எலிஸபெத் அமெரிக்க எழுத்தாளர். Olive Kitteridge என்ற நாவலுக்குப் புலிட்சர் பரிசை வென்றதுடன், பல விருதுகளை வென்றவர்.
இது வரை ஒன்பது நாவல்களை எழுதியுள்ளார். இந்த நாவல் புக்கர் 2022 இறுதிப்பட்டியலில் வந்த ஆறு நாவல்களில் ஒன்று.

நாவல் கலை குறித்து எழுதப்பட்ட பல நூல்களிலும் Plot என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கண்டிப்பாகச் சொல்லப்பட்டிருக்கும். A Day with Mr. Jules நாவலின் Plot என்ன? இந்த நாவலும் கூட நினைவுகள் முன்னும் பின்னுமாக நகர்ந்து சொல்லப்படும் கதை. இரண்டுமே பெண்களால் எழுதப்பட்ட, பெண்ணின் கோணத்தில், பெரும்பாலும் நனவோடை யுத்தியில் நகரும் கதைகள்.

லூஸி மிகவும் வறுமையான சூழலில் இருந்து வந்தவள். அவளது கணவன் வில்லியம் பெரும் பணக்காரன். அவனுடைய தொடர் துரோகங்களால் (Extra marital relationships) அவனைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறிய அவள் மற்றும் இவர்களின் இரு பெண்கள் வில்லியமுடன் Regular touchல் இருக்கிறார்கள். வில்லியமின் மூன்றாவது மனைவி சொல்லாமல் கொள்ளாமல் அவனைப் பிரிந்து சென்றதும், லூஸி அவனுக்கு ஆறுதல் சொல்லச் செல்வதுடன் இருவரும் இணைந்து பயணம் செய்ய வேண்டியதாகிறது. நினைவுகள் ஈசல்கள் போல் பறக்கின்றன.

இங்கே நமக்கு அந்த அனுபவம் கிடைக்குமா என்று சொல்ல முடியவில்லை. கணிசமான காலம் கணவன் மனைவியாய் இருந்து, உடலை, உடைமையைப் பகிர்ந்து மனதை முழுமையாகப் பகிராதவர்கள், தங்களது முதுமையில், இருவரின் துணையும் இல்லாமல், எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல், பேசுகையில் அது எவ்வளவு சத்தியமானது.
” I am sorry, when you were in abroad, I cheated on you” என்று கூட கண்களைப் பார்த்து சொல்ல முடியுமில்லையா? It did no longer matter to anyone.

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சுற்றிலும் பார்த்து, நீங்கள் மட்டுமே அங்கு பொருந்தாததை உணர்கிறீர்கள், விமானப் பயணத்தில் உங்களுக்கும், குழந்தைகளுக்கும் Economy class ticket வாங்கி விட்டு, உங்கள் கணவரும் அவரது அம்மாவும் First classல் பயணம் செய்கிறார்கள், பிறந்த நாள் பரிசாக நீங்கள் கேட்ட புத்தகங்கள் கிடைக்காமல், அதைவிட பன்மடங்கு விலையுயர்ந்த புத்தம்புது Golf set கிடைக்கிறது, உங்கள் மாமியார் எல்லோருக்கும் உங்களை இப்படி அறிமுகப்படுத்துகிறார் “This is Lucy. She came from Nothing.”

நினைவுகள். நினைவுகளை ஓட விட்டு, வேடிக்கை பார்ப்பது போல் துயரத்தைக் கொடுப்பது வேறொன்றுமில்லை. “நாம் ஏன் அப்படி சொன்னோம்” ” நாம் ஏன் முட்டாள்தனமாக நடந்து கொண்டோம்” “நம்முடைய வாழ்க்கையில் பின்னே சென்று அந்த ஒருநாளை மட்டும் நம்மால் அழிக்க முடியுமென்றால்!”……………. நினைவுகளின் கூக்குரலுக்கு முன் தூக்க மாத்திரைகள் சக்தி இழப்பவை. இது சிறிய நூல். கிண்டிலில் 240 பக்கங்கள் வருவது. Trilogy யின் கடைசி நூல். சொல்லிய வரிகளின் இடைவெளியில் வாசகர் இட்டு நிரப்புவது சேர்த்தால் ஆயிரம் பக்கங்களைத் தாண்டக்கூடும். இருபது பக்கங்களுக்குள் என்னால் எளிதாக லூஸியாக மாறமுடிந்தது. I strongly recommend this book to all the women out there, it will open so many windows, if not doors.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s