மதி – கார்த்திகா முகுந்த்:

அடுத்த சிறுகதையாசிரியர் தயாராகி இருக்கிறார். தி.ஜாவின் கதைகளைப் படிக்கையில் ஏற்படும் பரவசம் இந்தக் கதையிலும் கிடைக்கிறது. சிறுவயதில் பார்த்த கோயில் அந்நியமாகிறது. ஊர் அந்நியமாகிறது. எனக்கும் வயதாகி விட்டது. ஆனால் உருவத்திலும், பிரியத்திலும் நீ எப்படி மதி அப்படியே இருக்கிறாய்!

அடையாளம் அற்றவனின் ஆடை – அமுதா ஆர்த்தி:

எது பிறழ்வு? எது சமநிலை? ஒருவேளை அவன் காவி உடுத்தியிருந்தால் அப்போது எல்லோருடைய பார்வைகளும் மாறிவிடும் அல்லவா? Judging a book by its cover என்பதைத் தாண்டி இந்தக் கதையைக் கொண்டு சென்றிருப்பது தான் அமுதா ஆர்த்தியின் வெற்றி.

ஒளி – ஐ.கிருத்திகா:

குழந்தைகள் உலகத்தை கிருஷ்ணன் நம்பி கதைகளில் கொண்டு வந்திருக்கிறார், புதுமைப்பித்தன் ,கு.அழகிரிசாமி, தி.ஜா போல பலரும் கதைகளில் வடித்திருக்கிறார்கள். ஒரு பெண், குழந்தைகள் உலகத்தைப் பற்றி சொல்கையில், அங்கு பெண்ணின் உடல் குறித்த பெண்குழந்தையின் ஆர்வமும், இரண்டு தலைமுறைப் பெண்களுக்கிடையேயான மனப்புழுக்கங்களும் கூடவே சேர்ந்து கொள்கின்றன. அத்துடன் இந்தக் கதை ஒரு நம்பிக்கையையும் கைபிடித்துத் தொடர்கிறது. கிருத்திகாவின் வழக்கமான, தெரிந்த விஷயங்களின் Indepth prose இதிலும் வருகிறது. பெண்கள் ஊர் என்ன சொல்லும், கதையின் அந்தப்பெண் நான் என்று நினைத்தால் என்ன செய்வது, பெண்களுக்கு கதையில் நியாயம் கிடைக்கச் செய்யவேண்டும் என்பது போன்ற அநியாயக் கவலைகளை விட்டு விட்டு எழுதினால் இது போன்ற நல்ல கதைகள் பல தமிழ் இலக்கியத்திற்குச் சேரும். இல்லை ஒரே அரிசிமாவை தேங்குழல், தட்டை, சீடை என்று வடிவை மாற்றி முதுபெரும் ஆண்எழுத்தாளர்கள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

கழுகு – ச.ஆதவன்:

கழுகு கதைசொல்லி. எதற்காக இந்தக் கதையை அது சொல்ல வேண்டும்? அது சொல்வதால் வரும் Limitatiins என்ன என்பது தான் இதில் முக்கியம். ச.ஆதவன் வளர்ந்து வரும் எழுத்தாளர். இது போன்ற வித்தியாசப்படுத்திக் காட்டும் கதைகளை எழுதாதிருப்பது அவருக்கு நன்மை பயக்கும்.

இரண்டு குறுங்கதைகள் – மிய்கோ கவாகாமி- தமிழில் ச.வின்சென்ட்:

கவாகாமி மிகத் திறமை வாய்ந்த பாப்புலர் எழுத்தாளர். இரண்டு குறுங்கதைகளுமே Flash fiction இலக்கணத்தைக் கச்சிதமாகப் பற்றிக் கொண்டு இருவேறு உணர்வுகளை மட்டும் சொல்லி முடிகின்றன. Granta magazineல் படித்ததாக நினைவு. மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு ச.வின்சென்டுடையது.

இதழ்பெறும் விவரங்களுக்கு Whatsapp number 90940 05600.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s