நன்றாகப் படித்தால் Seoulல் மேற்படிப்பு படிக்கலாம் என்று டிஃபானியின் அப்பா சொன்ன உறுதிமொழியைக் காப்பாற்றிவிட்டார். டிஃபானி ஏன் அத்தனை நாடுகளை விடுத்து தென்கொரியாவைத் தேர்ந்தெடுத்தாள்? அங்கே தான் அவளது கனவுக்காதலன் லீ இருக்கிறான். K-Pop பாடகன். அவனுக்காக இந்தியாவை விட்டுக் கிளம்புமுன்னே கொரிய மொழியைக் கற்று வைத்திருக்கிறாள். என்றாவது அவனைப் பார்க்கக்கூடுமோ? நேரில் பார்க்கையில் கனவுக்குமிழி போல் உடைவானோ? அவளுக்கு அதிக சிரமம் கொடுக்காமல் சியோலுக்குப் போன அடுத்த நாளே சந்திப்பு, அவன் காரில் பயணம், அலைபேசி எண்கள் பரிமாற்றம் என்ற கனவுப் பயணம் தொடர்கிறது. கனவுக்காதலனின் நிஜக்காதலி ஆகிறாள் டிஃபானி.
Romance stories படித்தே பல வருடங்கள் ஆகிப் போயின. Nicholas Sparks 120.மில்லியன் புத்தகங்களுக்கு மேல் விற்றபின்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். கற்றோரை விடவும்
pristine loveக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
இந்த நாவலை எழுதிய ஆதிரா அவரது டீன்ஏஜ்ஜில் இதை எழுதியிருக்கிறார். இது ஒரு Fan fiction நாவல். Fan fictionஐ இந்திய அளவில்,சுருக்கமாக amateur writing என்று சொல்லலாம். Fifty shades எழுதிய E.L.James, Cassandra Clare போன்றவர்கள் Fan fiction எழுதி அதிக புகழ் பெற்றவர்கள். இந்தியாவில் Alia Bhattஉடன் ஆன என் காதல் வாழ்க்கையைக் கதையாக எழுதினால் பல வழக்குகளைச் சந்திக்க நேரும். Anuja Chauhan எழுதிய The Zoya Factor ஒரு Fan fiction.
ஷாப்பிங் போகையில் டிஃபானி காணாமல் போவது, பாப் பாடகனைக் கவர சாக்ஸ் வாசிப்பது,Chan எனும் சீனப்பையனின் அறிமுகம், காதலின் பாதையில் தொடர்ந்து நடக்க preemptive முயற்சிகளை லீ எடுப்பது,
லீயுடன் நெருக்கமாகப் பேசும் பெண்ணைப் பார்த்துக் கலவரப்படுவது, மாற்றிமாற்றி Surprises கொடுத்துக் கொள்வது என்று Full romance story.
ஆதிரா இந்த நாவலுக்காக கொரிய மொழியை ஒரளவு பயின்றிருக்கிறார். கொரியன் வார்த்தைகள் இடையிடையே வந்து கதை நடப்பது கொரியாவில் என்று நினைவுறுத்திக் கொண்டே இருக்கின்றன. backend researchஐ நன்றாக செய்திருக்கிறார்.
அந்த இடங்களில் தான் இருக்கும் Feel வருவது வரை ஆய்வுசெய்து அதன்பின் எழுதியிருக்கிறார். மூன்று கதைசொல்லிகள் இந்த நாவலில், அவர்கள் ஒவ்வொருவர் கோணத்தில் கதை எப்படிப் போகும் என்று யோசித்திருக்கிறார். நான்காவது கதைசொல்லியை கதையில் ஒரு திருப்பத்திற்காக ஒரே ஒரு அத்தியாயத்திற்கு உபயோகித்திருக்கிறார். நடுவே பாண்டஸி குட்டிக் கதைகள் வருகின்றன. Poems வருகின்றன.
கடைசியில் ஒரு பரபரப்பான Climax என்று இவர் வயதிற்கு மேலாகவே இந்த நாவலுக்கு உழைத்திருக்கிறார்.