தானச் சோறு- சரவணன் சந்திரன்:

Beautifully written story, உள்ளடக்கத்தினால் மட்டுமல்ல, மொழிநடையாலும் தான். பழனிமலையும் சித்தரும். ஆன்மீகத்தின் குரல் ஆண்டிப்பண்டாரத்தை கயிற்றைக் கட்டி இழுப்பது போல் இழுக்கிறது. காட்டியதுடன் அவரது வேலை முடிந்து விடுகிறது. தானச் சோறு கடவுளின் பிரசாதம். Fantasy சாயலில் ஒரு முடிவு. Perfect story.

சித்திரச் சபை – சுரேஷ் பிரதீப்:

சுரேஷ் பிரதீப் Is back. மீண்டும் வாசகர் இட்டு நிரப்பிக்கொள்ளும் இடைவெளியைக் கொண்டிருக்கும் நல்ல கதை. தீராத காமமும் எப்போதும் தயக்கமும் கொண்ட குணசேகர்.
சுரேஷ் பிரதீப்பின் தனித்துவமும், மொழிநடையும் கொண்ட கதை, ரசித்துப் படித்தேன். எல்லாமிருந்தும் எதுவுமில்லாதது போன்ற துயரம் நன்றாகப் பதிவாகி இருக்கிறது. ஆனால் இதில் கூட தேவையில்லாத தகவல் அந்த Group2 Pass.
கலெக்டர் ஆபிஸில் வேலைக்குச் சேர்ந்தால் Minimum தாசில்தார் வேலை. ACTO, Sub-registrarக்கு இணையான, மதிப்புமிக்க வேலை. வெறும் இன்ஜினியரிங் படித்தவனுக்கு இதை விட நல்ல வேலை என்ன கிடைக்கும்? அவன் அப்பா ஏன் பெரிதாக வருத்தப்படுகிறார்? இதுவே தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்வு என்று எழுதியிருந்தால் யாரும் கேள்வியே கேட்க முடியாதல்லவா?

கீறல் – கமலதேவி:

ஒரு வன்முறையைக் குழந்தை பார்ப்பதே கதை. அதற்குள் திடுக்குத்தண்ணி குடிப்பதில் இருந்து எத்தனையோ கிராமத்து வழக்கங்கள் வந்து சேர்கின்றன. பொழுது போகாது சுற்றித் திரியும் சிறுபெண்ணில் ஆரம்பிக்கும் கதை சட்டென்று ரத்தத்தைப் பார்க்கிறது. கடந்தகாலமும், நிகழ்காலமும் கலக்கும் பாணியில் இருந்து விலகி நேர்க்கோட்டில் முன்னகரும் கதை. கதை என்று சொல்வதை விட உணர்வு. பயஉணர்வை அழகாகப் படம்பிடித்திருக்கிறார் கமலதேவி.

ஆரஞர் உற்றன கண் – விஜயராவணன்:

விஜய ராவணனின் இந்தக்கதை தமிழில் வித்தியாசமான கதை. அரசியல் விமர்சனம், ஒரு சிறார் Fantasy story, அத்துடன் Colour blindness எல்லாவற்றையும் சரியாகக். கலந்து இந்தக் கதையை எழுதி இருக்கிறார். பாதிக்கப்பட்டவனின் கதையை ஒரு பெண்ணின் கோணத்தில் கேட்பது நல்ல யுத்தி. இரண்டு துயருற்ற உள்ளங்களின் பரஸ்பர ஆறுதல்.

தனபாக்கியத்தோட ரவ நேரம் – இராசேந்திர சோழன்:

ஜெயகாந்தனின் ஆரம்பகாலக் கதை போல இருக்கிறதே என்று பார்த்தால் கதையும் 1973ல் தான் வந்திருக்கிறது.

சிகை – வில்லியம் ஃபாக்னர் – தமிழில் கார்குழலி:

வாழ்க்கை விசித்திரமானது. யாருக்கு யாரை எதனால் பிடிக்கும் என்று யாருமே சொல்வதற்கில்லை. வாயையே திறக்காத, இறந்த காதலிக்காகக் இளமைக்காலம் முழுதும் உழைத்து அவர்கள் வீட்டுக்கடனை அடைப்பவனும், சிறுவயதிலேயே பல ஆண்களுடன் சுற்றும் பழக்கமும், சுதந்திர சிந்தனையும், Outspoken பெண்ணுக்கும் இடையே இருக்கும் பலவருடங்கள் இடைவெளியைப் பொருட்படுத்தாமல் இருக்கச் செய்தது எது? பணமில்லாத வயதான ஒருவனிடம் இளம்வயது சூசன் எதனைக் கண்டாள்? Devotion. பெண்களைத் தவறாகப் பேசும் ஆண்சமூகத்தின் நடுவே இவன் வித்தியாசமானவன். வழமை போலவே காரகுழலியின் நல்ல மொழிபெயர்ப்பு.

கிளாரா – ராபர்ட்டோ பொலான்யோ – தமிழில் கமலக்கண்ணன் :

கிளாரா ஒரு Obsession, ஒரு மறக்க முடியாத காதலி. அவனுடைய உணர்வுகளை வெளிப்படையாக அவன் சொல்வதேயில்லை. கதைசொல்லலும் ஒன்றிலிருந்து ஒன்றாக மாறிக் கொண்டே போகும் மொழிநடை. கிளாரா இவனுக்குக் கிடைத்திருந்தாலும் பெரிதாக மகிழ்ச்சி இருந்திருக்கப் போவதில்லை, இருவருக்கும் இடையே சண்டை தான் வந்திருக்கும். அடைய முடியாத பொருளின் மீதான ஆசை!
கமலக்கண்ணனின் நல்ல மொழிபெயர்ப்பு. இவரது இரண்டு நூல்கள் வெகுகாலமாக அலமாரியில் காத்திருக்கின்றன, இரண்டுமே ஆங்கிலத்தில் ஏற்கனவே வாசித்தவை. படிக்க வேண்டும்.

திறவுகோல் – ஐசக் பாஷவிஸ் சிங்கர். தமிழில் கோ.கு.குமார்:

பயமும், தனிமைப்படுத்திக் கொள்ளலும் கதையின் முக்கிய இழைகள். மனநிலை பாதிக்கப்பட்ட வயதான பெண்ணின் கோணத்திலேயே மொத்தக் கதையும் நகர்வதால், காண்பது எல்லாமே காட்சிப்பிழை. கடைசியாக நம்பிக்கை வரும் நேரத்தில்……. சிங்கரை வாசிப்பது ஆனந்தம். நல்ல மொழிபெயர்ப்பு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s