகக் கட்டுப்பாட்டில் இருந்து காலம் மாறியும் நோயின் கட்டுப்பாட்டில் பாலியல் சுதந்திரம் என்பது எப்போதும் பூரணத்துவத்தை அடையாது போகிறது.

இந்த நாவல் நினைவுகளின் ஊடாக ஒரு பயணம். சிறிய நாவலில் ஏராளமான விஷயங்கள் வந்து போகின்றன. இவரே குறிப்பிட்டிருப்பது போல் 2070ல் என் பேத்தி இதைப்படித்து அவள் வாழ்க்கையுடன் ஒப்பிடட்டும் என்பதே இந்த நாவலின் நோக்கமாக இருக்கக்கூடும். Save something from the time where we will never be again. இன்னொரு வகையில் இது ஒரு காலப்பயணம். அறுபத்தாறு ஆண்டுகள் பிரான்ஸ் மட்டுமல்ல ஐரோப்பாவே நம்முடன் சேர்ந்து பயணிக்கிறது. பல Sectionகளாக இந்த நூலை எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் இடையேயான இடைவெளியில் Annieயின் Brilliance மறைந்திருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s