பாமுக் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். துருக்கிய எழுத்தாளர். பின்நவீனத்துவ புதினங்களை எழுதுபவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார். இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற
ஒரே துருக்கிய எழுத்தாளர். இது இவருடைய சமீபத்திய நாவல் ஐரோப்பாவில் 4Th October 2022ல் வெளியானது. இந்தியாவில் 17 அக்டோபரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னுரையிலிருந்து:

“When I began to research the events that took place on the island during the outbreak of plague in 1901, I realized that although an understanding of the subjective decisions taken by the protagonists of this brief and dramatic time could not be achieved by historical method alone, the art of the novel could help, and so I set out to bring the two together.”

இந்த நாவலை மினா எனும் வரலாற்று ஆசிரியர், இளவரசி அவள் சகோதரிக்கு எழுதிய 113 கடிதங்களின் தூண்டுதலால் எழுதியதாக முன்னுரையில் சொல்கிறார்.
முதல் வரியிலேயே இது வரலாற்று நாவல் அல்லது வரலாறு நாவல் வடிவத்தில் எழுதப்பட்டது என்று ஆரம்பிக்கிறார். உண்மையில் இந்த நாவல் ஒரு Historical Horror fiction. மினா, இளவரசி, கடிதங்கள் எல்லாமே கற்பனை ஆனால் அவர்கள் சொல்வது உண்மை அல்லது உண்மைக்கு மிக சமீபத்தில் இருக்கும் ஒன்று.

Ottaman Empireன் இறுதி ஆண்டுகள் கதையின் காலகட்டம். முதலாம் உலகப்போருக்கு முன் 1901ல் Ottaman Empireல் இருந்ததாகச் சொல்லப்படும் கற்பனைத்தீவு Mingheriaவில் ப்ளேக் நோய் பரவ ஆரம்பிக்கிறது. அதன் கவர்னர் எல்லாத் தலைவர்களையும் போல அது வதந்தி என்கிறார். சுல்தானால் தீவுக்கு அனுப்பப்பட்ட Head Chemist கொல்லப்படுகிறார். கொலை செய்தவரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு, சுல்தானின் அண்ணன் மகள் இளவரசி (கடிதங்களை எழுதியவள்) மற்றும் அவளது கணவரிடம் கொடுக்கப்படுகிறது. இப்போது இந்த நாவல்
பாதி Historical fiction மீதி Detective fiction என்றாகிறது.

Ottaman Empireல் தான் மெக்காவும் இருந்திருக்கிறது. கராச்சி, பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து காலராவை உலகெல்லாம் பரப்ப இந்தியமக்கள் வருகிறார்கள். பிரிட்டிஷ் டிராவல் கம்பெனிகள் வருவதற்கும் சேர்த்து டிக்கட் எடுத்தாலேயே போவதற்குக் கிடைக்கும் என நிபந்தனை விதிக்கின்றன. நிலத்தை, நகையை விற்று, பல கால சேமிப்பை உபயோகித்து வருபவர் அதில் அதிகம். அந்த சமயத்தில் போனவர்களில் பாதிக்குமேல் திரும்பவில்லை.

ப்ளேக் தீவில் வேகமாகப் பரவுகிறது. தீவின் மக்கள் தொகையில் சரிபாதி முஸ்லிம்கள். அவர்கள் முஸ்லிம் டாக்டரே வேண்டுமென்கிறார்கள். சிலர் Prayer sheet, amulets அவர்களைக் காப்பாற்றிவிடும் என்று நம்புகிறார்கள். தொற்று நோயில் இறந்தவர்களை அரசாங்கம் அடக்கம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
மருத்துவர்களும் நோயால் இறக்க ஆரம்பிக்கிறார்கள். பணக்காரர்கள் தீவை விட்டு வெளியேறத் துடிக்கிறார்கள். இதற்கிடையில் முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் எதிரெதிராகத் திருப்ப ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது.

சரியாக 120 வருடங்களுக்கு முந்தைய காலத்தில், இப்போதைய கொரானா தடுப்பு நடவடிக்கைகள் Paste செய்யப்படுகின்றன.
மத, இன அரசியலுடன் மக்களின் அறியாமை, quarantineக்கு எதிர்ப்பு ஆகியவை ப்ளேக்குக்கு எதிரான போராட்டத்தில் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தைக் காண முடியாது செய்கிறது. பல மரணங்களின் நடுவே நான்கு புதுமணத்தம்பதியர் காதலைப் பெருக்கக் கற்றுக் கொள்கிறார்கள். புதிய ஹீரோக்கள் உருவாகப் போகிறார்கள். தீவில் அரசாங்கம் மாறப்போகிறது. எப்போதும் போல மொழி வெவ்வேறு நிலைப்பாட்டில் இருப்பவர்களை ஒன்று சேர்க்கிறது.

எல்லா சாம்ராஜ்யங்களைப் போலவே Ottaman Empire தன்னுடைய ஆறு நூற்றாண்டுகள் ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியாவிலும் விஸ்தரித்து நின்ற தன் சகாப்தத்தை முதல் உலகப் போருக்குப் பின் 1922ல் முடித்துக் கொள்கிறது. லிபியாவைக் கைப்பற்ற இத்தாலி போர் தொடுத்தது தான் சரிவின் ஆரம்பம். ஆனால் நாவலின்படி Mingherian சுதந்திரமே முதல் சரிவு.

This novel is the power of imagination coupled with meticulous research on the subject. உண்மையும் புனைவும் ஒன்றை ஒன்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது நாவலில் உலா வருகின்றன. ஏற்கனவே நோபல் பரிசு உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுவிட்ட பாமுக், தன்னுடைய எழுபதாவது வயதில், 2022ல் புதிய மணவாழ்க்கையைத் தொடங்குகிறார். ஒவ்வொரு நூலில் அவர் செலுத்தும் சிரத்தையும் இலக்கியத்திலும் புதிதாகப் பயணம் மேற்கொள்பவர் போலவே தோன்றுகிறது. Snow போல் ஆரம்பநிலை வாசகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத எளிய முறையில் fairy tale போல், ஆனால் நுட்பத்துடன் எழுதப்பட்ட நாவல் இது. கிண்டிலில் 850 பக்கங்களுக்கு மேலுள்ள இந்த நாவலை திரில்லர் நாவல்கள் படிக்கும் வேகத்தில் வாசிக்க முடியாது. Sometimes in life, the longer the duration, more the pleasure.

One thought on “NIGHTS OF PLAGUE, by Orhan Pamuk. Translated from the Turkish by Ekin Oklap:

  1. Well written. For a writer each new work is a venture on unknown seas. He does a travel through various attributes. Fall of Ottaman Empire is an eternal pain inside the Pamuk. In the final pages of “Name of the Red” the fall is depicted as a Horror. An Era ends first with the Artists, writers, painters etc. In this latest experiment he testifies the History and human euphoria. Horror of mass history is blend with the art. Your writing make us all to read the novel immediately. Thank you Sir.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s