ஆசிரியர் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். பயணங்களில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது முழுநேர எழுத்தாளர். சமீபத்திய இந்த சிறுகதைத் தொகுப்புடன் சேர்த்து, இவரது பதினோரு நூல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

காயத்தில் மஞ்சனத்திப் பட்டைத்தூளை நல்லெண்ணெயில் கலந்து பூசுகிறார்கள்,
சாறைக் குடிக்கத் தருகிறார்கள், கள்வர் நொச்சி இலையின் மணம் காட்டி ஆடுகளைக் கூட்டத்தில் இருந்து தனித்து வரச்செய்து பின் திருடுகிறார்கள். “பாள வந்த பனயில தான் பயினி வரும். உடை நின்னா பனயில பாள வராது. ஒத்த கொட்டனா அது பெண் பனை, இரட்டைக் கொட்டனா அது ஆண் பனை.” இந்தத் தகவல்கள் மட்டுமல்ல இன்னும் ஏராளமான தகவல்கள் இரண்டு கதைகளில் (புலிக்குத்தி, பனங்காட்டு இசக்கி) இருக்கின்றன. இதுவே ராம்தங்கம் முழுஆளுகை செய்யும் களம். அதனாலேயே இந்த இரண்டுகதைகளும் நன்றாக வந்திருக்கின்றன. இது போன்ற கதைகளில் இவருக்கு போட்டியேயில்லை.

திருக்கார்த்தியல் தொகுப்பின் விசேஷமே அந்த விளிம்புநிலை சிறுவர்களின் உலகம் தான். சிறுவர் உலகத்தில் உள்ளேஉள்ளே சென்று எழுத ராம்தங்கத்தினால் இயல்பாக முடிகிறது. பஞ்சுமிட்டாய் கதையில் வரும் ஜீவாவும், வாசம் கதையின் ரமேஷும் பரிதாபத்துக்குரியவர்கள் என்பது மட்டுமல்ல, அவர்களது சிந்தனைகள், ஆசைகள், அபிலாஷைகள் என்று எல்லாமே எதிர்வீட்டில் நடப்பதைப் பார்த்து எழுதியது போல் அவ்வளவு Realistic ஆக இருக்கின்றன. குழந்தைகள் உலகத்தை இவ்வளவு தத்ரூபமாக வடிக்கும் இவரால் YA fictionஐ எளிதாக எழுதமுடியும்.

பஞ்சுமிட்டாயும், பால்ராஜ் அண்ணனும் யாவரும் இதழில் வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற கதை. ஏராளமான, கதைக்குத் தேவையில்லாத புறத்தகவல்கள் (சொல்லப் போனால் ராம் தங்கத்தின் பல கதைகளில் வருவது தான்) கதைக்கு ஒரு அழுத்தத்தைக் கடைசியில் கொடுக்கின்றன. ஜெயாவும், பால்ராஜ் அண்ணனும் வெறும் பால்ய சிநேகிதர்களா? கதைக்கு அது தேவையில்லை எனவே அது சொல்லப்படவில்லை, ஆனால் பால்ராஜ் அண்ணனுக்கு ஏன் ஜீவா மேல் தனிப்பரிவு என்பதற்கு அது உபயோகப்படுகிறது. ஜீவாவின் அம்மா பக்கத்து வீட்டுப்பெண்ணுக்காகத் தான் உயிரை விட்டாள் ஆனால் அக்கம் பக்கத்தினர் ஜீவா டிவி பார்ப்பது இடைஞ்சல் என்று அவனை அனுப்புவது, குறிப்பாகக் கதையின் முடிவு என்று பலவிதத்திலும் நேர்த்தியான கதையது.

கம்யூனிஸ்ட், சாதிவாக்கு, அடைக்கலாபுரத்தில் ஏசு போன்ற கதைகளில் கடைசி இரண்டில் மெல்லிய நையாண்டி இருந்தாலும் ராம் தங்கத்தின் Bench mark கதைகள் அதுவல்ல. யார் வேண்டுமானாலும் எளிதாக எழுதக்கூடியவை அவை. ராம் தங்கத்தின் பலம் வனத்திற்குள், கிராமத்திற்குள் பலரும் பார்க்காத விஷயங்கள் பலவற்றைக் கதைகளில் கொண்டு வருவது. அதைத் தான் தொடர வேண்டும். நாஞ்சில் மொழியில் கதைகள் வாசிக்க இனிமையாக இருக்கின்றன. ராம் தங்கம் இன்னும் பரவலான கவனத்தைப் பெற முற்றிலும் தகுதிவாய்ந்த எழுத்தாளர்.

பிரதிக்கு:

வம்சி புக்ஸ் 94458 70995
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 150.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s